என்ன டிரம்ப் சார் மிரட்டுன்னா பயந்துடுவோம்மா.. இது ஈரான், அமெரிக்கா இல்ல..உங்க பேச்ச கேட்கமாட்டோம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : ஒரு புறம் அமெரிக்கா - ஈரான் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தாலும், மறு புறம் ஒருவருக் கொருவர் ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதை நினைபடுத்திக் கொண்டே இருக்கும் வகையில் அறிக்கைகளை கொடுத்து வருகின்றனர்.

 

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே ஈரானை ஜென்மச் சனியாக விடாமல் ஈரானை துரத்திக் கொண்டே இருக்கிறார்.

ஒரு புறம் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா. ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும், அதோடு விட்டபாடில்லை. விட்ட குறை தொட்ட குறையாக இன்று வரை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதெற்கெல்லாம் மசிய மாட்டோம்?

இதெற்கெல்லாம் மசிய மாட்டோம்?

இதைவிட ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது. இந்த நிலையில் ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா உளவு விமானம்?

ஆளில்லா உளவு விமானம்?

கடந்த மாதம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததை அடுத்து அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தினர்கள். இதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாகவும் தகவல் வெளிவந்தது. பின்னர் தாக்குதலுக்கு தயாரான நிலையில், கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

இரண்டாவது முறை தடை?
 

இரண்டாவது முறை தடை?

ஏற்கனவே ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள டிரம், இந்த பிரச்சனைக்கு பின்னர் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். ஏற்கனவே பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஈரானுக்கு இது மேலும் பிரச்சனையை கூட்டியது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு?

செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு?

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு, 2015-ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை காட்டிலும் அதிகரித்து இருப்பதாக ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து ஜூலை 2-ம் தேதி ட்ரம்ப் கூறிய அறிக்கையில், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

முன்பை விட நாங்கள் வலுவாக தக்குவோம்?

முன்பை விட நாங்கள் வலுவாக தக்குவோம்?

அதனையடுத்து மீண்டும் இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜூலை3ம் தேதி அணு ஆயுத ஒப்பந்தம் இல்லை என்றால் நாங்கள் எவ்வளவு யுரேனியத்தை வேண்டுமானலும் வைத்திருப்போம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்திருந்தார். அவை மீண்டும் உங்களைத் தாக்கலாம். முன்பை விட அதிகமாகத் தாக்கலாம்." என்று தெரிவித்திருந்தார். இப்படியாக ஒரு புறம் அமெரிக்கா ஈரானை மிரட்டுவதும், ஈரானை அமெரிக்காவை மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இதனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயமே நிலை வருகின்றது.

சமாதானம் பேசும் முயற்சி?

சமாதானம் பேசும் முயற்சி?

இந்த யுரேனியம் செறிவூட்டல் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா, ஈரானை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தற்போது இறங்கியுள்ளார். யுரேனியம் உற்பத்தியில் ஆர்வம் செலுத்தி வரும் ஈரான் அரசு, கடந்த 2015ல் போடப்பட்ட ஒப்பந்தம் மீறி செயல்பட்டதாகவும் புகார் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கு இடையில் ஜூலை 15ம் தேதி நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நீயானா நானா? என்ற போட்டி நிலவி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்தால் சரியே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iran nuclear deal, Government announces enrichment breach

Iran nuclear deal, Government announces enrichment breach
Story first published: Sunday, July 7, 2019, 16:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X