கேலக்ஸியால் லாபமும் வருமானமும் உச்சம்.. கொண்டாட்டத்தில் சாம்சங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளித்து வரும் சாம்சங், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் 17 சதவீத அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த 2 வருடத்தில் காணாத உச்சம் எனவும் சாம்சங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

 

இந்நிறுவனத்தின் இந்த லாபம் மற்றும் வருமான உயர்விற்குக் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் அறிமுகமும் விற்பனையும் தான் முக்கியக் காரணம் எனவும் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது சாம்சங்.

சாம்சங்

சாம்சங்

கடந்த சில ஆண்டுகளாகப் பல சீன நிறுவனங்களின் புதிய போன்களின் அறிமுகத்தாலும், ஆப்பிள் நிறுவனத்துடனான கடுமையான போட்டியாலும் சர்வதேச சந்தை அளவில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்தது சாம்சங்.

இந்நிலையில் வர்த்தகத்தைச் சந்தையில் மீண்டும் தனது இடத்தைப் பதிக்கப் போட்டி மற்றும் இதர காரணிகளைக் கண்டுகொள்ளாமல் தனது தயாரிப்பு மற்றும் அறிமுகத்தில் கவனத்தைச் செலுத்தி புதிய கேலக்ஸி மாடல் போன்களைச் சந்தையில் அறிமுகம் செய்தது.

 

வெற்றி

வெற்றி

இந்தியா, சீனா, கொரியா என உலகில் அனைத்து முக்கியச் சந்தைகளிலும் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி மாடல் போன்களை அறிமுகம் செய்தி இழந்த சந்தையை மீண்டும் பிடித்து வர்த்தக நிலையை மேம்படுத்தியுள்ளது.

17 சதவீத உயர்வு
 

17 சதவீத உயர்வு

2016ஆம் நிதியாண்டில் சாம்சங் நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 2 வருடத்தில் இந்நிறுவனம் காணாத அளவிடு என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானம்

வருமானம்

தென்கெரியாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்தச் சாம்சங் நிறுவனம் ஏப்ரல்-ஜூன் வரையிலான காலத்தில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 8.1 டிரில்லியன் வான் ஆதாவது 7 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது சாம்சங். கடந்த நிதியாண்டில் இதன் அளவு 6.9 டிரில்லியன் டாலர்.

சந்தைக் கணிப்புகளின் படி இதன் அளவு 7.4 டிரில்லியன் வான ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விற்பனை

விற்பனை

இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை 3 சதவீதம் உயர்ந்து 50 டிரில்லியன் வான் ஆக உயர்ந்துள்ளது.

கேலக்ஸி

கேலக்ஸி

இந்நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்7 மற்ரும் எஸ்7 எட்ஜ் தயாரிப்பு மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்றது. இந்நிறுவனத்தின் சந்தை கணிப்புகளைத் தாண்டிய வருமானத்திற்கு இதுவே முக்கியக் காரணமாக அமைந்தது.

பங்குகள்

பங்குகள்

சாம்சங் நிறுவனத்தின் பங்குகளின் விலை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Galaxy phones drive 17 percent jump in Samsung's 2Q profit

Samsung Electronics said Thursday that its second-quarter operating income jumped 17 percent over a year earlier to the highest quarterly profit in more than in the last two years, as strong sales of its Galaxy smartphones drove profit growth in the mobile business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X