கிரீஸ் நாட்டைக் காப்பாற்ற 3 வருட கடன் வேண்டும்: பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸின் புதிய திட்டம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதென்ஸ்: திவாலாகும் நிலையில் இருக்கும் கிரீஸ் நாட்டை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கவும் ஐரோப்பிய கூட்டணியில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் புதிதாக 3 வருட கடன் திட்டத்தை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் சமர்ப்பித்தார்.

இப்புதிய கடன் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளும் சூடான வாக்குவாதமும் புதன்கிழமை நடைபெற்றது.

கிரீஸ்

கிரீஸ்

பொது வாக்கெடுப்பில் கிரீஸ் மிகப்பெரிய வெற்றி அடைந்ததுள்ள நிலையில் ஐரோப்பிய சந்தைகள் கடந்த இரண்டு நாட்களில் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது.

கிரீஸ் நிலைப்பாடு

கிரீஸ் நிலைப்பாடு

இந்நாட்டின் நிதி நிலையை மேம்படுத்தவும், திவாலாகும் நிலையைத் தவிர்க்கும் பொருட்டுப் புதிய திட்டத்தைக் கிரீஸ் வடிவமைத்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குப் புதன்கிழமை அலெக்சிஸ் வரவேற்கப்பட்டார்.

3 வருட கடன்

3 வருட கடன்

அலெக்சிஸ் சிப்ரஸ் ஐரோப்பிய கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் இணைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கிரீஸ் நாட்டை மீட்டு எடுக்க 3 வருட கடன் திட்டம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

விவாதம்
 

விவாதம்

இதன்பின் அலெக்சிஸ் சிப்ரஸிடம் ஐரோப்பிய தலைவர்கள் பலர் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிப்ரஸின் திட்டத்திற்குச் செவி கொடுக்காத ஐரோப்பிய கூட்டணிகள், அடுத்த 5 நாட்களில் புதிய திட்டத்தை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினர்.

பிணை நிதியுதவி

பிணை நிதியுதவி

கிரீஸ் அரசு அடுத்த 5 நாட்களில் சமர்ப்பிக்க உள்ள புதிய திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற பின் அடுத்த வார திங்கட்கிழமைக்குப் பின் நிதியுதவி கிடைக்கும் எனத் தெரிகிறது.

மேலும் இத்திட்டத்தில் ஏற்கனவே அறிவித்தபடி வரி உயர்வு மற்றும் பென்ஷன் பிடித்தம் ஆகியவை உட்படுத்திருக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளது.

 

வங்கிகள் மூடல்

வங்கிகள் மூடல்

தற்போது கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டுள்ளது, ஏடிஎம் பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.

ஓய்வுதியம் பெறுபவர்களுக்கும் மட்டும் வங்கிகள் திறக்கப்படுகிறது.

 

வங்கிகள் நிலை

வங்கிகள் நிலை

இத்தகைய நிலையில் கிரீஸ் நாட்டில் பல வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் வலிமை இழந்த வங்கிகளைப் பிற வங்கிகள் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

நிதியுதவி

நிதியுதவி

இப்புதிய நிதியுதவி திட்டத்தின் மூலம் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece seeks 3-year aid program, rushes to detail reforms

With a deadline just hours away to come up with a detailed economic reform plan, Greece requested a new three-year rescue from its European partners Wednesday as signs grew its economy was sliding toward free-fall without an urgently needed bailout.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X