லண்டன் பங்குச்சந்தையை வாங்கும் ஹாங்காங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது.

 
லண்டன் பங்குச்சந்தையை வாங்கும் ஹாங்காங்..!

வர்த்தகச் சாம்ராஜ்ஜியம்

குளோபல் பவர்ஹவுஸ் அதாவது சர்வதேச அளவில் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் பொருட்டு ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச், லண்டன் பங்குச்சந்தையை 39 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பும் தெரிவித்துள்ளது.

 

நிலையற்ற தன்மை

தற்போது ஹாங்காங் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எங்குத் திரும்பினாலும் மக்கள் போராட்டம், அரசு தலையீடு, பெரும் நிறுவனங்கல் முடக்கம், முதலீட்டாளர்கள் வெளியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழ்நிலை

இந்த மோசமான நிலையைச் சமாளிக்க வேண்டுமென ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட், லண்டன் பங்குச்சந்தையை வாங்கி வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பிரிட்டன் பவுண்டு மதிப்பு

இதேபோல் பிரெக்சிட் தோல்வி அடைந்துள்ள நிலையில் பிரிட்டன் பவுண்டு மதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது, இதைச் சமாளிக்கும் வகையிலும் ஹாங்காங் இந்த மிகப்பெரிய முதலீட்டை பிரிட்டன் சந்தையில் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உதவி

பவுண்ட் மதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுமதி வர்த்தகம் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் பிரிட்டன் நாட்டு நிறுவனங்களைக் குறைவான விலைக்கு வாங்கும் நிலையிலும் ஏற்படும், இவை அனைத்திற்கும் உதவ வேண்டும் என்று தான் லண்டன் பங்குச்சந்தையை வாங்க திட்டமிட்டுள்ளது ஹாங்காங் பங்குச்சந்தை.

அமெரிக்கச் சந்தைகள்

ஹாங்காங் பங்குச்சந்தையின் இந்த முயற்சி அமெரிக்காவின் Intercontinental Exchange Inc மற்றும் CME Group inc ஆகியவற்றுக்குப் போட்டியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கும் வேண்டும் என்பது தான்.

வெளிநாட்டில் எல்லாம் ஒரு நாட்டின் பங்குச் சந்தையையே இன்னொரு பங்குச் சந்தை வாங்கும் அளவுக்கு வலுவான பொருளாதாரத்துடன் இருக்கிறது.அ ஆனால் இந்தியாவிலோ 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டைக் கூட வாங்க வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசின் நிலையற்ற கொள்கையால் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hong Kong Exchange bid for LSE in $39 billion

Hong Kong Exchanges and Clearing Ltd (HKEX) (0388.HK) made a $39 billion takeover approach to the London Stock Exchange Plc (LSE.L) on Wednesday, aiming to create a global trading powerhouse
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X