கிரிப்டோகரன்சிக்கு அதிகரிக்கும் மவுசு.. வணிக கல்லூரியில் பயிற்சி திட்டமாக ஏற்க திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்துள்ளது. இன்று தங்கம், பங்கு சந்தைகளுக்கு சமமான ஒரு முதலீடாக மாறி வர தொடங்கியுள்ளது.

 

இருப்பினும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இது குறித்தான முழுமையான விழிப்புணர்வு இல்லை என்று தான் கூற வேண்டும்.

சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இது வாங்க சரியான நேரமா..!

அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி வணிகப் பள்ளிகளில் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள வார்டன் பள்ளி, கிரிப்டோகரன்சியை அதன் ஆன்லைன் பிளாக்செயின் மற்றும் டிஜிட்டல் அசெட்ஸ் திட்டத்திற்கான பயிற்சியாக ஏற்க திட்டமிட்டுள்ளது. இது உண்மையில் கிரிப்டோகரன்சி ஆர்வலர்களுக்கு மிக நல்ல விஷயம் எனலாம்.

தயக்கம் காட்டும் நாடுகள்

தயக்கம் காட்டும் நாடுகள்

கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் பணம் என்பதால், இதனை அதிகாரப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்க வளர்ந்த நாடுகள் கூட தயக்கம் காட்டுகின்றன. மற்ற சர்வதேச நாடுகளை போலவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி குறித்தான தாக்கம் இருந்தாலும், முழுமையாக இன்னும் முதலீட்டாளார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனலாம். இதற்கு முக்கிய காரணம் இதனை பற்றிய முழுமையான புரிதல் என்பது இல்லை என்பதே உண்மை.

கிரிப்டோவில் கட்டணம் செலுத்தலாம்

கிரிப்டோவில் கட்டணம் செலுத்தலாம்

இந்த நிலையில் அமெரிக்காவினை சேர்ந்த கல்வி நிறுவனம் இதனை கல்வித் திட்டமாக ஏற்றுக் கொள்ள திட்டமிட்டு இருப்பது வரவேற்கதக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஐவி லீக் நிறுவனத்தின் புதிய நிர்வாகக் கல்வித் திட்டத்திற்காக, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை கட்டணமாக செலுத்தும் ஒரு முறையை ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

எவ்வளவு கட்டணம்?
 

எவ்வளவு கட்டணம்?

ஜனவரியில் தொடங்கப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு 3,800 டாலர்கள் செலவாகலம் என கூறப்படுகிறது. இந்த கல்வியானது மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தினை தூண்டலாம் என்பதால், ஆண்டுக்கு பல ஆயிரம் மாணவர்களை ஈர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் சொத்து பற்றிய திட்டம்

டிஜிட்டல் சொத்து பற்றிய திட்டம்

இது குறித்து வார்டன் பள்ளியுடன் இணைந்து செயல்படவுள்ள பிரிஸ்ம் குழுமத்தின் நிர்வாக தலைவர் கைடோ மொலினாரி, இது பிளாக்செயின் மற்றும் டிஜிட்டல் சொத்துகளைப் பற்றிய ஒரு திட்டம். நாங்கள் பேசிக்கொண்டே நடக்க வேண்டும் என்று உணர்ந்தோம். இந்த டிஜிட்டல்-சொத்துகளை ஏற்க, அமெரிக்காவின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றமான Coinbase Global Inc.ஐ வார்டன் பயன்படுத்தும் என கூறியுள்ளார்.

மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

பல ஆண்டுகளாக, கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பல பல்கலைக்கழக சோதனைகலை நடத்தி வந்தன. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அதன் மாணவர்களுக்கு 2014ல் பிட்காயினை வழங்கியது. இந்த நிலையில் தற்போது மற்ற கல்லூரிகள் கிரிப்டோவைப் பயன்படுத்தி கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கதக்க விஷயம் என கூறியுள்ளார்.

மிகப்பெரிய நன் கொடை

மிகப்பெரிய நன் கொடை

கடந்த மே மாதத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் அதன் வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான கிரிப்டோகரன்சியை நன் கொடையாக பெற்றது. அதன் மதிப்பு 5 மில்லியன் டாலர்களாகும்.

வார்டன் கிரிப்டோகரன்சி சுற்றுச்சூழல் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பல குறிப்பிடத்தக்க ஆலிம்களையும் கொண்டுள்ளது. 1997ல் பட்டம் பெற்ற டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அவர் பிட்காயினில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் ஒரு காலகட்டத்தில் அதன் விலை ஏற்ற இறக்கத்தில் முக்கிய அம்சமாக இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ivy League college plans to accept crypto payment for one course

Cryptocurrency latest updates.. Ivy League college plans to accept crypto payment for one course
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X