அமெரிக்கர்களையும் இந்திய உணவை ருசி பார்க்க வைக்கும் ‘படேல் பிரதர்ஸ்’-ன் வர்த்தக சாம்ராஜியம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அயல் நாட்டில் குடியேறிய ஒவ்வொரு சமூகமும் குறிப்பிடத் தகுந்ததாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த இந்தியர்கள் பல்வேறு துறைகளில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள், வெளிநாட்டில் குடிபெயர்ந்த அவர்கள், அந்த அறிமுகமில்லாத நாட்டில் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் மற்றும் தங்கள் இனத்தையும் நிலை நாட்டிக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இன்று தொழில் முனைவு திறனுக்கான சிறப்பு வெற்றிக் கதைகளாக மாறியுள்ளன.

அமெரிக்காவின் மிகப்பழமையான, மிகப்பெரிய மற்றும் மிகவும் விரும்பப்பட்ட இந்தப் படேல் சகோதரர்களின் இந்திய மளிகைக் கடை சங்கிலித் தொடர் கடைகளைப் போல எதார்த்தத்தில் வேறெந்த குடும்பமும் அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வியாபார பிறநிதித்துவத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

படேல் சகோதரர்களின் கடை

அமெரிக்காவின் நீள அகலம் முழுதும் பரவியுள்ளது படேல் சகோதரர்களின் கடை. அந்த நாட்டின் பரபரப்பான இனக்குழு சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றான இந்தப் படேல் சகோதரர்கள் கடைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இது 1974 இல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்த இரண்டு சகோதரர்களான மாஃபாத் பாய் மற்றும் துளசி படேல் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

படிப்பு

1968 - ஆம் ஆண்டு மின் பொறியியல் பட்டயத்தைக் கைகளில் தாங்கிக் கொண்ட மாஃபாத் படேல், இயந்திர பொறியியலில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காகச் சிகாகோ நகரத்திற்குச் சென்றார். பாந்து கிராமத்தில் (குஜராத்தின் மெஷானா மாவட்டம்) ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்த அவர், தனது மனைவியையும் மற்றும் சகோதரர் துளசி படேலையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டார்.

இந்திய மளிகைப் பொருட்களுக்கான ஏக்கம்

அவர் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர்ச் சிகாகோவிலுள்ள ஜெஃபர்சன் எலக்ட்ரிக் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டாளராக வேலை செய்யத் தொடங்கினார். படேல் சகோதரர்கள் இந்திய உணவை மிகவும் தவற விட்டார்கள். மேலும் இந்திய சமையல் பொருட்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்கள் இந்திய மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளைத் தேடி ஏங்கினார்கள். இதர இந்திய குடும்பங்களும் கூட இந்தப் பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து, மாஃபத் லால் ஒரு சிறிய இந்திய மளிகைக் கடையை ஆரம்பிப்பதன் மூலம் இதற்கு ஒரு தீர்வை வழங்க வேண்டுமென்று தீர்மானித்தார்.

அமெரிக்காவில் இந்திய உணவு மளிகைப் பொருட்கள்

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் அதே போன்ற இந்திய உணவு மளிகைப் பொருட்களை விற்கும் நான்கு இதர மளிகைக் கடைகள் மட்டுமே இருந்தன. எனவே இந்திய மளிகைப் பொருட்களைத் தேடும் அனைவருக்கும் படேல் சகோதரர்களின் கடை, செல்வதற்குச் சிறந்த ஒரு இடமாக மாறியது. இந்தியாவிலிருந்து வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, ஸ்கோகியில் உள்ள படேலின் இல்லம் அமெரிக்காவில் முதல் நிறுத்த இடமாக ஆனது.

உறவினர்கள் உதவி

அந்த உறவினர்களில் பலர் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குத் தெவான் அவென்யூவில் உள்ள படேல் சகோதரர்கள் கடையில் வேலை செய்து அங்கேயே தங்கினர். அதற்குப் பின்னர், மாஃபாத் மற்றும் துளசி, அயல்நாடுகளில் தற்காலிக குடியுரிமை பெற்ற இந்திய பிரஜைகளின் (என்.ஆர்.ஐ) மக்கள் தொகை அதிகரித்து வரும் அட்லாண்டா, கனெக்டிகட், நியூயார்க் மற்றும் ஹெளஸ்டன் போன்ற இதர நகரங்களில் அவர்களுக்கென்றே சொந்தமாகக் கடைகளை அமைக்கவோ அல்லது படேல் சகோதரர்களின் கடையின் கிளைகளைத் துவங்கவோ உதவி செய்தார்கள்.

முன்கூட்டியே பேகேஜ் செய்யப்பட்ட இந்திய உணவுகள்

படேல்கள் தங்களை ஏற்கனவே சிறந்த மளிகை சரக்கு வியாபாரிகளாக நிலைநாட்டிக் கொண்டிருந்தன இந்தக் காலகட்டத்தில், தங்களது கவனத்தை ஒரு புதிய தொழிலில் திசைத் திருப்பத் தொடங்கினர்: அது முன்கூட்டியே பேகேஜ் செய்யப்பட்ட இந்திய உணவுகள் ஆகும்.

ஸ்வாத் (SWAD)

படேல் சகோதரர்கள் ஸ்வாத் (SWAD) என்னும் தங்களது சொந்த நிறுவனத் தர அடையாளத்தைத் தொடங்கினர். அதன் கீழ் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பரந்த அணிவரிசையில் சிற்றுண்டிகள், (உறைந்த சமோசாக்கள், மொரு மொருப்பான முறுக்குகள், வெண்ணெய் மாத்ரிகள், சிறப்பு ஊறுகாய்கள், லேசான மசாலா தூவப்பட்ட கடலைக்காய் போன்ற மற்றும் பல) மற்றும் மைக்ரோவேவ் அடுப்பில் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடிய சாப்பாடு ஆகியன விற்கப்பட்டன.

ராஜா ஃபுட்ஸ்

1991 ஆம் ஆண்டுப் படேல் சகோதரர்கள், மற்றுமொரு தர அடையாள நிறுவனமான ராஜா ஃபுட்ஸை தொடங்கினர். சமைப்பதற்குத் தீவிர உழைப்புத் தேவைப்படும் இந்திய உணவுகளான பாலக் பனீர், சிக்கன் டீக்கா மசாலா, சென்னா மசாலா போன்ற மற்றும் பலவகை உணவுகளை அவர்களது சொந்த கடைகளுக்கும், இதர கடைகளுக்கும் விநியோகம் செய்தனர்.

வெளிநாடுகளில் இடம் பெயர்ந்துள்ள இந்தியர்களுக்கானது

இந்தத் தர அடையாள நிறுவனம், தங்கள் சொந்த வீடுகளையும் பெற்றோர்களையும் பிரிந்து வெளிநாடுகளில் இடம் பெயர்ந்துள்ள இரண்டாம் தலைமுறை இந்தியர்களுக்கும் மற்றும் அயல்நாட்டுப் பண்புகளையுடைய புதிய சுவைகளை முயற்சி செய்து பார்க்க விரும்பும் அமெரிக்க இளைஞர்களிடையேயும் வெகு சீக்கிரமாகப் பிரசித்தி பெற்றது. இன்று, இந்தத் தர அடையாள நிறுவனத்திற்கென்று, உணவுகளுக்கான சிறப்புத் தனித்தன்மை அல்லாத சூப்பர் மார்க்கெட்டுகளான நகை மற்றும் மொத்த உணவுக் கடைகளில் கூடச் சிறப்பு அலமாரிகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி

படேல் சகோதரர்களின் சரக்குகளின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து வழக்கமாக இறக்குமதி செய்யப்படுகின்றன.

பயணித்துக் கொண்டே இருக்கும் டிரக்குகள்

தினந்தோறும் பல டிரக்குகள் நிறைய இந்தியத் தயாரிப்புகளை நிரப்பிக் கொண்டு அவர்களது பல்வேறு சங்கிலித் தொடர் கடைகளுக்குப் புத்தம் புதிய காய்கறி தயாரிப்புத் தொட்டிகள் (பாகற்காய்கள், பச்சை கத்திரிக்காய்கள், கருவேப்பிலை மற்றும் பலவற்றை உள்ளடக்கியது), உலர்ந்த சரக்குகளுக்கான அலமாரிகள் (பாஸ்மதி அரிசி பைகள், அவரை விதை பொட்டலங்கள், ஜாடிகளில் அரைத்த மசாலாக்கல், பேல் பூரி கலவைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது) ஃப்ரீசர் பெட்டிகள் (வானவில்லின் நிறங்களில் நறுஞ்சுவைகளைக் கொண்ட இந்திய குல்ஃபி பெட்டிகளை உள்ளடக்கியது) போன்றவற்றைத் தினமும் விற்றுத் தீர்ந்தவுடன் திரும்பத் திரும்ப நிறைப்பதற்காகப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன.

சப்பாத்தி இயந்திரம்

இத்துடன் கூடுதலாக, படேல் சகோதரர்கள் மேலும் இந்திய வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திச் செய்யக்கூடிய வகையில் பல்வேறு புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்தப் புதிய முயற்சிகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று, புத்தம்புதிய சப்பாத்திகளை ஒன்றன் பின் மற்றொன்றாக, மிக நேர்த்தியாக, வட்டவட்டமாக, புத்தம் புதியதாகச் சுழற்றி தயாரித்துத் தரும் ஸ்டீல் இயந்திரங்களை நிறுவியதாகும்.

அங்கே விரிவாக்கப்பட்ட ஒரு ரொட்டி தயாரிக்கும் பிரிவு உள்ளது. அங்கே புத்தம் புதிய பாவ்கள், பொறை பொறையான பராத்தாக்கள் மற்றும் காரசாரமான தெப்லாக்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இது பெரும்பாலான வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்குப் பெருமளவில் சௌகரியமாக உள்ளது.

 

சிகாகோவின் சின்ன இந்தியா

இதில் சிறிய ஆச்சரியம் என்னவென்றால், எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் தரும் இந்தக் கடையானது, தற்காலிக அயல்நாட்டுக் குடியுரிமை பெற்ற இந்திய மக்களின் சமூக மையமாக மாறி வருகிறது. முதன்முதலில் படேல் சகோதரர்கள் கடையைத் திறந்த தெவான் அவென்யூவிலுள்ள தெருவானது, இப்போது முழுக்க இந்திய வியாபாரிகளால் நிரம்பியுள்ளது மற்றும் "சிகாகோவின் சின்ன இந்தியா" என்று அறியப்படுகிறது.

இந்தியர்கள் அல்லாத வாடிக்கையாளர்களைக் கவர்தல்

மேலும் படேல் சகோதரர்கள் கடைகளை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கச் செய்வது எதுவென்றால், இந்திய பொருட்கள் இந்தியர்கள் அல்லாத வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கப் பெறுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகும். பொருட்களின் மேலுள்ள லேபிள்களில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் என்ன தேடுகிறார்களோ அதைக் கண்டறிய உதவுவதற்காகவே கடையில் எப்பொழுதும் கைநீட்டி அழைக்கும் தூரத்தில் பணியாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இவை இந்திய சமையல்களைச் செய்து பார்க்க, விரும்பி பொருட்களை வாங்க வரும் அனைவருக்கும் வாங்கும் அனுபவத்தை எளிதாக்குகிறது.

 

லாபமில்லா நிறுவனங்கள்

இன்று மாஃபாத் லாபமில்லா நிறுவனங்களுக்காகத் தனது பெரும்பான்மையான நேரத்தை அர்ப்பணிக்கிறார். அதே சமயம், அவரது இரு மகன்களான ராகேஷ் மற்றும் ஸ்வேதல், அந்த மாபெரும் வியாபார சாம்ராஜ்ஜியத்தின் தினசரி இயக்கங்களைக் கவனித்துக் கொள்கின்றனர்.
உதவி தேவைப்படும் ஆதரவற்றவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் அரசாங்கம் அல்லாத தனியார் அமைப்பான ‘இந்திய அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு' குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இந்தியாவில் திரும்பிப் பார்த்தாலோ, அவர் பிறந்த கிராமமான பாந்துவில் ஒரு மருத்துவமனையைக் கட்டவும் பல்வேறு நீர் ஆதாரங்களைக் கட்டுமானிக்கவும் அவர் உதவியுள்ளார்.

 

சாம்வேதனா நிறுவனம்

குஜராத் பூகம்பத்திற்குப் பிறகு, படேல் சகோதரர்கள் அகமதாபாத்தில் சாம்வேதனா நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இதன் மூலம் குட்ச் நகரில் 160 வீடுகள், ஒரு பள்ளி, ஒரு மருத்துவ மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. (இந்தக் குடியிருப்பு சிகாகோ டவுன்ஷிப் என்று அழைக்கப்படுகிறது) மேலும் இந்த நிறுவனமானது அகமதாபாத்தின் எல்ஜி மருத்துவமனையில் முதல் தீக்காயக் கவனிப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்துள்ளது மற்றும் காந்திநகரில் உள்ள காதி சர்வ் வித்யாலயாவிற்குச் சுமார் ரூபாய் 2 கோடிகளை நன்கொடையாக அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How Two Immigrant Patel Brothers Built a Business Empire That Is Giving America a Taste of Indian Food

How Two Immigrant Patel Brothers Built a Business Empire That Is Giving America a Taste of Indian Food
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns