ஐடி ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி.. என்ன அது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான்பிரான்சிஸ்கோ: உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில், பல லட்சம் பேர் வேலையிழந்து வருகின்றனர். ஆக இப்படி சூழ்நிலையில் நாங்கள் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்கப் போகிறோம். வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம்.

 

அதிலும் நல்ல சம்பளம், தரமான வேலை என கிடைத்தால் நீங்கள் எப்படி சந்தோஷப்படுவீர்கள்.

அதைத் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆக இதை விட ஜாக்பாட் ஆன விஷயம் என்ன இருக்கிறது ஐடி ஊழியர்களுக்கு.

முதலீடு & வேலை வாய்ப்பு உருவாக்கம்

முதலீடு & வேலை வாய்ப்பு உருவாக்கம்

இது குறித்து லைவ் மிண்டில் வெளியான செய்தியில், தொழில்நுட்ப ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனம், ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் அடுத்த ஆண்டுக்குள் 75 மில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் கிளவுட் துறையில் இது 1,500 வேலைகளை உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலகத்தினை விரிவுபடுத்துதல்

அலுவலகத்தினை விரிவுபடுத்துதல்

சத்யா நதெல்லாவின் பிரபல நிறுவனமான இது அட்லாண்டிக் நகரத்தில் 5,23,000 சதுர அடி வசதியில் விரிவுபடுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்ட அலுவலகம் 2021ம் ஆண்டின் கோடைகாலத்தில் திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் முன்பை விட அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியும். இது வாடிக்கையாளர்கள் அணுகும் இடமாகவும் இருக்கும்.

மிக்க மகிழ்ச்சி
 

மிக்க மகிழ்ச்சி

இதுகுறித்து ஜார்ஜியாவின் கவர்னர் பிரையன் பி கெம்ப் கூறுகையில், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அவர்களது டெக் நிறுவனத்தினை இங்கு விரிவுபடுத்துவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் இது எங்கள் மாநிலத்திற்கு உண்மையில் மிக பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு சிறந்த பணியிடம்

இது ஒரு சிறந்த பணியிடம்

மைக்ரோசாப்டின் புதிய வசதிகள் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பணியிடமாக இருக்கும். இது செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் துறையில் கவனம் செலுத்துகிறது. அதோடு வாடிக்கையாளர்களுடன் நேரடியாக ஈடுபடுவதற்கான சில்லறை இடமாகவும் இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அட்லாண்டா ஒரு வளமான கலாச்சாரத்தினையும் புதுமைகளின் வரலாற்றையும் கொண்டுள்ளது.

நம்பிக்கையை தரும்

நம்பிக்கையை தரும்

ஆக இது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு தனித்துவமான இடமாக அமைகிறது என்று மைக்ரோசாப்டின் பொது மேலாளர் டெரோல் மேலாளர் கூறினார். மேலும் நாங்கள் எங்களது இருப்பை விரிவுபடுத்துவதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் டெரோல் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் இது ஐடி ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட் தான். தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகள் இருக்குமா? என்ற கேள்விகளுக்கு இடையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது ஐடி ஊழியர்களுக்கு ஒரு நம்பிக்கையை தரும் எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT staffs has one good news, Microsoft to invest $75 million in creating 1,500 jobs

Microsoft announced to invest $75 million to build a new office at Atlanta, gergia, it may creating 1,500 jobs in AI, cloud.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X