கவர்ச்சி ப்ளே பாய் மாடல் டூ நடுத் தெரு..! மாடல் அழகியின் வாழ்க்கைப் பாடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Katie Price என்கிற பெயரை நாம் அதிகம் கேள்விப் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ப்ளே பாய் என்கிற சொல்லை நாம் கேள்விப் பட்டிருப்போம். அதோடு இருந்தாலும் பிக் பாஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும் இல்லையா..?

அப்படி இங்கிலாந்தில், புகழ் பெற்ற செலிபிரிட்டிகளுக்காக நடந்த பிக் பிரதர் 15-வது சீசன் வெற்றியாளர் தான் இந்த கேடி பிரைஸ் (Katie Price). ப்ளே பாய் பத்திரிகையில் மாடல் அழகியாக பணியாற்றியவர்.

ஒரு காலத்தில் (சில ஆண்டுகளுக்கு முன்) கோடீஸ்வரியாக இருந்த கேடி பிரைஸ், இப்போது (Katie Price) பணக் கஷ்டத்தாலும், தவறான நிதி மேலாண்மையாலும், இன்று வாங்கிய கடனைக் கூட கட்ட முடியாமல் திவாலாகி நடுத் தெருவில் நிற்கும் நிலை வந்திருக்கிறது.

அவரைப் பற்றி

அவரைப் பற்றி

1996-ல் இருந்து இங்கிலாந்தில் மாடலிங், டிவி சேனல் நிகழ்ச்சிகள், விளம்பரம் என வலம் வந்து கொண்டிருப்பவர். மீடியாவுக்குள் வந்த சில ஆண்டுகளிலேயே தி சன் மற்றும் தி டெய்லி ஸ்டார் போன்ற பத்திரிகைகளுக்கு செய்த கவர்ச்சிகரமான மாடலிங் பணியால் உலகமே ஜொள்ளுவிடத் தொடங்கியது. கேடி பிரைஸ் 19 வயதாக இருக்கும் போதே மார்பக அறுவை சிகிச்சை எல்லாம் செய்து கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

போட்டிகள்

போட்டிகள்

அதன் பிறகு நம்மூர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போல இங்கிலாந்தின் யூரோவிசன் பாட்டுப் போட்டியில் பங்கெடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். அதன் பிறகு டிவி சேனல் ஷோக்கள் தயாரிப்பு, பிக் பாஸ் என புகழ் பரவத் தொடங்கியது, பணமும் பெருகத் தொடங்கியது. மறு பக்கம் வியாபாரம் செய்தால் என்ன என தனக்குள் இருந்த வியாபாரியை வெளியில் கொண்டு வந்தார்.

வியாபாரம்
 

வியாபாரம்

உடல் நலம் சார்ந்த நியூட்ரீஷியன் பொருட்கள், ஆரோக்கிய பானங்கள் என களம் இறங்கினார். பிரிட்டீஷ் டயட் சங்கமோ, கேடி பிரைஸின் டயட்டை, பின்பற்ற தகுதியற்ற டயட் முறைகளில் ஒன்று, என பகிரங்கமாக அறிவித்தது. அதோடு கேடி பிரஸின் டயட் விலை அதிகம் அதோடு உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரிப்பட்டு வராது எனவும் சொன்னது.

எழுத்து

எழுத்து

டயட் போல எழுத்து இவரைக் கைவிடவில்லை. எழுதத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே, விற்பனை மகாராணியாக முடி சூடிக் கொண்டார். 2000 - 2009 வரையான காலங்களில், அதிகம் விற்பனை ஆகும் எழுத்தாளர்களில் ஒருவராக வலம் வந்தார். இவரின் Being Jordan என்கிற புத்தகம் ஒரே வருடத்தில் 97,000 புத்தகங்களும் இதுவரை 1 மில்லியன் புத்தகங்களும் விற்று இருக்கின்றன. இப்படியாக புத்தகம் வழியாக பிரமாதமாக சம்பாதித்தார்.

அடுத்தடுத்த வியாபாரம்

அடுத்தடுத்த வியாபாரம்

அதன் பிறகு Free to love again என ஒரு பாட்டை வெளியிட்டது, ஸ்டன்னிங் என்கிற பெயரில் வாசனை திரவியங்களை வெளியிட்டது, Equestrian என்கிற பெயரில் ஆடை வியாபாரத்தில் களம் இறங்கியது என ஒரு நீண்ட பயணம் செய்தார். புகழ் வளர்ந்தது, பணம் பெருகியது. எந்த அளவுக்கு என்றால் சுமார் 45 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 410 கோடி ரூபாய்) என்கிற உச்சத்தைத் தொடும் அளவுக்கு வளர்ந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

வந்த பணத்தை சரியாக நிர்வகித்துக் கொள்ளவில்லை. தன் பணத்தை தானே நிர்வகிப்பதில்லை என ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதோடு சுமார் 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய்) ஆடம்பர திருமணம், பின் விவாகரத்து என ஆடம்பரங்களின் பட்டியல் மிக அதிகம்.

ஒரண்டை

ஒரண்டை

இப்படி தண்டமாக ஆடம்பர செலவுகள் போக, தேவை இல்லாமல் முன்னாள் கணவரை தவறாக பேசி பொது வெளியில் ஒரண்டை இழுத்தார். முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தார், கேடி வழக்கில் தோன்றி நஷ்ட ஈடு கொடுத்தார். அதே போல, கேடி பிரைஸ் தன் மேலாளராக இருந்த க்ளேர் பவலை தவறாக பேசி நீதிமன்றப் படியேறி நஷ்ட ஈடு கொடுத்தார்.

காஸ்ட்லி வாழ்க்கை

காஸ்ட்லி வாழ்க்கை

அவ்வளவு ஏன் ஒரு வார காலத்தில் உணவுக்காக மட்டும் நம் கேடி பிரஸ் சுமார் 800 முதல் 1000 பவுண்ட் ஸ்டெர்லிங் செலவழிப்பாராம். அதாவது இந்திய மதிப்பில் சுமாராக 70,000 - 90,000 ரூபாய் என்றால் என்ன கெத்தாக வாழ்ந்து இருக்கிறார் என பார்த்துக் கொள்ளுங்கள். இது எல்லாம் போக கன்னாபின்னா என அழகு சார்ந்த அறுவை சிகிச்சைகள் வேறு.

கடன்

கடன்

நம் கேடி பிரைஸ் மேலே சொன்ன வியாபாரங்களைச் செய்ய சில இடங்களில் இருந்து கடன் வாங்கி இருக்கிறார் போல. கடனை ஒழுங்காகச் செலுத்த ஒப்பந்தம் எல்லாம் கூட போட்டு இருக்கிறார். ஒப்பந்தத்தின் படி, கடந்த மாதம் 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங் பணத்தைச் செலுத்தவில்லை. அதாங்க குறித்த நேரத்தில் கடனைக் கட்டவில்லை போல. சொன்ன நேரத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத கேடி பிரைஸை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் (Bankrupt) என அறிவித்துவிட்டது நீதிமன்றம். சுருக்கமாக திவால் ஆனவர் எனச் சொல்லிவிட்டது நீதிமன்றம்.

நிதித் திட்டம்

நிதித் திட்டம்

இத்தனை தவறுகளைச் செய்த பின் தான், கேடி பிரைஸ், ஒரு நல்ல நிதித் திட்டமிடும் ஆலோசகர்களைச் சந்தித்துப் பேசி வருகிறாராம். அதோடு கேடி பிரஸ் தொடர்ந்து தான் செலுத்த வேண்டிய கடன் தொகைகளைக் கட்டவில்லை என்றால், தன்னுடைய சொகுசு பங்களாவான மிக்கி மேன்ஷனைக் கூட கடன் கொடுத்தவர்கள் பறிமுதல் செய்து கொள்ளும் நிலை வரலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

ஒரு செலிபிரிட்டிக்கு புகழும் பணமும் தான் பலமே. இப்போது கேடி பிரைஸை, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர் என அறிவித்ததால், தன் புகழை இழந்துவிட்டார். சேர்த்து வைத்திருந்த 410 கோடி ரூபாய் பணத்தையும் இழந்து கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார். பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியமில்லை, அதை முறையாக பாதுகாப்பதும், சரியான திட்டமிடலும் அவசியம் என தன் சொந்த வாழ்கை கொண்டு நமக்கு பாடம் எடுக்கிறார் இந்த ப்ளே பாய் மாடல் அழகி கேடி பிரைஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: bankrupt திவால்
English summary

Katie Price playboy model fall down from 410 crore to bankrupt

The famous play boy magazine model katie price had fall down from Rs.410 crore net worth to bankrupt.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X