கடைசிக் கட்ட முயற்சியில் கிரீஸ்.. வெற்றி பெறுமா? திவாலாகுமா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: கிரீஸ் நாட்டின் நிதிநிலையைச் சரி செய்யக் கடைசி முயற்சியாக இன்று ஏதென்ஸ் நகரில் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் ஆகியோர் முன்னிலையில் முக்கியக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

 

இப்பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய சென்டரல் வங்கி, கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி அளித்தால், கிரீஸ் ஐஎம்எப் நிதியத்திற்கு அளிக்க வேண்டிய தவணையைச் செலுத்தும். இல்லையெனில் கிரீஸ் நாட்டைத் திவாலானதாக அறிவிக்கப்படும்.

5 வருட போராட்டம்

5 வருட போராட்டம்

கடந்த 5 வருடமாகக் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து நலிவடைத்து வருகிறது. சுமார் 5 வருடத்தில் 3 மடங்கு சரிவை எட்டியுள்ள கிரீஸ், நிதியுதவிக்காகப் பல நாடுகளை நாடியும் யாரும் உதவிக்கரம் நீட்டவில்லை.

வேலைவாய்பின்மை

வேலைவாய்பின்மை

பொருளாதாரக வீழ்ச்சியால் கிரீஸ் நாட்டில் வேலைவாய்பின்மை 9.1 சதவீதத்தில் (2009ஆம் ஆண்டு) இருந்து 25.4 சதவீதமாக (2014ஆம் ஆண்டு) உயர்ந்துள்ளது.

வறுமைக் கோடு

வறுமைக் கோடு

இந்நிலையில் கிரீஸ் நாட்டில் 10,000த்திற்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது.

கடன் அளவு
 

கடன் அளவு

கிரீஸ் நாட்டின் கடன் அளவு 320 பில்லியன் யூரோ, இது இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை விடவும் 180 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில் தான் எந்த நாடும் நிதியுதவி அளிக்க முன் வரவில்லை.

7.2 பில்லியன் யூரோ

7.2 பில்லியன் யூரோ

தற்போதைய நிலையைச் சமாளிக்கக் கிரீஸ் நாட்டிற்குச் சுமார் 7.2 பில்லியன் யூரோ தேவைப்படுகிறது. ஏதென்ஸ் நகரில் நடைபெறும் இக்கூட்டம் கிரீஸ் நாட்டிற்குச் சாதகமாக அமைந்தால் திவாலாகும் நிலையில் இருந்து தப்பிக்கும்.

கூட்டம்

கூட்டம்

இக்கூட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. ஆகையால் பொருத்திருந்து கூட்டத்தின் முடிவுகளைப் பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece faces moment of truth in last-minute debt talks

Greece is facing its last chance to unlock more bailout funds at a meeting of European leaders and finance ministers tonight.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X