ஊழியர்களை கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்யும் ஹெச்.பி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: உலகின் முன்னணி மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹீவ்லெட் பக்கார்ட் 2015ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது வர்த்தகத்தை இரண்டாகப் பிரித்துத் தனித்தனி நிறுவனமாகச் செயல்பட உள்ளது.

 

இந்நிலையில் தனது எண்டர்பிரைஸ் வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக, வர்த்தகம் மற்றும் நிதிநிலையை லாபகரமானதாக மாற்ற, மேலும் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக ஹெச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம் 55,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

(ஸ்மார்ட் சிட்டிகளின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன பயன்..?)

மெக் வித்மேன்

மெக் வித்மேன்

வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் ஹெச்.பி நிறுவனத்தின் வன்பொருள் மற்றும் மென்பொருள் வர்த்தகம் ஹீவ்லெட் பக்கார்ட் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனமாக, இத்துறையில் உலகின் முன்னணி நிறுவனமான செயல்பட உள்ளது என இந்நிறுவனத்தின் சீஇஓ மெக் வித்மேன் தெரிவித்துள்ளார்.

50,000 + 30,000 பணியாளர்கள்

50,000 + 30,000 பணியாளர்கள்

இந்நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பின் படி 55,000 பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்திருந்தது. நேற்றும் மெக் வித்மேன் வெளியிட்ட அறிவிப்பில் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதிநிலையை மேம்படுத்தக் கூடுதலாக 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிய நிறுவனங்கள்
 

புதிய நிறுவனங்கள்

ஹீவ்லெட் பக்கார்ட் கோ ஆக இருக்கும் இந்நிறுவனம் ஹெச்.பி இன்க் மற்றும் ஹீவ்லெட் பக்கார்ட் எண்டர்பிரைசர்ஸ் ஆகப் பிரிக்கப்பட உள்ளது.

இதில் ஹெச்.பி இன்க் நிறுவனம் கம்பியூட்டர் மற்றும் பிரண்டர் வர்த்தகத்தையும், ஹீவ்லெட் பக்கார்ட் எண்டர்பிரைசர்ஸ் வன்பொருள் மற்றும் மென்பொருள் வர்த்தகத்தையும் கவணிக்க உள்ளது.

செலவீன குறைப்பு

செலவீன குறைப்பு

ஹெச்.பி நிறுவனம் அறிவித்துள்ள பணிநீக்க அறிவிப்பின் மூலம் வருடத்திற்குச் சுமார் 2.7 பில்லியன் டாலர் நிதியைச் சேமிக்க உள்ளது.

பணியாளர்கள் நிலை..

பணியாளர்கள் நிலை..

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் புதிய நிறுவனங்களைத் தொடர்ந்து கைபற்றி வந்த நிலையில் இதன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாகக் காரணத்தினால் நிறுவனத்தின் லாபகரமான நிலையை இழந்து வருகிறது.

இதனைச் சமாளிக்கவே தொடர்ந்து ஊழியர்களை அதிகளவில் பணி நீக்கம் செய்து வருகிறது.

உலகப் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரத்தை பாதிக்கப்போவது சீனாவின் வீழ்ச்சி மட்டுமல்ல, இன்னும்...!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HP to cut up to 30,000 more jobs in enterprise business

Hewlett-Packard Co, which is splitting into two listed companies later this year, it expects to cut another 25,000 to 30,000 jobs in its enterprise business. On top of layoffs of 55,000 workers previously announced under Chief Executive Officer Meg Whitman.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X