$2,00,000 கட்டணம் செலுத்தினால் விண்வெளிக்குச் செல்லலாம்.. ஜெப் பிசோஸ் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ளூஆரிஜின் ராக்கெட் நிறுவனம் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு முதல் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகளுக்கு 200,000 டாலர் முதல் 300,000 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

விண்வெளி பயணம் மேற்கொள்ள விரும்பிய பயணிகளும், விண்வெளி துறையினரும் கட்டணம் மலிவாக இருக்குமா மற்றும் இதற்கு வரவேற்பு எபடி இருக்கும், அதன் மூலம் நிறுவனத்தால் அதிக லாபம் ஈட்ட முடியுமா என்பதைக் கண்டறிய ப்ளுஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷிப்பர்ட் விண்வெளி வாகனத்தில் பயணக் கட்டணம் எவ்வளவு எனத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.

டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை

நியூ ஷிப்பர்ட்ல் பயணிகளுடன் பரிசோதனை விண்கலத்தை விரைவில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் டிக்கெட் விற்பனையைத் துவங்க உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

விண்கலம் வடிவமைப்பு

விண்கலம் வடிவமைப்பு

செலுத்தும் ராக்கெட் மற்றும் பயணிகள் விண்கலம் உள்பட விண்கலத்தின் மொத்த வடிவமைப்பையும் பொதுவெளியில் ப்ளுஆரிஜின் நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் தயாரிப்பின் தற்போதைய நிலை மற்றும் டிக்கெட் விலை பற்றி இதுவரை வாய்த் திறக்காமல் இருந்தது.

பயணக்கட்டண திட்டங்கள்
 

பயணக்கட்டண திட்டங்கள்

ப்ளூஆரிஜின் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கூறுகையில், அந்நிறுவனம் 200,000 டாலரில் இருந்து 300,000 டாலர் என்ற விலையில் டிக்கெட்களை விற்க துவங்கவுள்ளது.

மற்றொரு பணியாளர் கூறுகையில், டிக்கெட் விலை குறைந்தபட்சம் 200,000 டாலராக இருக்கும் எனக் கூறினார்.

 

நியூ ஷிப்பர்ட் - வசதிகள்

நியூ ஷிப்பர்ட் - வசதிகள்

நியூ ஷிப்பர்ட் விண்கலம் 6 பயணிகளுடன் பூமியிலிருந்து விண்வெளிக்கு 62 மைல்கள்(100 கிலோ மீட்டர்) தானாகவே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து பாராசூட் மூலம் பூமிக்கு திரும்பும் முன்பு சில நிமிடங்கள் விண்வெளியின் எடையில்லாத அனுபவம் மற்றும் பூமியின் வடிவத்தைக் கண்டு இரசிக்கலாம்.

போயிங் கோ 747 ஜெட்லைனர் உள்ள ஜன்னலை விட 3 மடங்கு உயரமான 6 கவனிப்பு ஜன்னல்கள் இந்த விண்கலத்தில் உள்ளதாக ப்ளுஆரிஜின் கூறியுள்ளது.

 

பரிசோதனை விண்கலம்

பரிசோதனை விண்கலம்

ப்ளுஆரிஜின் நிறுவனம் செங்குத்தாகச் செலுத்தப்பட்டுத் தரையிறங்கும் நியூ ஷிப்பர்ட்-ன் 8 பரிசோதனை விண்கலத்தை, டெக்சாஸில் உள்ள தனது ஏவுதளத்திலிருந்து பயணிகள் இல்லாமல் செலுத்தி பரிசோதனையை முடிந்துள்ளது. மேன்னிகுயின் ஸ்கைவாக்கர் என்று அந்நிறுவனத்தால் அழைக்கப்படும் இரு டம்மி விண்கலமும் இதில் அடக்கம். இன்னும் சில வாரங்களில் இந்நிறுவனம் விண்கலத்தில் இருந்து அவசரக்காலத்தில் தப்பிக்கும் அமைப்பைப் பரிசோதிக்கவுள்ளது.

மற்ற போட்டியாளர்கள்

மற்ற போட்டியாளர்கள்

ப்ளூஆரிஜின் நிறுவனம் அதன் பொன்மொழியான ' படிப்படியாக, அதிதீவிரமாக' என்பதற்கு ஏற்ப, சர்வதேச விண்வெளி பொருளாதாரத்தில் மிக முக்கியமான பொதுமக்கள் பயணிக்கும் விண்கலத்தைத் தயாரிப்பதில் மும்முரம் காட்டிவருகிறது. அது மட்டுமின்றிச் செயற்கைக்கோள் சேவைகள் வழங்குதல் மற்றும் அரசாங்க ஆய்வு திட்டங்கள் உள்ளிட்ட ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை வைத்துள்ளது.

போட்டி

போட்டி

112 பில்லியன் டாலர் சொத்துடன் உலகின் பணக்கார மனிதராகத் திகழும் பிசோஸ், சக பில்லியனர்களான ரிச்சர்ட் ப்ரேன்சன் மற்றும் டெஸ்லா நிறுவன தலைமை அதிகாரி எலன் முஸ்க் உடன் போட்டி போட்டு வருகிறார்.

ப்ரேன்சனின் வெர்ஜின்

ப்ரேன்சனின் வெர்ஜின்

ப்ரேன்சனின் வெர்ஜின் கேலாக்டிக் நிறுவனம் கூறுகையில், தனது விண்வெளி பயணத்திற்காக இதுவரை 650 டிக்கெட்களை விற்றுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் இதுவரை பயணத்தேதியை அறிவிக்கவில்லை. இந்நிறுவனமும் ப்ளுஆரிஜினுடன் சற்று ஒத்துப்போய் டிக்கெட் விலையாக 250,000 டாலரை நிர்ணயித்துள்ளது.

எலன் மஸ்க்

எலன் மஸ்க்

எலன் மஸ்க்கால் 2002ல் நிறுவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் , மக்களை மற்ற கோள்களில் வாழ வைப்பது தான் எங்களின் முதன்மையான நோக்கம் எனக் கூறியுள்ளது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்கள்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலங்கள்

இம்மூன்று நிறுவனமும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கலத்தை உருவாக்குவதன் மூலம் பயணக் கட்டணத்தைக் குறைக்க முயற்சித்து வருகின்றன. அதாவது விண்கலத்தை அதிக முறை செலுத்தும் போது பயணிகளின் பயணக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jeff Bezos' Blue Origin plans to charge $200,000 for space rides

Jeff Bezos' Blue Origin plans to charge $200,000 for space rides
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X