இப்படி வேலை பறிபோனா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்? அதிர்ஷ்ட மழையில் சிபு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் நோய் தாக்கி மக்கள் கொத்து கொத்தாக மரணிப்பது ஒரு பக்கம் என்றால், கொரோனாவின் பொருளாதார தாக்கத்தால், பார்த்துக் கொண்டிருந்த வேலை எல்லாம்
பறி போய்க் கொண்டு இருக்கிறது.

அப்படித் தான் சிபுவுக்கும் வேலை பறி போய்விட்டது. ஆனால் அதிர்ஷ்ட தேவதை சிபுக்கு முழு ஆசிர்வாதம் கொடுத்து இருக்கிறாள்.

என்ன தேவதை? என்ன ஆச்சு? சிபு யார்? அவர் வேலை ஏன் பறி போனது? என பல கேள்விகள் எழுகிறதா? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சிபு ஜோடி

சிபு ஜோடி

சிபு மற்றும் லின்னட் ஜோசஃப் என்கிற திருமண தம்பதிகள், இங்கிலாந்தில் இருக்கும் நாட்டிங்கம் (Nottingham) என்கிற பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த ஊர் கேரளத்தின் கோட்டயம். மனைவி லின்னெட் ஜோசப் நாட்டிங்கம் மருத்துவமனையிலேயே செவிலியராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.

வேலை காலி

வேலை காலி

கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கோடிக் கணக்கான மக்களில் சிபுவும் ஒருவர். ஒலிப் பொறியாளரான (Sound Enineer) சிபுக்கு வேலை பறி போய்விட்டது. வேலை தேடி இங்கிலாந்திலேயே அலைந்து கொண்டு இருந்தார். ஆனால் அதிர்ஷ்ட தேவதை, வேலை பறி போன பின் தான் சிபுவைப் பார்த்து சிரித்து இருக்கிறாள்.

போகிற போக்கில் செய்தது

போகிற போக்கில் செய்தது

கடந்த 1999-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களில் எல்லாம் Best of the Best (BOTB) என்கிற பெயரில் லாட்டரி நடத்திக் கொண்டு இருக்கிறார்களாம். இதுவரை சிபு 3 முறை கலந்து கொண்டாராம். கடந்த முறை இந்த லாட்டரி படிவங்களை எல்லாம் நிரப்பியதையே மறந்துவிட்டாராம். அப்படி மறந்து போன லாட்டரி மூலம் தான் அதிர்ஷ்டம் கதவைத் தட்டி இருக்கிறது.

கதவைத் தட்டிய அதிர்ஷடம்

கதவைத் தட்டிய அதிர்ஷடம்

சிபுவின் மனைவி லின்னட் ஜோசப் தன் இரவுப் பணியை முடித்துவிட்டு, ஒரு குட்டி தூக்கப் போட்டுக் கொண்டிருந்த போது யாரோ கதவைத் தட்டி இருக்கிறார்கள். திறந்து பார்த்தால் "வாழ்த்துக்கள் மேடம் நீங்க 1.95 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள லாம்போர்கினி கார் ஜெயிச்சி இருக்கீங்க" என Best of the Best (BOTB) அமைப்பினர் சொல்லி இருக்கிறார்கள்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

தூக்கத்தில் இருந்து துள்ளி குதித்த சிபு & அவ்ர் மனைவி லின்னட் ஜோசப்-ஐ Best of the Best (BOTB) அமைப்பினர்கள் அழைத்துச் சென்று லாம்போர்கினி காரின் டிக்கியைத் திறக்கச் சொல்லி இருக்கிறார்கள். டிக்கியில் 20,000 பவுண்ட் மதிப்புள்ள காசோலை இருந்து இருக்கிறது. இதைப் பார்த்ததும் இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்டார்கள் சிபு லின்னட் ஜோசப் தம்பதியினர்கள்.

பரிசு லாம்போர்கினி கார்

பரிசு லாம்போர்கினி கார்

அந்த 6 - 7 பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு கொண்ட லாட்டரி தான், சிபுக்கு 1,95,000 பவுண்ட் மதிப்புள்ள லாம்போர்கினி காரையும், 20,000 பவுண்ட் மதிப்புள்ள ரொக்கப் பரிசையும் கொடுத்து இருக்கிறது. எப்போது வேலை கிடைத்து மீண்டும் பழைய நிலைக்கு வருவோம் என ஏங்கிக் கொண்டிருந்த சிபு, இந்த பரிசால் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார்.

கார் வேண்டாம்

கார் வேண்டாம்

இந்த Best of the Best (BOTB) லாட்டரியில் வெற்றி பெறுபவர்கள், விருப்பப்பட்டால், லாம்போர்கினி காருக்கு பதில், பணத்தையே பரிசாகப் பெற்றுக் கொள்ளலாமாம். சிபுவும், லின்னட் ஜோசப்பும் காருக்கு பதிலாக பணத்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களாம். இந்திய மதிப்பில் சுமாராக 2 கோடி ரூபாய் பரிசு பெற்ற இந்த கேரள ஜோடி, தற்போது வரும் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்..?

வீடு தான்

வீடு தான்

இந்த பரிசு பணத்தை வைத்துக் கொண்டு, நாட்டிங்கம்மில் ஒரு வீடு வாங்க இருக்கிறார்களாம். இப்படி வேலை பறி போனால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என நம்மையே பகல் கனவு காண் வைக்கிறாது சிபு லின்னட் ஜோசப்பின் அதிர்ஷ்டக் கதை. எல்லோருக்கும் இப்படி நடந்துவிட்டால் பிறகு அதிர்ஷ்டத்துக்கு என்ன மரியாதை?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian couple won worth Rs 2 crore lottery in UK amidst COVID-19 job loss

The Lucky Indian couple won worth 2,10,000 pound sterling (Rs 2 crore) lottery in the United Kingdom amidst COVID-19. Now the couple is planning to buy house in nottingham.
Story first published: Monday, July 13, 2020, 17:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X