தடையெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய ஜப்பானிய பெண்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

யோஷிகோ ஷினோரா ஆயிரத்தில் ஒரு பெண் ஆவார். இதை பேச்சுவழக்கிற்காக சொல்லவில்லை. 'அவர் தன் சமநிலையாளர்களிடமிருந்து தனித்து நிற்பதை வைத்து சொல்லப்படுகிறது'. ஜப்பானின் முதல் தன் சுய முயற்சியினாலுயர்ந்த பில்லியனர் பெண் என்கிற வகையில், உண்மையில் இந்த விளக்கத்தைப் பொறுத்த வரையில் இதற்கு பொருத்தமானவர் இவரைத் தவிர வேறு எவரும் இல்லை.

பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனமான டெம்ப் ஹோல்டிங்கில் அதன் ஸ்தாபனர் மற்றும் தலைவர் என்கிற முறையில் அவருடைய தொழில்முனைவு சார்ந்த பயணம் ஒரு மாபெரும் வெற்றிக்கதையாகும். இதுமட்டும்  அல்லாமல் யோஷிகோ ஷினோரா ஜப்பான் நாட்டின் முதல் பெண் பில்லியனர் ஆவார்.

பெண்களுக்கான ஒரு நிறுவனம்

பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேலைக்குச் செல்வதை சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளாத ஒரு காலத்தில் தொழிலாளர்களின் ஆற்றலில் பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு உதவுவதற்காக அவர் இந்த நிறுவனத்தை 1973 ஆம் ஆண்டு நிறுவினார்.

4.5 பில்லியன் டாலர்

அவருடைய வெற்றிக்கு எதிராக நீண்ட காலமாக பல முரண்பாடுகள் நிலவி வந்தாலும், இன்று அவர் 4.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் யானை பலத்துடன் வளர்ந்து நிற்கும் தன் நிறுவனத்தை கட்டுமானித்து நிர்வகித்து வருகிறார்.

ஊக்கத்தை வெளிநாட்டில் பெற்றார்

யோஷிகோ ஷினோரா 1934 ஆம் ஆண்டு ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரான தந்தைக்கும் மற்றும் பேறுகால மருத்துவ உதவி செவிலியராக பணியாற்றிய தாய்க்கும் மகளாகப் பிறந்தார்.

அவரது தந்தை அவருக்கு எட்டு வயது இருக்கும் போதே இறந்து விட்டார். அதன் பிறகு போருக்குப் பிந்தைய ஜப்பான் நாட்டில் தனது ஒற்றை பெண்மணியான தாயாரால் வளர்க்கப்பட்டார்.

 

திருமணம்

அவர் தனது 20 வயதுகளின் தொடக்கத்திலேயே திருமணம் செய்து கொண்டார், ஆனால் விரைவிலேயே விவாகரத்துப் பெற்று விட்டார்.

விவாகரத்துக்குப் பிறகு, ‘எனக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும், என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,' என்று 2009 ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார் ஷினோரா.

 

தேநீர்

அந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஜப்பான் பெண்கள் தேநீர் தயாரித்து பரிமாறுதல் போன்ற சலிப்பூட்டும் வேலைகளுக்கு புறந்தள்ளப்பட்டிருந்தனர். மேலும் பேறுகால மருத்துவ உதவியாளராக இருந்த என் அம்மாவைப் போலல்லாமல், தொழில்முறையிலான சிறப்புத் திறமைகள் எதுவும் என்னிடம் இல்லை. எனவே, நான் ஜப்பானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா

ஷினோராவின் பயணங்கள் அவரை ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நகரங்களுக்கு கொண்டு சென்றன. அங்கு அவர் பல்வேறு அலுவலக அமைப்புகளில் காரியதரிசியாகப் பணியாற்றும் வாய்ப்புகளைக் கண்டறிந்தார்.

இந்த அனுபவம் மீண்டும் ஜப்பானில் கண்டறியப்படக்கூடிய வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகளை நோக்கி அவருடைய கண்களைத் திறந்தது.

 

வேலையும்.. பெண்களும்..

"ஐரோப்பாவிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் பெண்கள் வேலையுடன் எளிதாக சுவாசிப்பதைப் பார்க்கும் போது அது என்னை மிகவும் ஈர்த்தது," என்று அவர் 2004 ஆம் ஆண்டு ப்ளூம்பெர்க் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் சட்டதிட்டங்களுடன் அவரது கனவுகளுக்கு மோதல் ஏற்பட்டது

 

ஜப்பானில் ஷினோரா

ஷினோரா ஜப்பானிய பெண்களுக்கான ஒரு தற்காலிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் வியாபாரத்தைத் தொடங்கும் தனது கனவுடன் ஜப்பானுக்குத் திரும்பிய போது, அவர் அந்நாட்டின் கலாச்சார விதிமுறைகளுடன் அளவுக்கு அதிகமாகவே போராட வேண்டி இருந்தது.

சட்டத்திட்டங்கள் தடை

ஜப்பான் தற்காலிகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்யும் ஒரு சட்டத்தை அந்நாட்டு சட்டப் புத்தகங்களில் கொண்டிருந்தது. இது வரையிலும் கூட, அந்தச் சட்டங்களால் ஷினோரா முன்னோக்கி நகருவதிலிருந்து அவரது மனதை திசைத் திருப்பித் தடுக்க முடியவில்லை.

தற்காலிக வேலை

"விரைவில் நான் தொழிற்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பை நோக்கி விரைந்தேன், வாழ்நாள் வேலைவாய்ப்பு ஜப்பானின் விதிமுறை ஆகும், மேலும் தனியார் நிறுவனங்களால் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்படுவது இந்நாட்டுச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே எனக்கு அமைச்சகத்திலிருந்து அடிக்கடி நீதிமன்ற உத்தரவின் பேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்காலிக ஊழியர்களை அவர்களின் தேவை தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவது ஏன் சட்ட விரோதமானது என்று எனக்கு புரியவில்லை. எனக்கு நானே இவ்வாறு சொல்லிக் கொள்வதை வழக்கமாகக் கொண்ருந்தேன்: ‘இது என்ன சிறையைப் போல இருக்கிறதா என்று நான் ஆச்சரியம் கொள்கிறேன். அறைகள் எவ்வளவு பெரியதாக இருக்கின்றன? இங்கே ஒரு கழிப்பறையோ அல்லது ஜன்னலோ இருக்கிறதா?' அதன் தொடர்ச்சியாக, பல ஆண்டுகள் நான் இதர தற்காலிக முகவர்களுடன் சேர்ந்து சட்டரீதியான போராட்டத்தைத் தொடர்ந்த பிறகு, அந்தச் சட்டம் மாற்றப்பட்டது."

 

தேக்கநிலை காலத்தால் மனஎழுச்சி பெற்றார்

ஷினோராவின் டெம்ப் ஹோல்டிங் நிறுவனம் 70 கள் மற்றும் 80 களில் தொடர்ந்து நிலையாக முன்னேறத் தொடங்கியது. ஆனால், 1980 கள் மற்றும் 1990 களின் பிற்பகுதியில் சில கலவையான காரணிகள் நிறுவனம் புதிய நிலையை அடைய உதவி செய்தது.

அவற்றில் முதலாவது, முன்பு பெண்களை மட்டுமே வேலைக்கு எடுத்த இந்த நிறுவனம் ஆண்களையும் வேலைக்கு எடுப்பது என்கிற முடிவை எடுத்ததாகும்.

 

இது ஆரோக்கியமானதல்ல

"ஜப்பானிய பெண்கள் இப்போது சற்று வித்தியாசமாக இருக்கிறார்கள். ஆனால் முன்னெப்பொழுதும் அவர்கள் வெளியே சென்று வியாபாரத்தைத் தேட விரும்பவில்லை. அவர்கள் பெரும்பாலும் அதிகமாக தற்காப்பு நிலைப்பாட்டையே அணுகினர், முன்னேறிச் செல்வதை விட, நிறுவனத்தின் லாபங்களை பாதுகாக்கவே விரும்பினர். இது ஆரோக்கியமானதல்ல," என்கிறார் ஷினோரா.

ஆண்களுக்கும் அனுமதி..

எனவே, 1988 இல், ‘இங்கே சில ஆண்களை வேலைக்கு அமர்த்தினால் என்ன?' என்று நான் கேட்டேன். அதற்கு மேலாளர்கள், ‘வேண்டாம், நன்றி, எங்களுக்கு அத்தகைய உயிரினங்கள் தேவையில்லை', என்றனர். ஆனால், எங்களுக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். ஒரு நிறுவனத்தின் கிளையில் ஆண் ஒருவரை பகுதி நேர பணியாளராக வேலைக்கு அமர்த்த நேர்ந்தது, என்ன ஒரு ஆச்சரியம், அடடா, விற்பனை அளவு உயர்ந்தது! அது தான் திருப்பு முனை."

சந்தையில் தேவை அதிகரிப்பு

மற்றொரு உந்துதல் காரணியாக 1990 களில் நிலவிய ஜப்பானின் பொருளாதார தேக்கம் இருந்தது. இதன் தாக்கத்தால் பெரும்பாலும் காயமுறும் அடித்தள மக்களுக்கு உதவும் ஒரு முயற்சியாக நிறுவனங்கள் முழு சம்பள ஊழியர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்களை தேடத் தொடங்கியதற்கு வழிவகுத்தது.

ஒரு உண்மையான வியாபார முன்னோடியாக ஓய்வு பெற்றார்

ஷினோரா சமீபத்தில் ஓய்வு பெற்ற நேரத்தில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை தனது ஜனவரி 2017 இல் வெளியான ஒரு கட்டுரையில், "டெம்ப் ஹோல்டிங் நிறுவனம் கடந்த வருடத்தில் அமெரிக்க டாலர் மதிப்பில் 4.5 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது என்று புகழ்ந்துள்ளது. கடந்த மாதம் டோக்கியோவில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் 11.5% மேலதிகரித்தது - அதில் ஷினோராவின் பங்கு 25% உருவாக்கப்பட்டது. அத்துடன் இத்தனை ஆண்டுகளில் திரண்ட பங்காதாயத் தொகை அமெரிக்க டாலரில் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையது."

லெப் மேடு பில்லியனர்

ஆசியாவின் சுயமாக தன் முயற்சியினால் உயர்ந்த பெண்கள் கழகத்தில் பெண்களின் கூட்டு எண்ணிக்கை 25 ஆக உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து வந்தவர்கள்.

கலாச்சாரம் மற்றும் வியாபார சட்டங்களை மாற்றியமைத்து, இதற்கு முன் வேறு யாரும் செய்யாத அளவிற்கு ஒரு வியாபார சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ளவர் என்கிற வகையில் யோஷிகோ ஷினோரா, நிச்சயமாக ஆயிரத்தில் ஒரு பெண்மணியாக இருக்கிறார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Yoshiko Shinohara Became Japan’s First Female Billionaire

How Yoshiko Shinohara Became Japan’s First Female Billionaire
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns