சமாளிக்க முடியாது.. ஜப்பான் முடிவால் விளாடிமிர் புதின் ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியும் என்பதையும், இதன் விலை உயர்வு எந்த அளவிற்கு ஒரு நாட்டையும், வீட்டையும் பாதிக்கும் என்பதை தற்போது உலகம் முழுவதும் பாடமாக கற்றுக்கொண்டு வருகிறது.

குறிப்பாக ரஷ்ய உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய பின்பு பல நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த காரணத்தாலும், OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மறுத்த காரணத்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலக நாடுகளின் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில் ஜப்பான் முக்கியமான முடிவு எடுத்த நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

இந்தியா உக்ரைனின் ரத்தத்தினை வாங்குகிறது.. ரஷ்யா எண்ணெய் குறித்து ஆவேசம்..! இந்தியா உக்ரைனின் ரத்தத்தினை வாங்குகிறது.. ரஷ்யா எண்ணெய் குறித்து ஆவேசம்..!

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் நாட்டின் நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலின் படி, ஜப்பான் ஜூலை மாதம் முதல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய்

ரஷ்ய கச்சா எண்ணெய்

ஜப்பான் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உக்ரைன் போர் தொடர்பான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதைப் படிப்படியாகக் குறைத்த தொடங்கியதால் ஜூன் மாதத்தில் ஜப்பான் நாட்டின் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி பூஜ்ஜியமாகக் குறைந்தது.

 ஜப்பான் நிதி அமைச்சகம்

ஜப்பான் நிதி அமைச்சகம்

இதைத் தொடர்ந்து ஜப்பான் ஜூலை மாதம் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் துவங்கியது, அந்நாட்டின் நிதி அமைச்சகம் எவ்வளவு இறக்குமதி செய்கிறது என்பது குறித்துச் சரியான அளவை வெளியிடவில்லை என்றாலும், ரஷ்யாவிலிருந்து ஜூலை எண்ணெய் இறக்குமதி கடந்த ஆண்டு இதே காலத்தை விட 65.4% குறைவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஜூலையில் உயர்வு

ஜூலையில் உயர்வு

ஜூலை 2021 உடன் ஒப்பிடும்போது ரஷ்யாவிலிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியின் அளவும் 26.1% குறைவாக உள்ளது, அதே நேரத்தில் நிலக்கரி இறக்குமதி 40.1% குறைவாக உள்ளது. அளவுகளில் சரிவை கண்டாலும் ஜூன் மாதம் ஜீரோ அளவில் இருந்து ஜூலை மாதம் அதிகரித்துள்ளது.

மதிப்பு அளவு

மதிப்பு அளவு

இதையே மதிப்பு அளவில் பார்க்கும் போது ஜப்பான் நாட்டுக்கான ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி மதிப்பு கடந்த வருடத்தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் 45.1 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் அதிகரித்துள்ள விலை உயர்வின் காரணமாக உயர்ந்துள்ளது.

ஜப்பான் நிலைப்பாடு

ஜப்பான் நிலைப்பாடு

மே மாதம், ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Koichi Hagiuda, ஜப்பான் ரஷ்ய எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைக்கும் என்று உறுதியளித்தார், ஆனால் உடனடியாகக் கைவிட முடியாது என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan starts oil import from Russia which zeroed in June

Japan starts oil imports from Russia which zeroed in June சமாளிக்க முடியாது.. ஜப்பான் முடிவால் விளாடிமிர் புதின் ஹேப்பி..!
Story first published: Thursday, August 18, 2022, 14:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X