ரூ.800 கோடி பரிசு வேண்டுமா..? என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்..! ஆனா ஒரு கண்டிஷன்..!

By G P Subramanian
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கான சுதந்திரம், ஆண்கள் வரையும் வட்டத்துக்குள் தான் என உறுதியாக நம்புபவர்கள், பெண்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்யக் கூடாது, இந்த ஆடைகளை எல்லாம் உடுத்தக் கூடாது, பொது இடங்களில் இப்படி பேசக் கூடாது, இப்படி நடக்கக் கூடாது... என பட்டியல் வாசிக்கும், அதீத முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் தயவு செய்து இந்த கட்டுரையைப் படிக்காதீர்கள்.

 

உலகில் ஒரு மகளைப் பெற்றெடுத்த தகப்பனுக்கு அதிகபட்சம் என்ன ஆசை இருக்கும். நன்றாக சம்பாதிக்க வேண்டும். மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். மாப்பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் போன்ற இத்தியாதிகள் தானே..?

அதே தான் சீனாவில் ஒரு பணக்கார அப்பனுக்கும் ஆசை. ஆனால் அதற்கு மகள் இடம் கொடுக்கவில்லை. என்ன பிரச்னை. ஏன் இந்த பணக்கார தகப்பனின் கதையை நாம் இங்கு படிக்க வேண்டும்...?

விமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. இத்தாலியில் 500 விமானங்கள் ரத்து.. கடுப்பில் பயணிகள் விமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. இத்தாலியில் 500 விமானங்கள் ரத்து.. கடுப்பில் பயணிகள்

சரி Gigi chao விஷயத்துக்கு வருவோம்.

சரி Gigi chao விஷயத்துக்கு வருவோம்.

"என் மகள் Gigi Chao. என் பிசினஸ் வாரிசு. என் மகளின் மனதை மாற்றி, அவளை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு 800 கோடி ரூபாய் பரிசாகத் தருகிறேன். ஒரு தந்தையாக என் மகளின் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொடுக்க முயல்கிறேன் விருப்பமுள்ளவர்கள் தயவு செய்து அணுகவும்" இப்படித் தான் Gigi chao-ன் தந்தை Cecil Chao செப்டம்பர் 2012-ல் ஒரு பொது வெளியில் சொன்னார். ஏன் இப்படிச் சொல்கிறார்..? இந்த பெண் ஏன் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை..? வாங்க ஜி பாத்துருவோம்.

யார் இந்த சாவ்

யார் இந்த சாவ்

Cecil Chao ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த பெரும் பணக்காரர். Cheuk Nang Holdings Ltd என்கிற நிறுவனத்தின் சொந்தக்காரர். ஹாங்காங்கில் கப்பல் துறை, மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளை கம்கட்டில் வைத்து கசிக்கிக் கொண்டிருக்கும் பெரிய பிசினஸ் மேன். எல்லாம் கூரையை பிய்த்துக் கொண்டு லாபம் கொட்டும் பிசினஸ்கள் தான். வியாபார புலி அப்பா Cecil Chao நம்மூர் மல்லையா போல கொஞ்சம் ஜாலி டைப். பெண்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். பார்த்த உடன் பற்றிக் கொள்ளும். அள்ளி அணைத்துக் கொள்வார். "ஆமாங்க நான் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களோடு உறவு வைத்திருக்கிறேன்" என பொது வெளியில் ஓப்பனாக போட்டு உடைக்கும் அளவுக்கு தில் பார்ட்டி.

கதையின் நாயகி
 

கதையின் நாயகி

பத்தாயிரம் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் Cecil Chao-க்கு என்னவோ குறிப்பிட்ட 3 பெண்கள் மீது கொஞ்சம் கூடுதல் ஹோம்லி டைப் காதல் இருந்தது. wai yiu, Ying Ying,மற்றும் Terri Holladay ஆகிய 3 பெண்கள் மூலம் அவருக்கு 3 வாரிசுகள் பிறந்தனர். சீரும் சிறப்புமாக வளர்த்தெடுத்தார் நம் பணக்கார அப்பா சிசில் சாவ். சினிமா நடிகையான wai yiu-க்கு பிறந்தவர் தான் நம்ம கதையின் நாயகியான Gigi Chao. born with silver spoon என்பார்களே அதுபோல் பிறக்கும் போதே செல்வ செழிப்புடன் பிறந்தவர் தான் Gigi.

ஜெயம்

ஜெயம்

புலிக்கு பிறந்தது பூனையாக இருக்குமா..? சிசில் சாவின் வழியில் கிகி சாவ் பிசினசில் கலக்கினார். தொட்டதெல்லாம் தொடர் வெற்றி தான். கால் பட்டதெல்லாம் கிகியின் காண்டிராக்ட் தான் என பிசினசில் சிம்ம கர்ஜனை செய்தார். என் சாம்ராஜ்யத்தைப் பார்த்துக் கொள்ள ஒருத்தி வந்துவிட்டாள் என இல்லாத சீன மீசையை முறுக்கினார் சிசில் சாவ்.

காதல் ரசம்

காதல் ரசம்

அப்பா சிசில் சாவின் வழியில், கிகியும் காதலில் விழுந்தார். இதில் தான் ஒரு சின்ன ட்விஸ்ட். அப்பா ஆயிரம் பேரிடம் காதல் செய்தார், மகளோ மனமுருகி ஆயிரத்தில் ஒருத்தியைக் காதல் செய்தாள். மீண்டும் படித்துப் பாருங்கள் ஒருத்தியை. ஆம் ஒரு பெண்ணை காதல் செய்தாள். விஷயம் தெரிந்த உடன் கொதித்துவிட்டார் அப்பா சிசில் சாவ். Gigi Chao விழுந்து விழுந்து காதலித்தது தன் பாலினத்தை சேர்ந்த Sean Eav என்ற பெண்ணைத் தான். அப்பா இந்திய எதிர்கட்சி போல கடுமையாக எதிர்த்தார்.

கண்கலங்கிய பார்ட்னர்

கண்கலங்கிய பார்ட்னர்

ஆனால் Gigi Chao தன் காதலையை விட்டுக் கொடுக்கவில்லை. தன் காதலி Sean Eav-வுடன் 9 ஆண்டுகள் தைரியமாக வாழ்ந்தார். இதற்கிடையே Cecil Chao தனது மகளுக்கு எப்படியாவது ஒரு ஆணை கல்யாணம் செய்து வைக்க காய்களை நகர்த்திக் கொண்டே இருந்தார். Gigi-க்கு திருமண ஏற்பாடு நடப்பதை பார்த்த sean eav கண்கலங்க தொடங்கினார். "நீ என்ன விட்டு போயிடுவியா கிகி" என ஒரு வார்த்தை விட்டாள். Gigi Chao சுக்கு நூறாகிப் போனாள். 2011 - 12 ஆண்டு வாக்கில், தன் காதலி கண் கலங்குவதை தாங்க முடியாத Gigi Chao உடனடியாக பிரான்சுக்கு அழைத்து சென்று மூன்று முடிச்சு போட்டு விட்டார். அதாங்க கல்யாணத்தை முடிச்சுட்டார்.

lgbt மக்கள்

lgbt மக்கள்

ஆசியாவில் தைவானுக்கு அடுத்தப்படியாக LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) மக்களுக்கு ஆதரவு அளிப்பது யார் என்று பார்த்தால் அது ஹாங்காங்தான். ஆனால் சீனாவின் ஆதிக்கத்தில் ஹாங்காங் இருப்பதால் அங்கு ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது. அதனால் Gigi Chao தனது பெண் பார்ட்னர் Sean Eav-வை பிரான்சுக்கு அழைத்து சென்று கெட்டி மேளம் கொட்டி விட்டார்.

கல்யாண பரிசு

கல்யாண பரிசு

gigi-ன் அதிரடி திருமணத்தால் முதலில் Cecil Chao சிறிது அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் விட்டேன்னா பார் என்று Cecil Chao 2012-ல் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பைத் தான் நாம் முதல் பத்தியில் படித்தோம். "என் மகள் Gigi Chao. என் பிசினஸ் வாரிசு. தவறான சேர்கைகளால் ஓரினச் சேர்க்கைவாதியாக வாழ்கிறாள். என் மகளின் மனதை மாற்றி, அவளை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு 50 கோடி ஹாங்காங் டாலர் (440 கோடி ரூபாய்) பரிசாகத் தருகிறேன். ஒரு தந்தையாக என் மகளின் வாழ்கையை சரியாக அமைத்துக் கொடுக்க முயல்கிறேன் விருப்பமுள்ளவர்கள் தயவு செய்து அணுகவும்" இப்படித் தான் Gigi chao-ன் தந்தை Cecil Chao செப்டம்பர் 2012-ல் ஒரு பொது வெளியில் சொன்னார்.

ரெஸ்பான்ஸ்

ரெஸ்பான்ஸ்

அந்த அறிவிப்பை கேட்ட கட்டிளம் காளைகள், பணத்தாசை பிடித்த இளைஞர்கள், உண்மையாகவவே Gigi Chao-வை திருமணம் செய்து கொள்ள விரும்பியவர்கள் என...... போட்டி போட்டுக் கொண்டு சுமார் 10,000 பேர் களத்தில் இறங்கினர். ஆனால் Gigi-க்கு யாரையும் பிடிக்கவில்லை. Sean Eav-ன் அன்பும் காதலுமே Gigi Chao-க்கு போதுமானதாக இருந்தது. வந்த எல்லோரையும் அவளால் நண்பர்களாக, நல்ல மனிதர்களாக, பிசினஸ் திறமைசாலிகளாக பார்க்க முடிந்ததே தவிர வாழ்கை துணையாகப் பார்க்க முடியவில்லை.

தொழிலுக்கு வாரிசு வேணும்

தொழிலுக்கு வாரிசு வேணும்

அப்பா Cecil Chao விடுவதாக இல்லை. மீண்டும் 2014ம் ஆண்டில் மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். "எனது மகளின் சுதந்திரமான வாழ்க்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இருப்பினும் எனது தொழிலை வழிவழியாக நடத்த எனது வாரிசின் மூலம் குழந்தைகள் தேவை. ஆகையால் எனது மகளுக்கு ஒரு அழகான ஆண் மகனை திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். எனது மகளின் மனதை கவரும் அந்த ஆண்மகனுக்கு பரிசாக நூறு கோடி ஹாங்காங் டாலர் (887 கோடி ரூபாய்) தரப்படும்" என Cecil Chao அறிக்கை வாசித்தார்.

பரிதாபம்

பரிதாபம்

இந்த அறிவிப்பை கேட்டு இந்த முறை 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த முறையும், வந்திருந்த எந்த ஆணாலும் Gigi Chao-ன் மனதை ஒரு சீன குண்டூசி அளவும் மாற்ற முடியவில்லை. மாறாக அப்பா மீது பரிதாபமும், தன்னை கொஞ்சம் கூட அப்பா புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையே என வருத்தமும் தான் மேலிட்டது நம் நாயகி Gigi Chao-க்கு. பேனா எடுத்தார். தன்னை பிசினஸ் புலியாக்கிய தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார்.

கடிதத்தில் குண்டு

கடிதத்தில் குண்டு

அன்புள்ள அப்பா, நான் சியானை விரும்புகிறேன். அவள் நல்ல வேலையில் இருக்கிறாள். என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறாள். நான் சாப்பிட்டேனா, நான் குளித்தேனா, எனக்கு தேவையானதை எல்லாம் கொடுத்துவிட்டேனா என ஒவ்வொரு நிமிடமும் என்னை தன் கதகதப்பான அன்பில் என்னை தொய்த்து எடுக்கிறாள். அவள் என் வாழ்வின் ஒரு பெரிய அங்கமாகிவிட்டால். முன்பை விட இப்போது நான் ஒரு நல்ல மன நிலையில் இருப்பதற்கு அவளும், அவள் காதலும் தான் காரணம். உங்கள் மகளாகிய நான், ஒரு லெஸ்பியன் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனக்கானவர்கள் அல்ல

எனக்கானவர்கள் அல்ல

உலகில் நான் விரும்பும் அளவுக்கு தகுதியான, திறமையான ஆண்கள் இல்லாததால் தான் நான் லெஸ்பியனாக வாழ்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள். அது முற்றிலும் தவறு. இங்கு நிறைய நல்ல ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எனக்கானவர்கள் அல்ல... நான்... ஒரு லெஸ்பியன்... என அழுத்தமாகவும் அன்பாகவும் தந்தை Cecil Chao-க்குச் சொன்னாள் மகள் Gigi Chao. அது மட்டுமில்லாமல் lgbt சமூகத்தினர் நடத்தும் போராட்டங்களிலும் வெளிப்படையாக தலை காட்டத் தொடங்கினாள் Gigi Chao. மீடியா தீ பற்றிக் கொண்டது.

காத்திருக்கும் பரிசு தொகை

காத்திருக்கும் பரிசு தொகை

காலங்கள் உருண்டோடுகின்றன. ஆனால் அப்பாவும், மகளும் அப்படியேத் தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் Cecil Chao தன் தள்ளாத 82 வயதிலும் தனது மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார். எப்படியேனும் ஒரு ஆண்மகனை தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தால் தான், தன் கட்டை வேகும் என மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார். மறு பக்கம் Gigi-யும் தான் ஒரு லெஸ்பியன் என்பதில் தீவிரமடைந்து கொண்டே வருகிறாள்.

வட்டி

வட்டி

இன்னொரு பக்கம் தன் மகளை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளைக்கு கொடுக்க, எடுத்து வைத்த 800 கோடி ரூபாய் பரிசுத் தொகை வட்டி போட்டு, வட்டிக்கு குட்டி போட்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பா சிசில் சாவின் கவலை போல. நம்மவர்களுக்கு யாருக்காவது கல்யாண வரதட்சணை மூலம் செட்டில் ஆகும் ஐடியா இருந்தால், Gigi Chao-க்கு அப்ளிகேஷன் போட்டுப் பாருங்களேன்.

Gigi Chao-க்கு சமர்ப்பணம்

Gigi Chao-க்கு சமர்ப்பணம்

பெரும்பாலான ஆசிய நாடுகள், இதுவரை ஒற்றைப் பாலின திருமணத்துக்கு ஆதரவு அளிக்காமல் இருந்து வந்தன. ஆனால் சமீபத்தில் ஆசியாவிலேயே ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு என்கிற பெருமையை தைவான் தட்டிச் சென்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கு அரசு சட்டப்பூர்வமாக உதவும் என்றும், அந்த திருமணங்களை அரசு வழியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றது தைவான் அரசு. இந்த முன்னேற்றத்தை நம் Gigi Chao-க்கும், Gigi chao-வின் பாலின விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத அவரின் அப்பா Cecil chao-க்கும் சமர்பிக்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

if you marry my daughter gigi chao i will gift you 800 crore rupees

if you marry my daughter gigi chao i will gift you 800 crore rupees. it is still there, if anyone wants to marry her you may..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X