கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாஃபெட் நிறுவனத்தின் லாபம் 18.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய டெக் நிறுவனமான இது, கூகுள் சர்ச், விளம்பர் சந்தை, யூடியூப் வீடியோ தளம் போன்ற பல சேவைகளை வழங்கி வருகின்றது.
இதன் மூலம் நல்ல வருவாயினையும் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல் பயன்பாடானது அதிகரித்துள்ளது. குறிப்பாக மக்களின் இணைய பயன்பாடு என்பது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்ட இது காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளது.
வருவாய் அதிகரிப்பு ஏன்?
இது குறித்து இந்த டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சமீபத்தில் முடிவடைந்த காலாண்டில் ஆல்பாஃபெட் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 65.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 41% அதிகரித்துள்ளது.
களைகட்டிய விளம்பர வருமானம்
இது கொரோனாவுக்கு மத்தியில் அதன் ஆன்லைன் விளம்பரம் மற்றும் கிளவுட் சேவைகள் மிக நன்றாக இருந்த நிலையில், நிறுவனம் நல்ல வருவாயினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவில் செய்த முதலீடுகள், நல்ல வருவாய்க்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
எந்த சேவை மூலம் எவ்வளவு வருவாய்?
கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் வீடியோ சேவை மூலம் விற்பனையானது 7.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 5 பில்லியன் டாலராக இருந்ததாக ஆல்பாஃபெட் கூறியுள்ளது.
இதேபோல ரிமோட் கம்ப்யூட்டிங் வணிகமானது கிட்டதட்ட 5 பில்லியன் டாலர் வருவாயினை கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 45% அதிகமாகும்.
விளம்பர வருவாயில் ஆதிக்கம்
இது eMarketer அறிக்கையின் படி, கூகுள் நிறுவனம் சர்வதேச அளவிலான டிஜிட்டல் விளம்பர சந்தையில், 2021ம் ஆண்டில் 28.6% பங்கினை வைத்துள்ளது. இதே பேஸ்புக் நிறுவனம் 23.7% ஆக உள்ளது.
கட்டுப்பாட்டாளர்களிடம் இருந்து பல ஆய்வுகளை எதிர்கொண்டதால், ஆல்பாஃபெட்டின் வருவாயானது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்கு மத்தியிலும் பேஸ்புக் லாபம்
இதே போல போட்டி நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் பயனாளிகள், சமூக நலனைவிட லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு ஃபேஸ்புக் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தும் ஃபேஸ்புக் கசிவுகளுக்குப் பின்னே விசில்ப்ளோயராக, (Whistleblower), பிரான்சிஸ் ஹாகன் (Frances Haugen) எனும் பெண் ஃபேஸ்புக்கில் பணியாற்றிய காலத்தில், திரட்டிய ரகசிய கோப்புகள் மூலம் அந்த நிறுவனத்தின் மோசமான வர்த்தக நோக்கத்தை வெளிப்படுத்தினார். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனத்தின் லாபம்
ஆனால் இப்படி பரபரப்பான நிலைக்கு மத்தியிலும் கூட மிகபெரிய அளவில் நல்ல லாபத்தினை கண்டுள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 17% அதிகரித்து, 9.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல பயனர்களின் எண்ணிக்கையானது 2.91 பில்லியனாக அதிகரித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் லாபம் எவ்வளவு?
மற்றொரு டெக் ஜாம்பவான் ஆன மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சமீபத்திய காலாண்டில் லாபம் 20.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் வருவாய் விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் 22% அதிகரித்து, 43.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கிளவுட் கம்ப்யூட்டிங் தேவையானது அதிகரித்த நிலையில் இந்தளவுக்கு வருவாயினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்படி கொரோனாவுக்கு மத்தியிலும் சமூக வலைதள நிறுவனங்கள் நல்ல லாபத்தினை கண்டுள்ளன.
ட்விட்டர் நிலவரம் என்ன?
மற்றோரு சமுக வலைதள நிறுவனமான ட்விட்டர் கடந்த காலண்டில் 537 மில்லியன் டாலர் நஷ்டத்தினை பதிவு செய்துள்ளது. ரஷ்யாவில் ட்விட்டர் நிறுவனம் மீதான சர்ச்சைக்கு மத்தியிலும், இந்த நிறுவனம் வலுவான விளம்பர விற்பனையினை கண்டது. எனினும் செயல்பாட்டு இழப்பாக 743 மில்லியன் டாலர் இழப்பினை கண்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications