எங்கும் நிதியுதவி கிடைக்கல.. 'ஐஎம்எப்' தவணையைச் செலுத்தத் தவறியது 'கிரீஸ்'!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதென்ஸ்: சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் அமைப்பிற்குக் கிரீஸ் அளிக்க வேண்டிய 1.6 பில்லியன் யூரோ தவணை தொகையை நிதியுதவி பெறாத காரணத்தினால் செலுத்த தவறியுள்ளது.

 

தற்போது கிரீஸ் நாட்டு அமைச்சர்கள், ஐஎம்எப் அமைப்பின் கடன் தொகையைச் செலுத்தக் கூடுதலாக 2 ஆண்டுகள் கால நீட்டிப்பு கோரி இவ்வமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

 கிரீஸ் தான் முதல் நாடு

கிரீஸ் தான் முதல் நாடு

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்குக் கிரீஸ் ஐஎம்எப் தவணையைச் செலுத்தத் தவறியுள்ளதாகச் செய்திகள் அதிகராப்பூர்வமாக வெளியானது.

மேலும் ஐஎம்எப் அமைப்பிடம் கடன் பெற்றுத் தவணைத் தொகையைச் செலுத்த தவறிய முதல் வளர்ந்த நாடு கிரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 2001ஆம் ஆண்டு ஜிம்பாப்வே இத்தகைய நிலையை சந்தித்தது குறிப்பிடதக்கது.

ஐஎம்எப்

ஐஎம்எப்

இதுகுறித்து ஐஎம்எப் அமைப்பின் உயர் அதிகாரி ரைஸ் கூறுகையில், "தவணை தொகையைச் செலுத்த மேலும் 2 ஆண்டுக் கால நீட்டிப்பை கிரீஸ் கோரியுள்ளதாகவும், இக்கோரிக்கை அமைப்பின் முன்னணியில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய சென்டரல் வங்கி

ஐரோப்பிய சென்டரல் வங்கி

கிரீஸ் வங்கிகள் பணப் புழக்க கணக்கையும் ஐரோப்பிய சென்டரல் வங்கி முடக்கியுள்ளது, இதனால் வங்கிகள் கூடதல் நிதியையும் பெற முடியாத நிலையில் உள்ளது.

ஐரோப்பிய கமிஷன்
 

ஐரோப்பிய கமிஷன்

இந்நாட்டின் நிதிநிலையைத் தீர்க்க ஏதென்ஸ், மக்களுக்கும் அளிக்கப்படும் பொதுநல நிதிகளைக் குறைத்தும், வரிகளை உயர்த்துவது தவிர வேறு வழியே இல்லை என ஐஎம்எப், ஐரோப்பிய சென்ரல் வங்கி மற்றும் பிற முதலீட்டாளகள் கூறுகிறார்கள்.

ஜூலை 1

ஜூலை 1

இன்று ஐரோப்பிய நாட்டுகளின் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் நடக்க உள்ள கூட்டத்தில் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் அளித்துள்ள புதிய திட்டத்தைப் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது.

பொது வாக்கெடுப்பு

பொது வாக்கெடுப்பு

தற்போது உள்ள நிலையில் கிரீஸ் நாட்டிற்கு எந்த ஒரு நாடும், அமைப்பும், நிதியுதவி அளிக்க முன்வராத காரணத்தினால் ஐரோப்பிய கூட்டணியில் இருந்து இந்நாட்டை வெளியேற்றுவது குறித்து வருகிற ஜூலை 5ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

3.64 பில்லியன் யூரோ பத்திரங்கள்

3.64 பில்லியன் யூரோ பத்திரங்கள்

ஜூலை 20ஆம் தேதிக்குள் கிரீஸ் ஐரோப்பிய சென்டரல் வங்கியில் உள்ள 3.64 பில்லியன் யூரோ மதிப்புள்ள பத்திரங்களைத் திரும்பப்பெற வேண்டும் இல்லையெனில், ECB-யில் இருக்கும் கிரீஸ் நாட்டிற்கான அவசரக்கால நிதியும் முடக்கப்படும்.

அமெரிக்க

அமெரிக்க

கிரீஸ் மற்றும் ஐரோப்பிய நிலைப்பாட்டைக் குறித்து அமெரிக்கக் கருவூலம் அமைப்புக் கூறுகையில், "ஐரோப்பிய கூட்டணியில் இருந்து கிரீஸ் நாட்டை வெளியேற்றாமல் தொடர்ந்து ஆதரித்துத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதைக்கு ஈட்டுச் செல்வதே சரியான வழி" எனத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece debt crisis: IMF payment missed as bailout expires

Greece has missed the deadline for a €1.6bn (£1.1bn) payment to the International Monetary Fund (IMF), hours after eurozone ministers refused to extend its bailout.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X