அதிர வைக்கும் சுந்தர் பிச்சையின் 2016-ம் ஆண்டு வருமானம்..!

சுந்தர் பிச்சை சென்ற ஆண்டு 650,000 டாலர்கள் சம்பளமாகப் பெற்றுள்ளார். இது 2015-ம் ஆண்டு இவர் வாங்கிய 652,500 டாலர்களை விடச் சற்று தான் அதிகம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தின் மதுரையில் பிறந்து உலகின் மிகப் பெரிய இணையதளத் தேடல் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் 44 வயது ஆன சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டினை விட 2016-ம் ஆண்டு இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் பெற்றுள்ளார்.

சுந்தர் பிச்சை சென்ற ஆண்டு 650,000 டாலர்கள் சம்பளமாகப் பெற்றுள்ளார். இது 2015-ம் ஆண்டு இவர் வாங்கிய 652,500 டாலர்களை விடச் சற்று தான் அதிகம், இது எப்படி இரண்டு மடங்கு உயர்வு என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. வாங்க அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

பங்குகள்

பங்குகள்

சம்பளம் சற்று உயர்ந்து இருந்தாலும் நீண்ட காலமாகக் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு 99.8 மில்லியன் டாலர்கள் பதிப்புடைய பங்குகளைப் பெற்றார். இதுவே 2016-ம் ஆண்டு 198.7 மில்லியன் டாலர்கள் பங்குகளைப் பெற்றுள்ளார்.

பல வெற்றிகரமான தயாரிப்புகள்

பல வெற்றிகரமான தயாரிப்புகள்

கூகுள் நிறுவனம் சென்ற ஆண்டுப் பல வெற்றிகரமான தயாரிப்புகளை வெளியிட்டுச் சாதனை படைத்தது, அது இந்த ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் கூகுள் சுந்தர் பிச்சைக்குப் பெறும் சம்பளத்தை அளித்துள்ளது.

லாரி பேஜ்

லாரி பேஜ்

லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனம் மற்றும் முன்னால் தலைமை செயல் அதிகாரியான இவர் ஆல்ப்பாபெட் அம்பெரல்லா நிறுவனத்தின் புதிய வணிகங்களைக் கண்காணிக்க இருக்கின்றார்.

செயல்படும் வணிகங்கள்

செயல்படும் வணிகங்கள்

சுந்தர் பிச்சையின் தலைமையில் கூகுள் நிறுவனம் விளம்பரம் மற்றும் யூடியூப் வணிகத்தில் விற்பனை அதிகரித்தும், மெஷின் லர்னிங், வன்பொருள் மற்றும் கிளவுட் கம்யூட்டிங் போன்றவற்றிலும் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது.

புதிய வன்பொருட்கள்

புதிய வன்பொருட்கள்

2016-ம் ஆண்டுக் கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன், விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ரவுட்டர், மற்றும் குரல் கட்டுப்பாட்டில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்றவற்றை வெளியிட்டது. இந்த முயற்சியின் துவக்கத்தால் தான் அதிகச் சம்பளம் சுந்தர் பிச்சை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பிற வருவாய்கள்

பிற வருவாய்கள்

கூகுள் நிறுவனம் வன்பொருள் உற்பத்தி, கிளவுட் சேவைகள் மூலமாக மட்டும் 3.1 பில்லியன் டாலர்கள் பெற்றதாக அன்மையில் வெளிவந்த காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, இந்தக் காலகட்டத்தில் சென்ற ஆண்டு வந்த லாபத்தை விட இது 50 சதவீதம் அதிகம் என்று கூரப்படுகின்றது.

ஆல்பபெட் பங்குகள்

ஆல்பபெட் பங்குகள்

ஆல்பபெட் நிறுவனத்தின் பங்குகள் முதன் முறையாக 600 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து பெறும் உயரத்தை எட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google CEO Sundar Pichai received nearly US 200 million dollar salary last year

Google CEO Sundar Pichai received nearly US 200 million dollar salary last year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X