Huawei அதிரடி! சாம்சங்கையே தூக்கி சாப்பிட்டு உலகின் நம்பர் 1 கம்பெனியான ஹுவாய்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"கற்றது கையளவு, கல்லாதது செல்லளவு"என வேடிக்கையாக ஒரு வசனத்தைக் கேட்டு இருப்போம். அது இன்று முற்றிலும் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது

Recommended Video

Samsung to stop main production in China

உலக அளவில், இன்று ஸ்மார்ட்போன் மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் செல்போன்கள் வந்த 25 ஆண்டுகளில் தான் ஒரு மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியையே நாம் பார்க்க முடிந்தது.

ஆக செல்போனின் முக்கியத்துவம் மற்றும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை எல்லாம் நாம் இங்கு விளக்கப் போவதில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் போட்டி போடும் கம்பெனிகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

நம்பர் 1 சீனாவின் ஹுவாய் (Huawei)

நம்பர் 1 சீனாவின் ஹுவாய் (Huawei)

உலக அளவில், அதிகமாக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனமாக, சீனாவைச் சேர்ந்த ஹுவாய், முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. இது கடந்த ஏப்ரல் 2020 - ஜூன் 2020 வரையான காலாண்டு கணக்காம். இதை ஸ்மார்ட்போன் துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான கனலிஸ் (Canalys) சொல்லி இருக்கிறது.

சாம்சாங்கையே முந்திட்டாங்க

சாம்சாங்கையே முந்திட்டாங்க

இதுவரை உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வந்த சாம்சங் கம்பெனியை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைச் செய்து இருக்கிறது சீனாவின் ஹுவாய். சாம்சங் இந்த ஜூன் 2020 காலாண்டில் 53.7 மில்லியன் ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்று இருக்கிறார்களாம்.

ஹுவாய் அதிகம்

ஹுவாய் அதிகம்

சீனாவின் ஹுவாய் கம்பெனி, இந்த ஜூன் 2020 காலாண்டில், 55.8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருக்கிறார்களாம். அமெரிக்க தடை, ஹுவாய் நிறுவன வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், ஹுவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உள்நாட்டில் (சீனாவில்) டிமாண்ட் அதிகரித்து இருக்கிறதாம். ஹுவாய் முதல் இடத்தைப் பிடிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாம்.

சீனாவில் எப்படி

சீனாவில் எப்படி

உலக அளவில் விற்கப்படும், ஒட்டு மொத்த ஹுவாய் ஸ்மார்ட்ஃபோன்களில், 70 சதவிகித ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமே விற்பனை ஆகிறதாம். சீனா போன்ற பெரிய சந்தையில், தென் கொரியாவின் எலெக்ட்ரானிக் ஜாம்பவானான, சாம்சங் கம்பெனிக்கு அவ்வளவு பெரிய விற்பனை இல்லை எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வெளிநாட்டு வியாபாரம்

வெளிநாட்டு வியாபாரம்

பல்வேறு உலக பிரச்சனைகள் மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சனைகளால், ஹுவாய் நிறுவனத்தின் ஏற்றுமதி 3-ல் ஒரு பங்கு குறைந்து இருக்கிறதாம். எனவே, வெறுமனே சீன சந்தையை வைத்துக் கொண்டு, உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் விற்பனையாளராக நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறது கனலிஸ் (Canalys). உலக பொருளாதாரம் வழக்கம் போல செயல்படத் தொடங்கினால் ஹுவாய் பின் சீட்டுக்குத் தள்ளப்படும் எனவும் எச்சரித்து இருக்கிறது.

9 ஆண்டுகளில் முதல் முறை

9 ஆண்டுகளில் முதல் முறை

கடந்த 9 ஆண்டுகளாக, சாம்சங் தான் உலக அளவில் அதிகம் ஸ்மார்ட்போன்களை விற்கும் நிறுவனமாக வலம் வந்து கொண்டு இருந்ததாம். ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு காலாண்டில் சாம்சங்கை பின்னுக்குத் தள்ளி வேறு ஒரு கம்பெனி முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக கனலிஸ் (Canalys) கம்பெனி சொல்லி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Huawei surpassed Samsung now Huawei is the world's biggest smartphone seller

Now, Huawei the china's smartphone maker is the biggest smartphone seller in the world. Huawei beat Samsung in the race.
Story first published: Saturday, August 1, 2020, 11:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X