உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் பில்கேட்ஸ்.. யார் முதலிடம் தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தினைத் தக்க வைத்து வந்த பில் கேட்ஸ் அதனை 2017-ம் ஆண்டு இழந்துள்ளார். இதனால் அந்த இடத்தை யார் பிடித்து இருப்பார்கள் என்று ஆர்வம் வியாழக்கிழமை முதல் சமுக வலைத்தளங்களில் டிர்ண்ட் ஆகியது.

அமேசான் நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 2.4 சதவீதம்வரை உயர்ந்ததை அடுத்து அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

கடுமையான போட்டி

ஜெப் பிசோஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது, பில்கேட்ஸ் அவர்களின் சொத்து மதிப்பு வியாழக்கிழமை 9 பில்லியன் டாலராட இருந்தது. அமேசான் பங்குகள் உயர்ந்த சில நிமிடங்களில் முதல் இடத்தினை ஜெப் பிசோஸ் பிடித்தார்.

டெக் வணிகம்

ஜெப் பிசோஸ் அவர்களுக்கு அமேசான் நிறுவனத்தின் 17 சதவீத பங்குகள் உள்ளது, இது இவருடைய இ-காமர்ஸ் வணிகத்தைக் கிடைத்தது எனலாம். ஆனால் இப்போது கிளவுட் கம்ப்யூட்டிங், இணையதள வீடியோ சேவை, கணினி வன்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய டெக் பிரிவுகளில் அதிகக் கவனத்தினை அமேசான் திருப்பியுள்ளது.

பழைய அருங்காட்சியகங்களை வாங்குதல்

23 மில்லியன் டாலர் கொடுத்து இவர் வாங்கிய பழைய ஜவுளி அருங்காட்சியகம் வாஷிஙடன் டிசி-ல் அமைந்துள்ளது. அதனை இவரது வீடாக மாற்றிய உடன் ஒபாமா மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோர் இவரது பக்கத்து வீட்டுக்காரர்களாக உள்ளனர்.

ஸ்டார் டெக் ரசிகர்

பேண்டசி திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஸ்டார் டெர்க் ரசிகரான ஜெப் பிசோஸ் சிறிய காதபத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

காட்டுத்தனமான கற்பனை

அருங்காட்சியகங்கள் மற்றும் ராக்கெட் வர்த்தகங்களுடன், பெசோஸ் ஏற்கனவே விண்வெளி விடுதிகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், மற்றும் பூமியை சுற்றியுள்ள நகரங்களைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார். அவரது கனவுகள் காலப்போக்கில் பெரிதாகி விட்டன. பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார் - நிச்சயமாக ப்ளூ ஆரிஜின் அவரை அழைத்துச் செல்ல தயாராக உள்ளது.

நல்ல உள்ளம்

அமேசான் நிறுவனத்தினைக் கடக்கும் நபர்களுக்குத் தினமும் 4,500 வாழைப்பழங்கள் இலவசமாக வழங்குகின்றார். மேலும் இவருடன் சேர்ந்து இவரது குடும்பமும் பல நலத்திட்ட உதவிகளைச் செய்கின்றனர். ஆனால் தான் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

பிக் பாஸ்

#OviyaArmy-யை பதறவைக்கும் சன் டிவியின் டிஆர்பி..!

ஆஃபர் மழை

ஜியோ-க்கு எதிராக அதிரடி ஆஃபர்களை அள்ளிவீசும் ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஏர்செல்..!

சம்பளம்

‘ராம் நாத் கோவிந்த்' சம்பளம் எவ்வளவு தெரியுமா?

செம ஆப்பு

இன்டெல் சாம்ராஜியத்திற்கு ஆப்பு வைக்கும் சாம்சங்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jeff Bezos momentarily outshining Microsoft's Bill Gates as the world's richest person

Jeff Bezos momentarily outshining Microsoft's Bill Gates as the world's richest person
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns