ஹேக்கர்கள் கைவரிசை.. $74 மில்லியன் கிரிப்டோ திருட்டு.. பெரும் இழப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சி எந்த அளவிற்கு ஒரு சிறப்பான டிஜிட்டல் நாணயமாக விளங்குகிறதோ, அதே அளவிற்குச் சில பாதுகாப்புக் குறைபாடுகள் நிறைந்த கிரிப்டோ வர்த்தகத் தளத்தில் இருந்து கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் முக்கியமான ஒரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் ஹேக்கர்கள் அதிர்ச்சி அளிக்கும் தொகைக்குக் கிரிப்டோகரன்சியைத் திருடியுள்ளனர்.

90% கிரிப்டோகரன்சி உற்பத்தி முடல்.. சீனா-வின் தடையால் 6 மாத சரிவில் பிட்காயின்..!

ஹேக்கர்கள் அட்டூழியம்

ஹேக்கர்கள் அட்டூழியம்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் ஹேக்கர்கள் இன்று நுழையாத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக உலகின் முன்னணி சமுகவலைதளம், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் எனப் பலவற்றில் தகவல் திருட்டு ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிய நிலையில் இந்திய நிறுவனங்கள் தங்கள் சைபர் பாதுகாப்புகளை அதிகரித்துள்ளனர்.

ஜப்பான் லிக்விட் தளம்

ஜப்பான் லிக்விட் தளம்

ஜப்பான் நாட்டின் முக்கியக் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளமான லிக்விட் (Liquid) என்னும் நிறுவனத்தில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தில் சுமார் 74 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளைத் திருடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்கள் இடம் மாற்றம்
 

சொத்துக்கள் இடம் மாற்றம்

இதுகுறித்து லிக்விட் நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. முக்கியமான செய்தி: #LiquidGlobal warm வேலெட் சொத்துகளை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இதனால் சொத்துக்கள் அனைத்தும் தற்போது Cold வேலெட்-க்கு மாற்றுகிறோம்.

லிக்விட் மன்னிப்பு கேட்டது

லிக்விட் மன்னிப்பு கேட்டது

இந்தச் சைபர் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து தகவல்களை அளிக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் டெபாசிட் மற்றும் வித்டிராவல் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வுக்கு அனைத்து வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம் என லிக்விட் நிறுவனம் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

பிட்காயின், எதிரியம், ரிப்பிள், டிரான்

பிட்காயின், எதிரியம், ரிப்பிள், டிரான்

லிக்விட் தளத்தில் ஹேக்கர்கள் பிட்காயின், எதிரியம், ரிப்பிள், டிரான் ஆகிய கிரிப்டோகரன்சிகளைத் திருடியுள்ளனர். லிக்விட் நிறுவனம் கிரிப்டோகரன்சிகள் எங்குச் செல்கிறது, எந்தக் கணக்கிற்குச் செல்கிறது என அனைத்தையும் டிராக் செய்து வருகிறது.

வேறு எக்ஸ்சேஞ்ச் கணக்கு

வேறு எக்ஸ்சேஞ்ச் கணக்கு

இதுமட்டும் அல்லாமல் இந்தக் கிரிப்டோகரன்சிகள் டிஜிட்டல் சொத்துக்கள் என்பதால் கையில் வைத்திருக்க முடியாது, அதனால் ஹேக்கர்கள் வேறு எக்ஸ்சேஞ்ச் கணக்கிற்கு மாற்றி வருகிறார்கள். குறிப்பிட்ட அளவிலான கிரிப்டோகளை 2வது மற்றும் 3வது கணக்குகளும் மாற்றியுள்ளனர்.

மீட்டு எடுக்கும் பணி

மீட்டு எடுக்கும் பணி

இதனால் லிக்விட் நிறுவனம் பிற எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் திருடப்பட்ட சொத்துகளை டெபாசிட் செய்யப்படும் தத்தம் கணக்குகளை முடக்கவும், முடக்கப்பட்ட கணக்குகளில் இருக்கும் கிரிப்டோகரன்சியை முழுமையாக மீட்டு எடுக்கும் பணியில் இறங்கியுள்ளது.

KuCoin தளம்

KuCoin தளம்

இந்நிலையில் KuCoin என்னும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தலைவர் ஜானி லேயு, லிக்விட் தளத்தில் ஹேக்கிங் ஏற்பட்டு உள்ளது அறிவித்து ஹேக்கர்கள் கணக்குகள் முடக்கப்பட்டு லிக்விட் நிறுவனத்திற்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

80 மில்லியன் டாலராக உயர்வு

80 மில்லியன் டாலராக உயர்வு

ஹேக்கர்கள் திருடப்பட்டது 74 மில்லியன் டாலர் அளவிலான கிரிப்டோகரன்சி ஆனால் தற்போது இதன் சந்தை மதிப்பு 80 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. லிக்விட் தளத்தில் இருந்து சுமார் 44.8 மில்லியன் டாலர் அளவிலான எதிரியம், 4.8 மில்லியன் டாலர் அளவிலான பிட்காயின்கள் திருடப்பட்டு உள்ளது.

திருட்டு, ஹேக்கிங், மோசடி

திருட்டு, ஹேக்கிங், மோசடி

ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் திருட்டு, ஹேக்கிங் மற்றும் மோசடி ஆகியவற்றின் மூலம் சுமார் 681 மில்லியன் டாலர் அளவிலான கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டு உள்ளது. இதில் Defi என்னும் தளத்தில் இருந்து மட்டும் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான கிரிப்டோ திருடப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hackers attacked Japanese crypto exchange Liquid and robbed $74 million worth of cryptos

Hackers attacked Japanese crypto exchange Liquid and robbed $74 million worth of cryptos
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X