கிரீஸ் நாட்டில் 3 வாரங்களுக்குப் பின் வங்கிகள் திறப்பு: விர்.. விலைவாசி, அதிர்ச்சியில் மக்கள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி குறித்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கிரீஸ் பொருளாதாரம் மேம்படத் துவங்கியுள்ளது.

 

இதன் காரணமாக வீழ்ச்சி நிலைப்பெற்றதை தொடர்ந்து 3 வாரங்களுக்குப் பிறகு கிரீஸ் நாட்டில் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் முடக்கம்

வங்கிகள் முடக்கம்

பொருளாதார நெருக்கடியால் சிக்கிக் கொண்டிருக்கும் கிரீஸ் நாட்டில் நிதி பரிமாற்றத்தை முடக்கக் கடந்த 3 வாரங்களாக வங்கிகள் மூடப்பட்டது.

வங்கிகள் திறப்பு

வங்கிகள் திறப்பு

தற்போது கிரீஸ் நாட்டில் நிதி பரிமாற்றத்தில் விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளின் அறிவுரைகளின் படி செயல்பட, வங்கிகள் அனைத்தும் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

புதிய மசோதா

புதிய மசோதா

ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்த 3 வருட கடன் திட்டத்தைக் கிரீஸ் அரசு பல்வேறு புதிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.

அப்படி என்ன மசோதா?
 

அப்படி என்ன மசோதா?

கிரீஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் ஐரோப்பிய கூட்டணிகள் அறிவுறுத்திய படி, வருமான வரி உயர்வு, ஓய்வூதியங்களைக் குறைப்பது, செலவினங்களைக் கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கான சலுகையைத் திரும்பப் பெறுவது ஆகியவை இடம்பெற்றுள்ளது.

விலைவாசி உயர்வு.. மக்களின் நிதிநிலை பாதிப்பு..

விலைவாசி உயர்வு.. மக்களின் நிதிநிலை பாதிப்பு..

புதிய நிதிக்கொள்கை அமலுக்கு வந்துள்ளதால், மதிப்பு கூட்டு வரி அதிகரித்துள்ளது, மக்கள் அன்றாட உபயோக பொருட்கள் அனைத்தின் விலையும் உச்ச கட்டத்தில் அதிகரித்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மூன்று வாரங்களாகக் கிரீஸ் நாட்டின் வங்கிகள், பங்குச்சந்தை, வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும் மூடிக்கிடந்த நிலையில், இன்று பொருட்களின் விலையைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece: the tragedy continues

The Greek debt crisis has been long in the making and is due to a combination of several factors such as mismanagement of the domestic economy, fudging of accounts by previous governments, and onerous conditions imposed by the European Union.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X