ரூ.5 கோடி மதிப்புள்ள கார் கடன்..! விளைவு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் + ஆஸ்பத்திரி செலவுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் காரை பார்க்கும் போதெல்லாம், நமக்கும் ஆசை ஆசையாக இருக்கும். அதிலும் என்றாவது ஒரு நாள் நண்பர்களின் காரை வாங்கியாவது ஒரு நாளாவது ஓட்ட வேண்டும் என்று.

 

அவ்வாறு கடன் வாங்கி கார் ஓட்டும் போது "கடன் வாங்கி ஓட்டுகிறோம்" என சின்ன வருத்தம் இருந்தாலும்... கிடைக்கும் அந்த சுகாணுபவ பரவசத்துக்கு அளவே இல்லை. அரியோ சம்போ.

அப்படி ஒருவர் சுகானுபவம் காணும் போது ஒரு 26 லட்சம் ரூபாய்மதிப்புள்ள பொருட்கலை போகிற போக்கில் நாசமாக்கி இருக்கிற்றார். பார்ப்போமா..?

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் கூட்டுக்குடித்தனம் செய்யப்போகும் 3 பொதுத்துறை வங்கிகள்

எங்கு நடந்தது

எங்கு நடந்தது

சமீப காலமாக தன் காலாட்படை வீரர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு கப்பற் படை மற்றும் விமானப் படை வீரர்களை அதிகரித்து வரும், நம் அண்டை தேசமான சிங் மங் சங் சீனாவில் 1513-ம் ஆண்டு கட்டப் பட்ட The Humble Administrator's Garden இருக்கும் Suzhou நகரத்தின் சாலைகளில் தான் இந்தக் கேலிக் கூத்து நடந்திருக்கிறது.

வித்தியாசம்

வித்தியாசம்

நம் ஊர் கிருஷ்ணன் குசேலன் கதை போல, சீனாவில் ஜின் (Jin), சாங் (Zhang) என இரண்டு நண்பர்கள். இவர்கள் கை கோர்த்தாலே இருவர் மனதிலும் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..." என பாடலே கேட்குமாம். அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். ஆனால் ஒரே ஒரு சின்ன பிரச்னை... இந்த இருவரில் ஜின் (Jin) ஏழை... சாங் (Zhang) பணக்காரன். சாதா பணக்காரன் அல்ல சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஃபெராரி கார் ஓட்டும் அளவுக்கு ஸ்பெஷல் பணக்காரன்.

சந்திப்பு
 

சந்திப்பு

சந்திப்பில் டீ, காபி, டிஃபன், மதிய உணவு, உணவுக்குப் பின் ஒரு சியர்ஸ் எல்லாம் முடிந்த பின் "மச்சி சாங் (Zhang, உன்னோட ஃபெராரி கார கொஞ்சம் நேரம் கொடு, சீனாவ ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வர்றேனே" எனக் கேட்டிருக்கிறார் உயிர் தோழர் ஜின் (Jin). ஃபெராரி என்னடா, ஆடி என்னடா அவசரமான உலகத்திலே... எடுத்துக்க என ஃபெராரி கார் சாவியை ஜின் (Jin)-ன்னிடம் கொடுத்திருக்கிறார்.

ஓட்டம்

ஓட்டம்

ஜின் (Jin)-ன்னிடம் கொடுத்த ஃபெராரி காரின் விலை சுமார் £ 5,60,000 பவுண்டு. இந்தியாவில் மதிப்பில் 4.96 கோடி ரூபாய். ஏறி உட்கார்ந்து ஒரு மிதி ஆக்ஸிலரேட்டரை மிதித்தால் வண்டி உறுமுகிறது. பின்ன 6000 சிசி கொண்ட இயந்திர அசுரன் ஃபெராரரியை மிதித்தால் உறுமாமல் என்ன ஊலையா விடும். அதே சிம்ம கர்ஜனையை ரசித்துக் கொண்டே, சீனாவின் வரலாற்று சிறப்புமிக்க Suzhou நகரத்தை ரொஉ ரவுண்டு வருகிறார் நம் ஜின்.

திரும்புவோம்

திரும்புவோம்

ஜாலியாக ஃபெராரியில் அதுவும் நண்பன் சாங் (Zhang)-ன் ஃபெராரியின் ரவுண்டு எல்லாம் முடிந்து விட்டது. நண்பன் கொடுத்த பணத்திலேயே பெட்ரோல் போட்டு விட்டு, சாங் (Zhang) வீட்டுக்கு வண்டியை விடும்போது தான் அந்த காமெடி கோர் விபத்து நடந்திருக்கிறது. அடித்த அடியில் அருகில் யாருமே வர முடியாத படிக்கு அடித்துவிட்டார் நம் ஜின் (Jin).

விபத்து

விபத்து

பெட்ரோல் போட்டு விட்டு, சாங்கின் வீட்டுக்குக்கு போகும் போது ஒரு நெடுஞ்சாலையில் தன் ஃபெராரிக்கே உரிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். திடீரென தன் ஃபெராரி வாகனத்த்ன் கட்டுப்பாடு இழந்து வலதும் இடதுமாக நிலையின்றி பறந்திருக்கிறது ஃபெராரி. நம் ஜின் சுதாரித்து ஃபெராரியை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குள்... அருகில் வந்த கருப்பு டொயோட்டாவை தூக்கி விட்டது.

பலத்த அடி

பலத்த அடி

அடி வாங்கிய கருப்பு டொயாட்டோ, தன் கட்டுப்பாடு இழந்து தன் இடப்பக்கம் நிறைய இரு சக்கர வாகனங்களை நிறுத்த இருந்த ஏரியாவுக்குள் புகுந்துவிட்டது. டொயோட்டா கார் ஓட்டுனர் சில பல காயங்களுடன் உயிர் தப்புகிறார்.டொயோட்டா ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அப்படியே நம் ஜின்னையும் வலைத்துப் பிடிக்கிறார்கள்.

என் கார் இல்லிங்க

என் கார் இல்லிங்க

ஜின்னை விசாரித்த அதிகாரிகள் மொத்த விஷயத்தையும் புரிந்து கொள்கிறார்கள். அதோடு டொயோட்டா கார் ஓட்டுநர் எந்த தவறும் செய்யவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்கிறார்கள். எனவே டொயோட்டா கார் ஏற்படுத்திய விபத்துக்கள் மற்றும் டொயோட்டா கார் ஓட்டுநருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் 30 லட்சம் ரூபாய்க்கும் ஜின்னே பொறுப்பேற்கச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு டொயோட்டா ஓட்டுநரின் மருத்துவச் செலவுகலையும் நம் ஜின்னின் தலையில் கட்டி இருக்கிறார்கள்.

வண்டிக்கு என்னாச்சு

வண்டிக்கு என்னாச்சு

ஜின் நடந்தவைகளை எல்லாம் சாங்கிடம் சொல்கிறார். சாங் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா..?
காருக்கு என்ன ஆச்சு..?
ஒரு டொயோட்டா காரைக் கூட புதிதாக வாங்கிக் கொடுத்துவிடலாம். ஆனால் ஒரு ஃபெராரி காரை சர்வீஸ் விட்டு எடுக்க முடியாது. ஆக என் காரின் முன் பக்கத்தில் (டொயோட்டா காரில் இடித்ததால் ஏற்பட்டது) பெண்டை எடுப்பதற்கும் இந்த 30 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும், நஷ்ட ஈடாக ஒரு 30 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் எனச் சொன்னாராம்.

60 லட்சம் செலவு

60 லட்சம் செலவு

ஜின் சிரித்த மேனிக்கு "சரி மச்சான், அப்புறம் பாக்கலாம், வீட்டுல பொண்டாட்டி தேடுவா" எனக் கிளம்பிவிட்டாராம். கடுப்பில் சாங் இன்னொரு ரவுண்ட் ஊத்தச் சொல்லி இருக்கிறார். இத்தனை நாள் கழிச்சு இவன பாத்ததுக்கு 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு, 30 லட்சம் ரூபாய் காருக்கு பெண்ட் எடுக்குற செலவு ச்சை என புலம்பிக் கொண்டே அந்த ரவுண்டை கடுப்பில் அடித்து முடித்திருக்கிறார்.

இனி இந்த பய கடனா ரப்பரைக் கேட்டாக் கூட தரக் கூடாதுய்யா, சின்ன வயசுல இருந்த மாதிரியே, இன்னமும் நமக்கு செலவு வெச்சிக்கிட்டே இருக்கான்..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ferrari பெராரி
English summary

friend crashed a 5 crore worth Ferrari car on a vehicle

The hapless driver, his way down a main road in the Suzhou City, china, when the collision happened, causing more than £30,000 worth of damage.
Story first published: Wednesday, May 22, 2019, 19:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X