சீனா, தைவானில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்கள் கண்ணீர்.. ஏகப்பட்ட நஷ்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய முதலீட்டாளர்களும், முதலீட்டுச் சந்தையும் கடந்த 3 வருடமாக மிகப்பெரிய மாற்றத்தையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு இருக்கும் வேளையில், பல முன்னணி முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் கொரோனா காலத்தில் கூட லாபத்தைப் பார்த்த நிலையில் 2022ல் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு உள்ளது.

 

இதில் குறிப்பாக அமெரிக்காவின் பிளாக்ராக், ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் வரலாறு காணாத சரிவை எதிர்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் சீனா - தைவான் மத்தியிலான பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா - தைவான் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்களின் நிலை என்ன..?

குட்டி நாடு தான் தைவான்.. ஆனா சாதாரணமானது இல்ல..! குட்டி நாடு தான் தைவான்.. ஆனா சாதாரணமானது இல்ல..!

இந்திய முதலீட்டாளர்கள்

இந்திய முதலீட்டாளர்கள்

அமெரிக்கச் சந்தைகளில் இந்திய முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ள நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் அடங்கிய கிரேட்டர் சீனா பகுதிக்கு தங்களது முதலீட்டைக் கொண்டு சென்றனர். இந்தப் பிராந்தியத்தில் முதலீடு செய்த பலருக்கு நல்ல லாபம் கிடைத்தாலும், கடந்த சில வருடத்தில் சில தடுமாற்றங்கள் இருந்ததை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

சீனா - தைவான் பிரச்சனை

சீனா - தைவான் பிரச்சனை

இந்நிலையில் சீனா - தைவான் பிரச்சனைக்குப் பின்பு இச்சந்தையில் முதலீடு செய்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கவலைகள் அதிகரித்துள்ளது. சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய சந்தைகள் அடங்கிய கிரேட்டர் சீனா பிராந்தியத்தில் கவனம் செலுத்தும் மூன்று இந்திய பங்குத் திட்டங்கள் உள்ளன.

 ஆக்சிஸ், நிப்பான்
 

ஆக்சிஸ், நிப்பான்

ஆக்சிஸ் கிரேட்டர் சைனா ஈக்விட்டி பிப்ரவரி 2021 இல் தொடங்கப்பட்டது, இத்திட்ட முதலீட்டின் மதிப்பு ஆண்டு அடிப்படையில் 22% குறைந்துள்ளது. டிசம்பர் 2021 இல் தொடங்கப்பட்ட நிப்பான் இந்தியா தைவான் ஈக்விட்டி ஃபண்ட் இன்னும் மோசமாக உள்ளது. இது தொடங்கியதில் இருந்து 30% குறைந்துள்ளது.

சரிவு

சரிவு

2009 இல் தொடங்கப்பட்ட Edelweiss Greater China Equity 28% குறைந்துள்ளது. இந்த மூன்றில், வெளிநாட்டு முதலீடுகள் மீதான ஒழுங்குமுறை வரம்புகள் காரணமாக, புதிய முதலீடுகளுக்கு ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டின் திட்டம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன அரசு

சீன அரசு

இந்தப் பெரும் சரிவுக்குச் சீனா - தைவான் மட்டும் அல்லாமல் சீன அரசு கடந்த வருடங்களாக டெக் நிறுவனங்கள் மீதும், தனியார் நிறுவனங்கள் மீதும் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள், தடைகள் ஆகியவற்றினால் ஏற்பட்டது. தற்போது சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் இந்த 3 திட்டங்களின் இழப்பு 50 சதவீதத்தைத் தாண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian investors facing heavy loss on China - Taiwan region investments

Indian investors facing heavy loss on China - Taiwan region investments _சீனா, தைவானில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்கள் கண்ணீர்.. ஏகப்பட்ட நஷ்டம்..!
Story first published: Wednesday, August 10, 2022, 17:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X