எச்-1பி விசா பிரீமியம் சேவைக்கு இடைக்கால தடை.. ஐடி ஊழியர்கள் கவலை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்திய ஐடி ஊழியர்கள் இடையே மிகவும் பிரபலமான எச்-1பி விசாவுக்கான பிரீமியம் சேவைக்கு இடைக்காலத் தடை விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் சாதாரண முறையில் 2018-ம் ஆண்டுக்கான எச்-1பி விசா பெற மனுக்கள் ஏப்ரல் 2 முதல் ஏற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டுக்கான எச்-1பி விசா மனுக்கள் 2018 அக்டோபர் 1 முதல் ஏற்கப்படும் என்றும் ஃபெடரல் அரசு அறிவித்துள்ளது. பிரீமியம் விசா தடையானது விசா வழங்கல் வரம்பினை கட்டுப்படுத்திச் சாதாரண வழிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அன்மையில் வெளிவந்த எச்-1பி விசா குறித்த அறிவிப்புகள் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

ஏன் இடைக்காலத் தடை?

பிரீமியம் விசாக்கள் வழங்குவதற்கான வரம்பு முடிந்துவிட்டதால் சாதாரண விசாக்கள் மட்டுமே வழங்கப்படும் என்று 2018 மார்ச் 20-ம்தேதி அமெரிக்கக் குடிவரவு துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எப்போது வரை பிரீமியம் விசா வழங்கத் தடை?

அமெரிக்கக் குடிவரவு துறையானது 2018 செப்டம்பர் 10-ம் தேதி வரை பிரிமியம் எச்-பி விசா வழங்கத் தடை விதித்துள்ளது.

விண்ணப்பங்கள் பெறப்படுமா?

இடைப்பட்ட காலத்தில் பிரீமியம் எச்-1பி விசா பெற இடைக்காலத் தடை இருந்தாலும் 2019-ம் ஆண்டுக்கான பிரீமியம் விசா வரம்பில் பெற விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எச்-1பி விசா வரம்பு எவ்வளவு?

அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு ஆண்டுக்கு 65,000 எச்-1பி விசா தான் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்து இருந்தாலும் அங்குக் குடியேறாதவர்கள் அதாவது பணி நிமித்தமாகச் அடிக்கடி சென்று வருபவர்களுக்கு விண்ணப்பிக்க எந்த வரம்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பிரீமியம் விசா வழங்கல் குறித்து அறிவிப்பு வருமா?

பிரீமியம் எச்-1பி விசா பெற இடைக்காலத் தடை விதித்துள்ளதால் மீண்டும் எப்போது வழங்கப்பட உள்ளது என்பது அறிவிப்புகள் மூலமாக தெரிவிக்கப்படும்.

பிரீமியம் விசா படிவங்கள்

அமெரிக்காவில் குடிபெயர்வதற்கான பிரீமியம் எச்-1பி விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது படிவம் I-907-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதுவே அமெரிக்காவிற்குக் குடிப்பெயராமல் அடிக்கடி சென்று வர விரும்புபவர்கள் I-129 படிவத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இடைக்காலத் தடையால் எந்தப் படிவங்கள் நீக்கப்படும்?

பிரீமியம் விசாவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் படிவம் I-907 நீக்கப்படும். ஆனால் I-907 மற்றும் I-129 படிவங்கள் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கும் போது அமெரிக்காவிற்குக் குடிப்பெயராமல் அடிக்கடி சென்று வர விரும்புபவர்கள் சமர்ப்பித்த I-129 படிவம் நீக்கப்படும்.

கோரிக்கை

பிரிமியம் எச்-1பி விசாவிற்கு இடைக்காலத் தடை என்பதால் அவசர தேவை என்றால் 2019 நிதி ஆண்டின் விசா வரம்பிற்குக் கோரிக்கை அளிக்கலாம்.

காத்திருப்பு அதிகரிப்பு

மேலும் நீண்ட காலமாக எச்-1பி விசாவிற்கு விண்ணப்பித்துக் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் இடைக்காலத் தடைக்கு முக்கியக் காரணம் ஆகும்.

ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி ஊழியர்கள் இடையில் மிகவும் பிரபலமாக உள்ள எச்-1பி விசா சேவையினைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் 10,000 அதிகமான நபர்களை உலகம் முழுவதிலும் இருந்தும் பணிக்கும் எடுக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1B Visa Premium Processing Temporary Suspended By US

H1B Visa Premium Processing Temporary Suspended By US
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns