எச்1-பி விசா பெற்ற ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே நேரத்தில் 2 நிறுவனத்தில் வேலை செய்யலாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நியூ யார்க்: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து எச்1-பி விசா உதவியுடன் பணிபுரியும் ஊழியர்கள் அதில் குறிப்பாக இந்தியாவில் இருந்து சென்று ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரியலாம் என்று அமெரிக்கக் குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்1-பி விசா என்பது அமெரிக்கர்கள் அல்லாத வெளிநாட்டவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சேவை ஆகும். இந்தச் சேவையினை இந்தியா மற்றும் சீனா போன்று நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்து வருகின்றன.

எப்படி?

எச்1-பி விசா வைத்துள்ள வெளிநாட்டவர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரியலாம் என்றாலும் I-129 என்ற படிவத்தினைப் பூர்த்திச் செய்து அனுமதி பெற வேண்டும் என்றும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

படிவம் I-129

படிவம் I-129-ஐ சமர்ப்பித்து ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிவதற்காக அனுமதி வழங்குவது ஒன்றும் புதிய விதியில்லையாம். இந்தச் சேவை பலருக்கும் தெரியாது என்று அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு துறை கூறுகிறது.

எச்1-பி விசா

எச்1-பி விசா மூலமாக ஆண்டுக்கு 65,000 நபர்களை வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கின்றனர். இதில் 20,000 விசாக்கள் முதுகலைப்பட்ட அல்லது அதற்கு இணையான வேறு பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விலக்கு

அதே நேரம் எச்1-பி விசா பயன்படுத்தி உயர் அமெரிக்காவில் உயர் படிப்புப் படிப்பவர்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அல்லது இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் அல்லது இலாப நோக்கமற்ற ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு எந்த எச்1-பி விசா கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.

க்ரீன் கார்டு

2015-ம் ஆண்டு மட்டும் 56 சதவீத அதிகத் திறன் உடைய ஊழியர்கள் அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெற்றுள்ளதாகவும், இவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு க்ரீன் கார்டு பெற்றுள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் மீதம் உள்ள 44 சதவீதத்தினர் தங்களது வேலையினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள்

எச்1-பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் அமரிக்கா வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி மட்டும் 2015-ம் ஆண்டு 76,711 அதிகத் திறன் உடைய ஊழியர்கள் க்ரீன் கார்டு பெற்றுள்ளார்கள்.

2015-ம் ஆண்டு க்ரீன் கார்டு பெற்றவர்களில் 85 சதவீதத்தினர் ஏற்கனவே அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசித்து வருபவர்கள் ஆவார்கள்.

 

விசா ரத்துச் சதவீதம்

2017-ம் ஆண்டு எச்1-பி விசா அளிப்பதற்கான விதிகள் கடுமை படுத்தப்பட்டுள்ளதால் விண்ணப்ப ரத்து விகிதம் 40% ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பணி சார்ந்த க்ரீன் கார்டு

பணியின் நோக்கத்திற்காக க்ரீன் கார்டு பெற்றுள்ளவர்கள் தேவைப்பட்டால் அவற்றை எச்1-பி விசா அல்லது எப் விசாவாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

H1B workers may work for more than one employer, says USCIS

H1B workers may work for more than one employer, says USCIS
Story first published: Friday, December 15, 2017, 12:19 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns