வாஷிங்டன்: இந்திய அரசு வெளி சந்தை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் உளவும் போலியான பொருட்களின் மீது நியாயமான நடவடிக்கை எடுப்பதில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் நாட்டின் பல முக்கிய சந்தைகளில் போலியான பொருட்களை வியாபாரிகள் வெளிசந்தையில் சர்வ சாதாரணமாக விற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) அமைப்பு கூறுகையில் இந்தியாவில் பல முக்கிய சந்தைகளில் உளவும் போலி பொருட்களின் மீது இந்திய அரசு எந்த விதமான நியாமான நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு இந்தியவிடம் அறிவுசார் சொத்துரிமை பாதுகாத்தல் மற்றும் அமலாக்கம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டில் உளவும் போலி பொருட்களை தடுக்கவும், வெளிச் சந்தை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் வருவதை தடுக்கவும் கேட்டுக்கொண்டு வருகிறது.
மேலும் இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாத்தல் மற்றும் அமலாக்க பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications