40 ஆண்டு உச்சம்.. ஜப்பானை வதைக்கும் பணவீக்கம்.. காரணம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பல நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்த நிலையில், தற்போது பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஏற்கனவே இதனால் மந்த நிலைக்குள் நுழைந்துள்ளன.

பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவு மோசமான நிலையை எட்டி பணவீக்கம், பல நாடுகளிலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டியுள்ளது.

ஜப்பானின் முக்கிய நுகர்வோர் பணவீக்க விகிதமானது, கடந்த அக்டோபர் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

 முகேஷ் அம்பானி சம்பளம் பூஜ்ஜியம்.. கொரோனாவின் கொடூரம்..! முகேஷ் அம்பானி சம்பளம் பூஜ்ஜியம்.. கொரோனாவின் கொடூரம்..!

மோசமான விலையேற்றம்

மோசமான விலையேற்றம்

ஜப்பானில் நிலவி வரும் இந்த மோசமான நிலைக்கு மத்தியில் யென் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கோண்டு ஜப்பானுக்கு மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கமாடிட்டிகளின் விலையானது பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது.

நுகர்வு சரிய காரணம்

நுகர்வு சரிய காரணம்

இது பணவீக்கத்தினை மிக மோசமான அளவுக்கு தூண்டியுள்ளது. இது மக்கள் மத்தியில் நுகர்வினை குறைக்க வழிவகுத்துள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் நிறுவனங்கள் பலவும் பணவீக்கத்தினால் பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளன. விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் பெரும் சரிவினைக் கண்டுள்ளன.

 சிபிஐ விகிதம் உச்சம்

சிபிஐ விகிதம் உச்சம்

சர்வதேச அளவில் உணவு மற்றும் எரிபொருள் விலையானது உச்சத்தில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு சர்வதேச அளவில அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றன. இதற்கிடையில் தான் ஜப்பானின் சிபிஐ விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

சிபிஐ பணவீக்கம்

சிபிஐ பணவீக்கம்

இது ஜப்பானிய நிறுவனங்கள் படிப்படியாக அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், எரிபொருள் முதல் உணவு வரை அனைத்தின் விலைகளையும் படிப்படியாக உயர்த்துவதால் ஜப்பானிய நிறுவனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் பொருளாதார வல்லுனர்களால் எதிர்பார்க்கப்பட்ட லெவல் 3.5% ஆகும். எனினும் இது 3.6% ஆக உயர்ந்தது.

40 ஆண்டு உச்சம்

40 ஆண்டு உச்சம்

இந்த விகிதமானது 1982-க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஏற்றமாகும். இது தொடர்ந்து ஜப்பானின் பாங்க் ஆப் ஜப்பானின் பணவீக்க இலக்கு 2% ஆக இருப்பதையும் இது உறுதி செய்துள்ளது. எனினும் விரைவில் பணவீக்கம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய அளவில் தற்போது தானிய விலையானது குறையத் தொடங்கியுள்ள நிலையில், இது இனி வரும் மாதங்களில் பணி வீக்கம் குறைய வழிவகுக்கலாம்.

எரிபொருள் விலையை குறைக்க திட்டம்

எரிபொருள் விலையை குறைக்க திட்டம்

யென்-னின் மதிப்பு தற்போது சற்றே மீளத் தொடங்கியுள்ள நிலையில், ஜப்பான் அரசு நுகர்வோருக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாகவும், எரிபொருள் விலையினை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ஆண்டின் இறுதி வரையில் பணவீக்கம் என்பது உச்சத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத்தொகை கொடுக்க திட்டம்

ஊக்கத்தொகை கொடுக்க திட்டம்

இதற்கிடையில் நுகர்வானது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல கவலைகள் இருந்தாலும் பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டி விகிதத்தினை அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வரும் பொருளாதார நாடுகள், தற்போது பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால் அதிகரிக்கும் பலவீனமான பொருளாதார மந்த நிலையை ஆதரிக்க, ஜப்பான் மத்திய வங்கி பண ஊக்கத்தினை கொடுத்து ஆதரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

நடப்பு நிதியாண்டில் ஜப்பானின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 3% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சரக்கு மற்றும் பிற செலவினங்கள் பணவீக்கத்தினை உந்தியுள்ள நிலையில், இது அடுத்த நிதியாண்டில் பாதியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan's Inflation hits 40 year highest level in October

Japan's inflation rate hit a 40-year high. It is expected to reach 3% in the current financial year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X