ரூ.56,000 கோடிக்கு மேல் அபராதம்.. எதுக்காகன்னு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.56,000 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எதுக்காகன்னு தெரியுமா? ரிஸ்பெர்டால் (Risperdal) என்ற ஆன்டிசைகோடிக் மருந்தை பயன்படுத்தும் இளைஞர்களின் மார்பகங்கள் வளரக்கூடும் என்றும் எச்சரிக்காததற்கு தான் இந்த பலத்த அபராதம்.

ரூ.56,000 கோடிக்கு மேல் அபராதம்.. எதுக்காகன்னு தெரியுமா?

இதில் கொடுமை என்னவெனில் முன்னதாக இந்த ரிஸ்பெர்டால் என்ற ஆன்டிசைகோடிக் மருந்தை பயன்படுத்தும் இளைஞர்களின் மார்பகங்கள் வளரக்கூடும் என்றும் எச்சரிக்க தவறியதாக கூறி சுமார் 4.83 கோடி ரூபாய் வென்றவருக்கு, ஜான்சன் நிறுவனம் சரியான நேரத்தில் இவருக்கு அபராத தொகையினை செலுத்த தவறிய நிலையிலேயே, தற்போது மீண்டும் இப்படியொரு தொகையினை 56,000 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் முர்ரோவுக்கு ஆதரவாக பிலடெல்பியா நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் இன்னும் ஆயிரக்கணக்கான ரிஸ்பெர்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதி மன்றம், இந்த அபராத தொகையானது, பாதுகாப்பு மற்றும் இலாபங்களை மட்டுமே குறிவைத்து தயாரிக்கப்பட்ட இது போன்ற பொருட்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூலம் லாபம் கண்டுள்ளது என்றும் ஓர் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜான்சன் & ஜான்சன் குழந்தைகள் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்களை தயாரிக்கும் நிலையில், ஏற்கனவே பல முறை ஜான்சன் பொருட்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்றும், இதுபோன்ற ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது கவனிக்கதக்க விஷயம்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜான்சன் நிறுவனம் நீதிமன்றம் ரிஸ்பெர்டலின் நன்மைகளுக்கான ஆதாரங்களைக் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் இது மிக அதிகமான அபராத தொகை என்றும், இது குறைக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் கருத்துகள் கூறப்பட்டும் வருகிறதாம். கடந்த 2015லியே கிங்கோமாஸ்டியாவின் (gynecomastia.) அபாயத்தை பற்றி எச்சரிக்க தவறியதையடுத்து, 1.75 மில்லியன் டாலர் அபராதம் விதிகப்பட்டு பின்னர், 2018 பிப்ரவரியில் 6,80,000 டாலர்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த முறையும் இந்த அபராதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறதோ? மனிதர்களின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற பொருட்கள் இப்படியொரு அபராதம் கட்ட வேண்டியது தான் என்றும் பலதரப்பில் இருந்தும் கருத்துகள் கூறப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Johnson & Johnson fined Rs.56,000 cr above for it's failed to warn that young men using its antipsychotic drug Risperdal could grow breasts

Johnson & Johnson fined Rs.56,000 cr above for it's failed to warn that young men using its antipsychotic drug Risperdal could grow breasts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X