திவாலாகக் காத்திருக்கும் கிரீஸ்.. திங்கட்கிழமை வங்கிகள் மூடல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதென்ஸ்: ஐரோப்பிய நாடுகளில் முக்கியப் பொருளாதாரச் சந்தைகளில் ஒன்றான கிரீஸ், திவாலாகும் நிலையில் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கிறது.

 

இந்நிலையைத் தவிர்க முக்கியத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களுடன் திங்கட்கிழமை ஏதென்ஸ் நகரில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக திங்கட்கிழமை கிரீஸ் நாட்டின் வங்கிகள் அனைத்து மூட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

வங்கிகள் மூடல்

வங்கிகள் மூடல்

இந்த ஆலோசனை கூட்டத்திற்காகக் கிரீஸ் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் வருகிற திங்கட்கிழமை மூட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய சென்டரல் வங்கி

ஐரோப்பிய சென்டரல் வங்கி

ஐரோப்பிய சென்டரல் வங்கி வங்கிகள் விடுமுறை குறித்து எந்த விதமான அறிவிப்புகளும் வெளியிடவில்லை.

19 நாட்டு நிதியமைச்சர்கள்

19 நாட்டு நிதியமைச்சர்கள்

நிதியுதவிக்காகக் கிரீஸ் நாடு 19 நாட்டு நிதியமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்ததாக வியாழக்கிழமை தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியம்
 

சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்திற்கு அளிக்க வேண்டிய கடன் தவணை அளிக்க 12 நாட்கள் உள்ளபோது இந்த அறிவிப்பை கிரீஸ் அறிவித்துள்ளது.

சிறு முன்னேற்றம்

சிறு முன்னேற்றம்

நாட்டின் நிதி நிலையை மேம்படுத்தவும், திவாலாகும் நிலையில் இருந்த தப்பிக்கச் செய்ய வரும் பணிகளில் மிகச் சிறிய அளவிலான முன்னேற்றம் மட்டுமே காணப்படுகிறது. ஆனாலும் நிதியுதவி கிடைக்கும் வகையில் எந்தவிதமான ஒப்பந்ததமும் செய்யப்படவில்லை.

ஐரோப்பிய கவுன்சில்

ஐரோப்பிய கவுன்சில்

கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி அளிப்பது குறித்து ஐரோப்பிய கவுன்சில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. மேலும் இப்பேச்சுவார்த்தை திங்கட்கிழமையைும் நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

கடனை வசூல் செய்ய வேண்டும்

கடனை வசூல் செய்ய வேண்டும்

கிரீஸ் நாட்டிற்கு அளித்துள்ள கடனை வசூல் செய்யச் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Christine Lagarde ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய சென்டர்ல் வங்கி உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece faces bankruptcy, banks may not open on Monday

Euro zone leaders will hold an emergency summit on Monday to try to avert a Greek default after bank withdrawals accelerated and government revenue slumped as Athens and its international creditors remain deadlocked over a debt deal.
Story first published: Friday, June 19, 2015, 17:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X