கிளம்புங்கடா.. எச்சரிக்கும் அமெரிக்கா.. பதற்றத்தில் இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் முடிந்த உடன் அதனை நீட்டிக்காமல் அவர்களை வெளியேற்றக்கூடிய புதிய விதிமுறை ஒன்றை டிரம்ப் அரசு அக்டோபர் முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

இதனால் அமெரிக்காவில் எச்-1பி விசா காலம் முடிந்த பிறகு அதனை நீட்டிக்கக் கோரிக்கை வைத்து அவை நிராகரிக்கப்பட்டு இருப்பின் அவர்களால் மீண்டும் விண்ணப்பித்து அங்குத் தொடர்ந்து இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

விலக்கு

விலக்கு

அதே நேரம் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்குப் பணி நிமித்தமாக, மனிதாபிமான அடிப்படியில் சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகமானது வெளிநாட்டவர்களுக்குக் புதிய விசா அளித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள விசாவினை நீட்டிக்கும் முறையில் மாற்றப்பட்டுள்ள புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நோட்டிஸ்

நோட்டிஸ்

புதிய விதிகளின் படி அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா நீட்டிப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, விசா காலாவதியான பிறகும் சட்ட விரோதமாக உள்ளவர்களுக்குப் புதிய விதிகளின் கீழ் நோட்டிஸ் அனுப்பப்பட உள்ளது.

இதன் மூலம் சட்ட விரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் இந்த நோட்டிஸை அத்தாட்சியாக வைத்துக்கொண்டு நீதிபதி முன் ஆஜராகினால் சொந்த நாட்டிற்குக் கடத்தப்படுவார்கள்.

 

இந்தியர்கள்

இந்தியர்கள்

கடந்த சில மாதங்களாக எச்-1பி விசா கால அவகாசத்தினை நீட்டிக்கக் கோரிய பல இந்தியர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குப் புதிய விதியால் பெறும் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தப் பிரிவினருக்கு மட்டும் புதிய விதிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

என்ன ஆகும்?

என்ன ஆகும்?

எனவே கடந்த சில மாதங்களில் எச்-1பி விசா நீட்டிப்பு விண்ணப்பம் அளித்து நிராகரிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு எதனால் நிராகரிக்கப்பட்டது என்று விவரங்கள் கூறப்பட்டு அதற்கு ஏற்றவாறு பயணத் திட்டங்களை வகுத்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஃபெடரல் ஏஜன்சி

ஃபெடரல் ஏஜன்சி

இது போன்று சட்ட விரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களின் முன்னுரிமை ஆராய்ந்து அவர்கள் மீது குற்ற வழக்குகள், மோசடி வழக்குகள் ஏதேனும் உள்ளதா அல்லது தேச பாதுகாப்பிற்குக் குந்தகம் விலை வித்தார்களா என்பதையும் பொருத்து ஃப்டரல் ஏஜன்சி முடிவு எடுக்கும்.

 வழிமுறை

வழிமுறை

மேலும் இவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பும் வழிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து எப்போதும் போலச் சட்டவிரோதமாக உள்ளவர்களை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How H1B visa holders could be affected by new US rule, from October 1

How H1B visa holders could be affected by new US rule, from October 1
Story first published: Thursday, September 27, 2018, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X