எச்-1பி விசா மோசடி: இந்தியர்கள் உள்பட நான்கு ஐடி நிறுவன நிர்வாகிகளுக்கு அமெரிக்காவில் சிறை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: தங்கள் நிறுவனங்களில் இருந்து அதிகப்படியான சலுகைகளைப் பெரும் வகையில் விதிமுறைகளை மீறி எச்-1பி விசா விதிமுறைகளில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு இந்திய மற்றும் அமெரிக்க நிர்வாகிகளை அமெரிக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, எச்-1பி விசா பெறுவதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும்போது, விதிமுறைகளை மீற் போலியான ஆவணங்களை தயார்செய்து விசா பெறுவதற்கு உதவி செய்ததாகவும், உண்மையில் அவர்கள் எச்-1பி விசா விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி, தகுதி வாய்ந்த வேலை, அவர்கள் குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடையாது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இறுதியில் எச்-1பி விசா பெறுவதில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் நால்வருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் கூடவே 1 கோடியே 72 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் அவர்கள் நால்வரும் பிணைத் தொகையான 1.72 கோடி ரூபாயை செலுத்திய பின்பு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

எச்-1பி விசா கனவு
 

எச்-1பி விசா கனவு

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்பட்டம் பெற்றவர்களுக்கும், ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் பெரும் கனவாக இருப்பது, மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து எப்படியாவது முயற்சி செய்து அமெரிக்கா சென்று செட்டிலாவது தான். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை எச்-1பி விசாவில் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றன.

எச்-1பி விசா கெடுபிடி

எச்-1பி விசா கெடுபிடி

எச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு சென்று வேலைபார்ப்பது கடந்த 2016ஆம் ஆண்டு வரையிலும் எந்த வகையிலும் இடைஞ்சல் இல்லாமல் இருந்து வந்தது. பின்பு அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன் எச்-1பி விசாவில் அமெரிக்கா செல்வதற்கு அதிகப்படியான கெடுபிடிகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தொடங்கினார்.

 எச்-1பி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

எச்-1பி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

எச்-1பி விசா வேண்டுமானால் அவர்களின் ஆண்டு வருமானம் 95000 டாலர்களாக இருக்கவேண்டும் என்றும், அவர்களின் வேலைக்கான தகுதியானது எச்-1பி விசா தகுதிப் பட்டியலில் இருந்தால் தான் விசா கிடைக்கும் என்றும் அதிகப்படியான விதிமுறைகளை கொண்டவந்தார். இதன் காரணமாக 2016ஆம் ஆண்டுவரையிலும் தொடர்ந்து சீராக கிடைத்து வந்த எச்-1பி விசா, ட்ரம்ப் வந்த பின்னர் பெரும்பாலான விசா விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்கு போயின. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவானமும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலை இன்னும் தொடர்கதையாக நடந்துவருகிறது குறிப்பிடத்தக்கது.

எச்-1பி விசா விதி மீறல்
 

எச்-1பி விசா விதி மீறல்

இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்த விஜய் மனே (Vijay Mane), வேங்கட்டரமணா மண்ணம் (Venkatramana Mannam) மற்றும் ஃபெர்னான்டோ (Fernando Silva) ஆகியோருடன் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சதீஷ் வெமூரி(Sateesh Vemuri) என்பவரும் சேர்ந்து விதிமுறைகளை மீறி எச்-1பி விசா பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அமெரிக்க போலீசார் அவர்கள் நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 போட்டா போட்டி

போட்டா போட்டி

விஜய் மனே, மண்ணம் மற்றும் வெமூரி ஆகிய மூவரும் மிடில்செக்ஸ் கவுன்டி மாகாணத்தில் உள்ள கிரிப்டோ ஐடி சொல்யூசன்ஸ் இன்க் (Krypto IT Solutions Inc) நிறுவனத்தில் சிறப்பு தகுதி வாய்ந்த ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியக்கும் பணியில் உள்ளனர். அதேபோல் நியூஜெர்சியில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் சில்வா உடன் மண்ணமும் சேர்ந்து தங்கள் நிறுவனங்களில் ஆட்களை சேர்ப்பதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்து எச்-1பி விசா பெறும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

நம்மளையே ஏமாத்திட்டாங்க

நம்மளையே ஏமாத்திட்டாங்க

ஏற்கனவே, எச்-1பி விசா பெறுவதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும்போது, விதிமுறைகளை மீற் போலியான ஆவணங்களை தயார்செய்து விசா பெறுவதற்கு உதவி செய்ததாகவும், உண்மையில் அவர்கள் எச்-1பி விசா விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி, தகுதி வாய்ந்த வேலை, அவர்கள் குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கிடையாது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இறுதியில் காப்பு

இறுதியில் காப்பு

இறுதியில் எச்-1பி விசா பெறுவதில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் நால்வருக்கும் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் கூடவே 1 கோடியே 72 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் அவர்கள் நால்வரும் பிணைத் தொகையான 1.72 கோடி ரூபாயை செலுத்திய பின்பு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H-1B Visa: Four IT Executives arrested in US for H-1B visa fraud

Four Indian-American executives were charged by complaint with one count of conspiracy to commit visa fraud. All accused were released on Rs.1.72 Crore bond, the Department of Justice said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more