கிரீஸ் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தை ஒரு வாரம் மூடல்.. மக்கள் தவிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏதென்ஸ்: நிதியுதவி குறித்த பேச்சுவார்தை தொடர்ந்து மந்தமடைந்து வருவதால் நாட்டில் அனைத்து வங்கிகளும் திங்கட்கிழமை மூடப்படும் எனக் கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஞாயிற்றுக்கிழமை தனது செய்திக்குறிப்பில் கூறினார். இதன் படி இன்று(திங்கட்கிழமை) கிரீஸ் நாட்டில் வங்கிப்பணிகள் முற்றுலும் முடங்கியதுள்ளது.

வங்கி மற்றும் பங்குச் சந்தை மூடல்..

வங்கி மற்றும் பங்குச் சந்தை மூடல்..

பிரதமர் அறிவிப்பின் படி வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை மூடப்பட்டது. இதனால் நாட்டுகள் மக்கள் உடனடியாக வங்கிகள் மற்றும் சந்தையில் இருக்கும் தங்களது முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை உடனடியாக குறைக்க இது வழிவகுக்கும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏடிஎம் பரிமாற்றம்

ஏடிஎம் பரிமாற்றம்

வங்கிகள் கணக்காளர்கள் தங்களின் ஏடிஎம் பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளில் 60 யூரோ வரையில் மட்டும் பணம் எடுக்க ஏடிஎம் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

 

 

மின்னணு வங்கிச் சேவை

மின்னணு வங்கிச் சேவை

அதுமட்டும் அல்லாமல் அடுத்த ஒரு மாதத்திற்கு மின்னணு முறையில் வெளிநாட்டிற்கு அனுப்பும் நிதிசேவையும் முடக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் மின்னணு பரிமாற்றம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிமாற்றங்கள் எவ்வித தடையின்றி இயங்கும் என கிரீஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

 

ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள்

ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள்

நிதியுதவி குறித்த பேச்சுவார்த்தையில் நிலவும் தாமதத்தின் காரணமாகக் கிரீஸ் நாட்டு மக்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி சர்வதேச சந்தையைக் கணிசமாகப் பாதித்துள்ளது, குறிப்பாக இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் ஆசிய சந்தைகள் சரிவுடேனே துவங்கியது.

 

முதலீடு

முதலீடு

தற்போதைய நிலையில் ஐரோப்பிய சந்தையில் உலக நாடுகளின் முதலீடு தற்காலிகமாகவே நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

தவணை தொகை

தவணை தொகை

மேலும் ஐஎம்எப் அமைப்பிற்கு அளிக்க வேண்டிய தவணை தொகைக்குச் செலுத்த நாளை (ஜூன் 30) இறுதி என்பதால், நிதியுதவி குறித்த முடிவுகள் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

ஒத்தியவைப்பு

ஒத்தியவைப்பு

அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய பொருளாதாரம் மற்றும் நாணய மதிப்பைக் காக்கும் வகையில், கிரீஸ் நாட்டை யூரோ நாணயங்களில் இருந்து ஒதுக்கவும் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Greece Will Shut Banks in Fallout From Debt Crisis

Prime Minister Alexis Tsipras announced Sunday night that Greece’s banks would be closed as of Monday, as the fallout from ruptured debt negotiations with the nation’s creditors began inflicting pain on ordinary people.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X