குவைத் அரசின் புதிய அதிரடி அறிவிப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

குவைத் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் அலி முகமது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சட்டத்திற்குப் புறம்பாகக் குவைத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வேலை நிமித்தமாகக் குவைத் சென்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சம்பள பிரச்சனை போன்ற காரணங்களால் பணிக்கான விசா காலம் முடிந்த பிறகும் சட்டத்திற்கு விரோதமாகக் குவைத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொது மன்னிப்பு

ஜனவரி மாதம் 23-ம் தேதி குவைத் அரசு சட்டத்திற்கு விரோதமாக உள்ள வெளிநாட்டவர்கள் 2018 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து எந்த அபராதமும் இல்லாமல் பொது மன்னிப்பு பெற்று சொந்த நாடுகள் திரும்பி செல்லலாம் என்று தெரிவித்து இருந்தது.

நீட்டிப்பு

தற்போது குவைத் துணை பிரதாமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் அலி முகமது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைய இருந்த காலக்கெடு ஏப்ரல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரெசிடென்சி விதிமீறல்

அதே நேரம் ரெசிடென்சி விதிமீறல் பிரச்சனைகள் காரணமாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விசா காலம் முடிந்தும் சொந்த நாடுகள் திரும்பி செல்ல முடியாமல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லாததால் அருகில் உள்ள ரெசிடென்சி விவகாரத் துறையினை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

எப்படித் திருப்பி அனுப்பப்படுவார்?

பொது மன்னிப்புக் காலத்தில் சட்டவிரோதமாகக் குடியுரிமை பெற்றிருந்தால் அத்தகை ஒருவர் கைது செய்யப்பட்டுச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

ஓமன்

ஜனவரி மாதம் முதல் ஒமனில் ஊடகம், ஐடி, மார்கெட்டிங், இன்சூரன்ஸ் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற 10 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சவுதி

உள்நாட்டு ஊழியர்களை அதிகப்படியாகப் பணிக்கு எடுக்க வேண்டும் என்று வேலையின்மை என்பதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சவுதி அரேபியாவும் 12 துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுக்கத் தடை விதித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள்

விசா முடிந்தும் சம்பள பாக்கி வைத்துள்ள சில நிறுவனங்கள் ஊழியர்களைத் திருப்பி அனுப்பாமல் சட்ட விரோதமனாக அவர்களிடம் வேலை வாங்கி வருவதும் அரங்கேறி வருவதாகவும் இதனால் உள்நாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சட்ட விரோதமான உள்ள இந்தியர்கள் எண்ணிக்கை

குவைத்தில் சட்ட விரோதமாக 24,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் 50,000-க்கு மேற்பட்டவர்கள் பணிக்காகக் குவைத் செல்வதாகவும் தரவுகள் கூறுகின்றன.

இந்தியர்கள்

2015-ம் ஆண்டின் கணக்கு படி குவைத்தில் 8,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாகவும், அதில் 69 லட்சம் நபர்கள் ஆண்கள் என்றும், 2 லட்சம் நபர்கள் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும் அதிக நபர்கள் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆபத்தில் 9,500 நிதி நிறுவனங்கள்.

ஆபத்தில் 9,500 நிதி நிறுவனங்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அருண் ஜேட்லி..!

பொது துறை வங்கி

பொது துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவது கடினம்: அருண் ஜேட்லி

ஆதார்

ஆதார் கார்டு இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kuwait extends amnesty period to illegal residents until April 22

Kuwait extends amnesty period to illegal residents until April 22
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns