ட்ரம்பு மீது வழக்கு, தில் காட்டும் இந்திய அமைப்பு. மோடிஜி என்ன பண்றீங்க?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவுல உலகப் புகழ் டொனால்ட் ட்ரம்பு பதவி ஏத்ததுக்கு அப்புறம் "அமெரிக்காவைச் சுற்றி சுவரைக் கட்டுவேன், வெளிநாட்டுக் காரர்களை வெறியேற்றுவேன்..."ன்னு நம்ம ட்ரம்பு கார சார விவாதங்களை கிளப்பிவிட்டுக் கிட்டே இருந்தார். வெறும் பேச்சுள இல்லாம நேரடியா வெளிநாட்டுக் காரரங்கள வெறியேற்ற குடியுரிமைச் சட்டங்கள்-ல சில மாற்றங்கள் கொண்டு வந்து பலரோட அமெரிக்க கனவுல பெட்ரோல் ஊத்தி கொளுத்திக் கிட்டு இருக்காப்புல.

இதுல இந்தியாவோட H1-B விசாக்காரங்க பிரச்னை மிகவும் குறிப்பிடப்பட வேண்டியவை.

 இந்தியர்கள்
 

இந்தியர்கள்

நமக்கு தெரிஞ்சா மாதிரி தாங்க, நம்ம ஐடி தோழர்கள் கிட்ட தட்ட 10 லட்சம் பேருக்கு மேலே அமெரிக்காவுல இந்த பாழா போன H1-B விசா எடுத்து தான் அமெரிக்கா போயிருக்காங்க. இப்ப இவங்களுக்கு என்ன பண்ணனும் H1-B விசா தேதி முடிஞ்சிருச்சுன்னா... திரும்ப அமெரிக்க குடியுரிமை அதிகாரிங்க கிட்ட போய் அப்ளிகேஷன் போட்டி கால நீட்டிப்பு வாங்கணும் இல்ல நம்ம ஊர பாத்து வந்துரணும். இந்த இடத்துல தான் நம்ம ட்ரம்பு விளையாடுறாரு.

ஒரிஜினல் சட்டம்

ஒரிஜினல் சட்டம்

ஒரு நபர் H1-B விசா எடுத்து அமெரிக்கா வந்துட்டாரு. ஒரு முறை H1-B விசா எடுத்தா, மூன்று வருஷத்துக்கு அமெரிக்காவுல வேல பாக்கலாம். அதுக்கு அப்புறம் அமெரிக்க குடியுரிமை அலுவலகமான US Citizenship and Immigration Services (USCIS), கிட்ட விசா கால நீடிப்பு கேட்டு அப்ளிகேஷன் போடணும். விசா கால நீட்டிப்பு கேட்டு வர்றவங்களுக்கு நேரடியாக 3 வருஷம் தான் கால நீட்டிப்பு கொடுக்கணும். இல்லன்ன "ஸாரி பாஸ் உங்களுக்கு கால நீட்டிப்பு கிடையாது"ன்னு அமெரிக்க குடியுரிமை அலுவலகம் சொல்லி திருப்பி அனுப்பணும். இப்படி அதிகபட்சம் ஒரு நபர் H1-B விசா மூலமா 6 வருஷம் மட்டும் தான் அமெரிக்காவுல இருக்க / வேல பாக்க முடியும். ஆக ஒரு முறை H1-B விசா வாங்கிட்டு மூனு வருஷம் முடிஞ்சு திரும்ப ஒரு முறை விசா கால நீட்டிப்பு அப்ளை பண்ணிட்டு அடுத்த 3 வருசம் வேலை பாத்துட்டு இந்தியாவுக்கு வந்துடணும். இது தான் உண்மையான சட்டம். இது நல்லாவும் போயிக்கிட்டு இருந்துச்சு. 2016 வரை.

பிரச்னை ஆரம்பம்
 

பிரச்னை ஆரம்பம்

இந்த சட்டப்படி இந்தியர்களும் ஒழுங்கா விசா காலம் முடியுறதுக்குள்ள, அமெரிக்க குடியுரிமை அதிகாரிங்க கிட்ட விசா கால நீட்டிப்புக்கு போய் நிக்க ஆரம்பிச்சாங்க. நம்ம ட்ரம்பு வந்தாரு. சரி இந்தியா காரணுங்க எல்லாம் ப்ரீமியம் அப்ளிகேஷன் தர்றாங்களா. (ப்ரீமியர் அப்ளிகேஷன்-னா நம்ம ஊர் தட்கல் மாதிரி. கொஞ்சம் பைசா செலவாகும். வேலை வேகமா முடியும்.) "கண்ணுகளா இனிமே ப்ரீமியம் அப்ளிகேஷன் கிடையாது. எல்லாருமே நாள் கணக்குல வரிசையில நின்னு தான் வேலை முடிச்சிக்கணும்"-ன்னு ட்ரம்பு அரசாங்கம் பொறுப் பேத்த கொஞ்ச மாசத்துலேயே அறிவிச்சுது நம்ம அமெரிக்க குடியுரிமை அலுவலகம்.

 அதிக ரிஜெக்சன்கள்

அதிக ரிஜெக்சன்கள்

அதோடு கடந்த (ஜூன் - செப்டம்பர்) 2018-ல நம்ம இந்தியா காரணுக 100 பேர் H1-B விசா கேட்டா அதுல 29 பேருக்கு தான் அனுமதி கொடுத்திருக்கு. பாக்கி உள்ள 71 பேருக்கும் போதிய ஆதாரம் இல்லை. H1-B விசா வாங்க தேவையான ஆதாரத்தோடு வாங்கன்னு தொரத்தி அடிச்சிருக்காய்ங்க நம்ம அமெரிக்க குடியுரிமை அலுவலகம். இந்தியாவுக்கு மட்டும் 71% ரிஜெக்சன். மத்த எல்லாம் உலக நாடுகளுக்கும் 61% ரிஜெக்சன். ஐயா ட்ரம்பு...என்ன வெறுப்பு..ய்யா எங்க மேல.

கலப்பட சட்டம்

கலப்பட சட்டம்

கெடுபுடிங்க பத்தாம நம்ம ட்ரம்பு அடுத்து ஒரு வேலைய பாத்து விட்டாரு. பிப்ரவரி 2018-ல அமெரிக்க குடியுரிமை அலுவலக விதிகள்-ல சில புதிய விதிகளைக் கொண்டு வந்தாங்க. அந்த விதிகள் படி

1. அமெரிக்க குடியுரிமை அதிகாரிங்க விசா கேட்டு வர்றவங்களுக்கு மூன்று வருஷம் தான் கால நீட்டிப்பு தரணும்-ன்னு அவசியல் இல்லை. எத்தனை நாள் இல்ல மாசம் வேணாலும் அதிகாரிங்க விருப்பப் படி தரலாம்.

2. அமெரிக்க குடியுரிமை அதிகாரிங்க H1-B விசா கால நீட்டிப்புக்கு வர்றவங்க கிட்ட முதலாளி- தொழிலாளி உறவை நிரூபிக்க தேவையான தஸ்தாவேஜ்கள், வேலை ஒப்பந்தங்கள், சம்பள ஆதாரங்கள் கேட்கலாம். ஆங்கிலத்துல Detailed customer contracts and itineraries of employees-ன்னு சொல்றாங்க. இந்த மொத்த டாக்குமெண்டுங்களும் அவங்களுக்கு சமர்பிக்கணும். இப்படி பல விதிகள புதுசா சேத்தாங்க.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் அமெரிக்க குடியுரிமை அலுவலகம் USCIS கொண்டு வந்தது "சட்ட திருத்தம் கிடையாது" வெறும் விதிகள்.

 புதிய விதிகள் பிரச்னை

புதிய விதிகள் பிரச்னை

இப்ப ஒவ்வொரு H1-B விசா ஊழியரும் அவங்க வேலை பாக்குற கம்பெனிக்கும், அவங்க Client கம்பெனிக்கும் மெயில் மேல மெயில், போன் மேல போன் போட்டு இந்த பிரச்னைங்கள தீர்க்க தேவையான டாக்குமெண்டுங்கள வாங்க வேண்டி இருக்கு. 1. H1-B விசாகாரங்களோட டிகிரி சான்றிதழ் 2. சம்பள கணக்கு ரசீது (Pay slip) 3. Work contract, appointment letter 4. ஒரு நிறுவனத்துல வேலை பாக்குற தொழிலாளி இன்னொரு Client கம்பெனிக்கு வேலை பாக்குறதுல தங்களுக்கு சம்மதம்முன்னு வேலை பாக்குறவங்களோடு கம்பெனி சான்றிதழ் இப்படி சும்மா சுத்தி சுத்தி அமெரிக்க குடியுரிமை அதிகாரிங்க டாக்குமெண்டு கேட்டு இந்தியருங்கள டார்சர் பண்றாங்க. இந்த Work contract எதுக்கு கேக்குறாங்கன்னா, வேலை எத்தனை மாசம் இருக்கோ அத்தனை மாசத்துக்கு மட்டும் தான் விசா கொடுக்கணும்ன்னு நம்ம குடியுரிமை அதிகாரிங்க முடிவு பண்ணிட்டாங்க. உதாரணமா ஒருத்தனுக்கு 20 மாசம் தான் வேலன்னா, அவனுக்கு 20 மாசம் கண கச்சிதமா விசா காலம்m கொடுப்பாங்க. முன்ன மாதிரி 36 மாசம் எல்லாம் தர மாட்டாங்க. இது எல்லாம் விதி 2-ன் படி நடந்த பிரச்னைங்க.

கொடுமையோ கொடுமை

கொடுமையோ கொடுமை

அத விட கொடுமையான விஷயம் விதி 1-ன் படி வழங்கபப்ட்ட கால நீட்டிப்பு. ஒரு மனிஷன் விசா கால நீட்டிப்புக்கு அப்ளை பண்ணி இருக்காப்புல அவருக்கு கொடுக்கப்பட்ட கால நீட்டிப்பு எவ்வளவு தெரியுமா 12 நாள். இன்னொருத்தருக்கு 56 நாள். பாஸ் நில்லுங்க. 56 நாள்... பிரச்னை தீர்க்க போதாதான்னு கேட்குறீங்களா...? அங்க தான் மேட்டரே இருக்கு. நம்ம இந்தியா காரருக்கு ஜூன் 15, 2018 விசா முடிஞ்சிருச்சு. அவர் நடையோ நடன்னு அமெரிக்க குடியுரிமை அலுவலகத்துக்கு நடந்து கால நீட்டிப்பு வாங்குன தேதி ஆகஸ்டு 29, 2018.

செம காமெடி-ல்ல

செம காமெடி-ல்ல

தெளிவா சொல்லணும்ன்னா... நம்ம அமெரிக்க குடியுரிமை அதிகாரிங்க ஜூன் 15, 2018-ல இருந்து ஆகஸ்டு 10, 2018 வரை அமெரிக்காவுல இருக்கலாமுன்னு ஆகஸ்ட் 29-ம் தேதி ஒரு இந்தியனுக்கு கால நீட்டிப்பு கொடுக்குது. எப்புடி காமெடி. அதாவது இவர் அமெரிக்காவுல ஜூன் 15, 2018 க்கு மேல இருந்தது தப்பு. ஆக இவர் ஆகஸ்டு 10, 2018 வரை இருந்தது இந்த கால நீட்டிப்பு மூலமா சட்டப் படி சரின்னு சொல்லி இருக்காய்ங்க. இப்ப ஆகஸ்டு 11, 2018-ல இருந்து இன்னக்கி வரைக்கு அமெரிக்காவுல சட்ட விரோதமா குடி இருக்கீங்க, அதுக்கு நாங்க நடவடிக்கை எடுப்போமுன்னு வெறுப்பேத்திக்கிட்டு இருக்காங்க நம்ம குடியுரிமை அதிகாரிங்க.

போராட்டம்

போராட்டம்

அமெரிக்காவுல செயல்பட்டு வர்றா ஒரு இந்திய வர்த்த சங்கம் தான், இப்ப அமெரிக்க குடியுரிமை அலுவலகத்தோட புதிய விதிகள் திருத்தம் செல்லாதுன்னு சொல்லி அமெரிக்க நீதி மன்றங்கள்ள வழக்கு தொடுத்து போராடிக்கிட்டு இருக்கு. இந்த விதிகள வெச்சு விசா நீட்டிப்பு வழங்கக் கூடாது, பழைய சட்டப் படி H1 B விசா கால நீட்டிப்பு வழங்கப்படணும்-ன்னு போராடிக்கிட்டு இருக்காங்க. அந்த அமைப்புக்கு வலு சேக்குற விதமா இந்திய அரசு எந்த உதவியும் இதுவரை செய்யலங்குறது தான் வருத்தம். ஒரு தனி மக்கள் குழு தன்னைக் காப்பாத்திக்க, தன்னோட தாய் நாட்டுக்கிட்டயும், தான் தொழில் செய்ற நாட்டுக்கிட்டயும் சட்டப் படி முறை இட்டுக்கிட்டு இருக்கு. ஆனா ரெண்டு நாடும் முந்திரி பக்கோடா சாப்டுக்கிட்டு எத்தனை ரவுண்டு பேசுவாங்கன்னு தெரியல. இன்னும் எத்தனை ப்ளேட் முந்திரி பக்கோடா வேணும்-ன்னு சொல்லுங்க சார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian trade association filed a law suit against USCIS new rules

Indian trade association filed a law suit against USCIS new rules
Story first published: Monday, October 15, 2018, 11:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more