ஒரே காலில் 900 பேரை பணி நீக்கம் செய்த CEO-வின் மோசமான பேச்சு.. அதிருப்தியில் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெட்டர்.காம் நிறுவனம் பற்றி அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பணி நீக்கத்திற்காக ஒரு நிறுவனம் பிரபலமானது எனில் அது பெட்டர் காம் ஆகத் தான் இருக்க முடியும். இது பணி நீக்கம் என்பதை விட, இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்த விதம் பலரின் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த ஜும் காலில் நீங்கள் இருந்தால் துரதிஷ்டவசமானவர். ஏனெனில் இந்த நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில் நீங்களும் ஒருவர். இந்த நிமிடத்தில் இருந்து நீங்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என, சில நிமிடங்களில் 900 பேரை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தது இந்த நிறுவனம்.

3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்! 3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

இந்த நடவடிக்கை மேற்கொண்டவர் தான் பெட்டர்,.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க்.

 சலசலப்பு

சலசலப்பு

ஆரம்பத்தில் இதனால் பல சர்ச்சைகளில் சிக்கிய கார்க், பின்னர் நிறுவனத்தினை விட்டு வெளியேறியதும், அதன் பின்னர் மீண்டும் நிறுவனத்திற்கு திரும்பியதும் பழைய கதை. இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்த விதம் மட்டும் அல்ல, அதற்காக இந்த நிறுவனம் சொன்ன காரணமும் ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது.

பெட்டர்.காம் பணி நீக்கம்

பெட்டர்.காம் பணி நீக்கம்

இதற்கிடையில் ஊழியர்களின் பணி நீக்கம் தொடர்பான கூட்டத்தில், பெட்டர்.காம் நிறுவனத்தின் CFO கெவின் ரியானின் பேச்சும் வெளியாகியுள்ளது. இது இந்த நிறுவனத்தின் பணி நீக்கம் தொடர்பான சர்ச்சையை உறுதிப்படுத்தும் விதமாக வந்துள்ளது. டெக் கிரன்சால் பெறப்பட்ட ஒரு வீடியோவில் கார்க் பணி நீக்கம் பற்றி பேசுவதையும்., அதில் பல தவறுகளை ஒப்புக் கொண்டதையும் அறிய முடிகிறது.

 தவறான தேர்வு
 

தவறான தேர்வு

மேலும் அதில் கார்க் எந்த தவறும் செய்யாதீர்கள், நாங்கள் தேவையற்றவர்களை பணி நீக்கம் செய்துவிட்டோம். அவர்கள் வலுவான திறமையானவர்களாக இருக்கலாம். ஆனால் தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான பணியில் இருந்தனர். ஆக அவர்கள் பணிக்கு முக்கியமானவர்கள் அல்ல என கூறிய கார்க், தொடர்ந்து இந்த பணி நீக்கங்களுக்கு மத்தியிலும், நிறுவனம் பணியமர்த்த தொடங்கியுள்ளது. நாங்கள் நல்ல திறனுள்ள ஊழியர்களை எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாவிட்டால் அவர்களை வெளியேற்றுவோம் என்ற தோணியில் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மோசமாக இருக்கலாம்

மோசமாக இருக்கலாம்

அடுத்த சில ஆண்டுகளுக்கு அடமான கடன் துறையானது மிக மோசமான துறையாக இருக்கலாம். ஆக மூலதனத்தினை திரட்டுவதை விட, சரியான பாதையில் வணிகத்தினை முன்னெடுத்து செல்வது அவசியம். ஆக இதற்காக நாங்கள் நேரத்தினை செலவிடுவோம் என கார்க் தெரிவித்துள்ளார்.

$200 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்

$200 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கலாம்

மேலும் கிட்டதட்ட 8 நிமிட வீடியோவில் நிறுவனம் நிர்வாகம் பணத்தினை நிர்வகிப்பதிலும், பணியமர்த்தல் யுக்தியிலும் சரியான வழியினை பின்பற்றவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். 900 பேரை பணி நீக்கம் செய்த பெட்டர்.காம், அதன்பிறகு 3000 பேரையும் பணி நீக்கம் செய்தது. இதற்கிடையில் தான் தற்போது நாங்கள் தவறான நபர்களை பணியமர்த்தியதை ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் அதில் தோல்வியடைந்து விட்டோம். கடந்த 18 மாதங்களாக நான் அதனை ஒழுங்குபடுத்தவில்லை. கடந்த ஆண்டில் 250 மில்லியன் டாலர் சம்பாதித்தோம். அதேபோல நாங்கள் 200 மில்லியன் டாலரினை வீணடிருத்திக்கலாம் என கூறியுள்ளார்.

இது எனது தவறு?

இது எனது தவறு?

முந்தைய காலாண்டில் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை இழந்திருக்கலாம். ஊழியர்களை முன்னதாக பணி நீக்கம் செய்யாதது எனது தவறு என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார். இன்று நாங்கள் என்ன செய்தோமோ அதனை மூன்று மாதத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பல ஆயிரம் ஸ்டார்ட் அப்கள் தோல்வி

பல ஆயிரம் ஸ்டார்ட் அப்கள் தோல்வி

இதே இது குறித்து ரியான் பேசுகையில் ஒரே வாரத்தில் நிறைய நிதியினை திரட்டுவதும், நிறைய பேரினை பணி நீக்கம் செய்வதும் முரனானது என்று கூறுபவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஸ்டார்ட் அப்கள் தோல்வியும் அடைகின்றன.ஆக ஓரு சிறந்த நிர்வாக குழுவாக, நாங்கள் நிறுவனத்தினை சரியான இடத்திற்கு கொண்டு செல்ல பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

விடியலுக்கு முன்பு உள்ள இருட்டு போல

விடியலுக்கு முன்பு உள்ள இருட்டு போல

வணிகத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். வணிக வளர்ச்சி என்பது சரிவில் இருக்கும் இந்த நிலையில், லாபத்திற்கான நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம். ஆக பெட்டர் காம் பற்றிய குற்றச்சாட்டுகள் என்பது விடியலுக்கு முன்பு உள்ள இருட்டை போல இருக்கிறது என்றும் கூறியுள்ளார். 2022ம் ஆண்டில் இந்த தொழிலில் பல அழுத்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் வளர்ச்சியடைவோம். இது கடினமான பாதை தான். ஆனால் நாங்கள் கடந்து செல்வோம் என ரியான் கூறியுள்ளார்.

இது உண்மையா?

இது உண்மையா?

எனினும் இது குறித்து பெட்டர்.காம் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இதன் நம்பகத் தன்மை என்பது குறித்தும் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் நிறுவனம் இதற்கு எதுவும் மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் இந்த வீடியோவினை பல முன்னாள் ஊழியர்களும் விவரித்து வருகின்றனர் (இது டெக் கிரன்ச் தளத்தில் வெளியான பதிவின் அடிப்படையில் எழுந்தப்பட்டது).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I made a mistake. May have been fired earlier: says Better.com CEO

I made a mistake. May have been fired earlier: says Better.com CEO/பெரும் தவறு செய்துவிட்டேன்.. முன்னரே பணி நீக்கம் செய்திருக்கலாம்..பெட்டர்.காம் CEO ஷாக்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X