ஏற்றுமதியில் நாங்க தான் 'நம்பர் ஒன்'.. மார்தட்டிக் கொள்ளும் 'சீனா'.. இந்தியா பற்றிக் கேட்காதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் நிகழ்ந்த Protectionism என்ற அலை பல வர்த்தக நாடுகளை அடியோடு துடைத்து போடும் நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்த்ததுள்ளது.

 

உலக நாடுகளில் வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், அரசியல் ஸ்திரத்தன்மை போன்ற காரணங்கள் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பாதித்தன. இருப்பினும் பல நாடுகள் தங்கள் நாட்டு ஏற்றுமதி கொள்கைகளைத் தளர்த்தி வர்த்தகத்தை மேம்படுத்த முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி நாடுகள்

ஏற்றுமதி நாடுகள்

ஏற்றுமதி செய்யும் நாடுகள் சர்வதேச சந்தையில் கடுமையான போட்டியின் மத்தியிலும் தங்கள் பொருட்களை வணிகச் சூழ்நிலைக்கு மாற்றி, கடும் சவால்களை எதிர்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.,

அந்த வகையில் உலகமயமாக்கல் கொள்கையிலும் ஏற்றுமதி செய்து சிறப்பாக விளங்கும் ஐந்து நாடுகள் குறித்துத் தற்போது பார்ப்போம்

5. ஹாங்காங்:

5. ஹாங்காங்:

ஏற்றுமதி செய்யும் தொகை : $510.6 பில்லியன்

முக்கிய ஏற்றுமதி பொருட்கள்

எலக்ட்ரானிக் பொருட்கள் (மொத்த ஏற்ற்மதியில் 49.8%), மாணிக்கம் போன்ற கற்கள் மற்றும் விலை உயர்ந்த உலோகங்கள் (மொத்த ஏற்றுமதியில் 14.2%), இயந்திரங்கள், எஞ்சின்கள் மற்றும் பம்புகள் (13%), மருந்துகள் மற்றும் டெக்னிகல் பொருட்கள் (2.7%) மற்றும் பிளாஸ்டிக் பொர்டுகள் (2.3%).

72 லட்சம் மக்கள்
 

72 லட்சம் மக்கள்

மக்கள் தொகையில் சிறிய அளவாக அதாவது 7.2 மில்லியன் மட்டுமே மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் ஆசிய அளவில் நான்காவது இடத்திலும் ஏற்றுமதியில் உள்ள நாடாக ஹாங்காங் நாடு உள்ளது.

இந்தியாவை விட அதிகமாக ஏற்றுமதி செய்யும் இந்நாட்டின் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு கடந்த 2015ஆம் ஆண்டின் கணக்கின்படி $510.6 பில்லியன் ஆகும். சீனா, ஹாங்காங் நாட்டின் மிகப்பெரிய பார்ட்னராக உள்ளது.

முக்கிய வாடிக்கையாளர்

முக்கிய வாடிக்கையாளர்

இந்நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 54% பொருட்களை இந்நாடு சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதேநேரத்தில் அமெரிக்காவுக்கு 9.9% ஏற்றுமதியும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 9.7% பொருட்களையும் ஹாங்காங் ஏற்றுமதி செய்கிறது. மேலும் ஹாங்காங் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளில் ஜப்பான், சிங்கப்பூர், தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முக்கியமானவை.

ஏற்றுமதி கொள்கை

ஏற்றுமதி கொள்கை

ஹாங்காங் நாட்டின் சிறப்பான ஏற்றுமதிக்கு முக்கியக் காரணமாக அந்நாட்டின் மிகச்சிறந்த ஏற்றுமதி கொள்கைதான். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை அதிகரிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வைத்துள்ளது.

சுகாதார, பாதுகாப்பு

சுகாதார, பாதுகாப்பு

ஒருசில பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இந்நாடு சில கட்டுப்பாடுகளை அதாவது லைசென்ஸ்களைக் கடுமைப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் ஒருசில காரணங்களுக்காக என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக வர்த்தக மையத்தில் உறுப்பினராக ஆரம்பத்தில் இருந்தே அதாவது 1995ஆம் ஆண்டு முதலே ஹாங்காங் நாடு உள்ளது. இன்னும் உலக வர்த்தக மையத்தில் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வருகிறது.

4. தென்கொரியா

4. தென்கொரியா

ஏற்றுமதி வர்த்தக மதிப்பு: $526.8 பில்லியன்

ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருட்கள்: மொத்த ஏற்றுமதியில் 26.3% எலக்ட்ரானிக்ஸ், 13.1% வாகனங்கள், 11.8% மிஷின்கள், எஞ்சின்கள் மற்றும் பம்புகள், 7.3% கப்பல்கள் மற்றும் படகுகள், 6.3% எண்ணெய், மற்றும் மருந்துகள் மற்றும் டெக்னிக்கல் உபகரணங்கள் 6.5% ஏற்றுமதி ஆகிறது.

மக்களின் உழைப்பு

மக்களின் உழைப்பு

கடந்த ஒரே ஜெனரேஷனில் ஏழை நாடாக இருந்த தென்கொரியா அந்நாட்டு மக்களின் உழைப்பின் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.

இன்று ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக விளங்கி வரும் நாடாகத் தென்கொரியா உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்த நாட்டின் ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு $526.8 பில்லியன் என்பதில் இருந்தே இந்நாட்டின் ஏற்றுமதி திறமையைக் கண்டுகொள்ளலாம்.

முக்கிய வாடிக்கையாளர்

முக்கிய வாடிக்கையாளர்

இந்நாட்டின் சிறந்த ஏற்றுமதி பார்ட்னராகச் சீனாவை சொல்லலாம். ஏனெனில் அங்குதான் இந்நாடு 26% பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவிற்கு 13% பொருட்களையும், ஹாங்காங் நாட்டிற்கு 6% பொருட்களையும், வியட்நாமிற்கு 5% பொருட்களையும், ஜப்பானுக்கு 5% பொருட்களையும், சிங்கப்பூருக்கு 3% பொருட்களையும் இந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

உலக நாடுகளுக்குப் போட்டி

உலக நாடுகளுக்குப் போட்டி

தென்கொரியாவின் பல பெரிய நிறுவனங்கள் உலக நாடுகளின் வர்த்தகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக், கப்பல் கட்டுதல், ஆட்டோமொபைல் மற்றும் இரும்பு ஆகிய துறைகளில் இந்நாடு ஜாம்பவானாக உள்ளது. இந்த நாட்டின் பெரிய நிறுவனங்களாகக் கருதப்படுபவை இவை தான்:

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

சாம்சங்: உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் தொலைக்காட்சிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம்

ஹூண்டாய்: மோட்டார் வாகன தொழிலில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக உள்ளது

போஸ்கோ: உலகின் மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனம்

ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்: உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும்

நிறுவனம்

வியாபார கொள்கை

வியாபார கொள்கை

இந்நாட்டின் ஏற்றுமதி தொழில் சிறந்து விளங்க, நாட்டின் வியாபார கொள்கை எளிதாக இருப்பதுதான். மேலும் ஏற்றுமதி அக்ரிமெண்ட்டுக்களை இந்நாட்டின் வழக்கறிஞர்கள் மிக எளிமையாக ஏற்படுத்தித் தருகின்றனர்.

மேலும் ஆசியாவிலேயே இந்நாட்டின் மூலம் ஏற்றுமதி அக்ரிமெண்ட் செய்வதில் மிக எளிதானது என்று அமெரிக்கா, சீனா, ஆசிய நாடுகள், மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் சான்றிதழை கொடுத்துள்ளன.

3. ஜப்பான்:

3. ஜப்பான்:

ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு: $624.9 பில்லியன்

ஏற்றுமதி ஆகும் பொருட்கள்: மோட்டார் வாகனங்கள் 13%, செமி கண்டக்டர்ஸ் 6.2%, இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் 5.5%, ஆட்டோ உதிரிப்பாகங்கள் 4.6% மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 3.5%

ஜப்பான் நாடு பொருளாதாரத்தில் உலக அளவில் மூன்றாவது இடத்தில், ஏற்றுமதியிலும் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடாக விளங்கி வருகிறது.

ஏற்றுமதியும் வாடிக்கையாளர்களும்

ஏற்றுமதியும் வாடிக்கையாளர்களும்

கடந்த 2015ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களின் மதிப்பு $624.9 பில்லியன் ஆகும். இந்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் அமெரிக்காவுக்கு 20.2%, சீனாவுக்கு 17.5%, தென்கொரியாவுக்கு 7.1%, ஹாங்காங் நாட்டிற்கு 5.6%, தாய்லாந்து நாட்டிற்கு 4.5 பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன

வழிகாட்டி

வழிகாட்டி

ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி கொள்கை பிற உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜப்பானின் பல நிறுவனங்கள் உலகின் முன்னணி நிறுவனங்களாக விளங்கி வருகின்றன.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

டொயோட்டா மோட்டார்: உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனம் (235.8 பில்லியன்)

ஹோண்டா மோட்டார் : உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ($118.1 பில்லியன்

நிசான் மோட்டார்: உலகின் ஆறாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனம் ($101 பில்லியன்)

ஹிட்டாச்சி: உலகின் முன்னணி எலக்ட்ரானிக் மற்றும் நிதிநிறுவனம் ($84 பில்லியன்)

வர்த்தகச் சுதந்திர ஒப்பந்தம்

வர்த்தகச் சுதந்திர ஒப்பந்தம்

கடந்த 2013 ஆம் ஆண்டில், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வர்த்தகச் சுதந்திர ஒப்பந்தம் செய்யும் நட்பு நாடாக மாறியது. இந்த ஒப்பந்தம் ஜப்பானுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது. ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய இரண்டாவது ஆசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி உலக ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

2. அமெரிக்கா:

2. அமெரிக்கா:

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு: $1.5 டிரில்லியன்

ஏற்றுமதி ஆகும் முக்கியப் பொருட்கள்: எஞ்சின்கள் மற்றும் பம்புகள் மொத்த ஏற்றுமதியில் 13.7 சதவீதம், எலக்ட்ரானிக் பொருட்கள் (11.3%), விமானங்கள் மற்றும் விண்வெளி பொருட்கள் (8.7%), வாகனங்கள் (8.4%), மருத்துவப் பொருட்கள் 5.5%,

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா, ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஏற்றுமதியும் வாடிக்கையாளர்களும்

ஏற்றுமதியும் வாடிக்கையாளர்களும்

கடந்த 2015ஆம் ஆண்டி கணக்கெடுப்பின்படி இந்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களின் மதிப்பு $1.5 டிரில்லியன் ஆகும். இந்நாட்டில் இருந்து அதிகமாகக் கனடாவுக்கு 18.6% பொருட்களும், மெக்சிகோவுக்கு 15.7% பொருட்களும், சீனாவுக்கு 7.7% பொருட்களும், ஜப்பானுக்கு 4.2% பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றது.

முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள்

முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள்

எக்ஸான் மொபில்: உலகின் மிகப்பெரிய கேஸ் நிறுவனம் ($336.8 பில்லியன்)

ஆப்பிள்: உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ($293.3 பில்லியன்)

சேவ்ரான் கார்ப்பரேசன்: அமெரிக்காவின் மிகப்பெரிய 3வது பெரிய நிறுவனம் ($266.1 பில்லியன்)

ஃபோர்டு மோட்டார் நிறுவனம்: உலகின் 5வது மிகப்பெரிய மோட்டார் வாகன நிறுவனம் ($224.9 பில்லியன்)

ஜெனரல் மோட்டார்ஸ்: மிகப்பெரிய 3 ஆட்டோமேக்கர் நிறுவனங்களில் ஒன்று ($194.5 பில்லியன்)

டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

சமீபத்தில் அதிபர் பொறுப்பில் ஏற்ற டொனால்ட் டிரம்ப் அவர்களின் புதிய ஏற்றுமதி கொள்கையின்படி இந்நாட்டின் ஏற்றுமதி நிறுவனங்களின் பாதுகாப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது.

சீனா உள்பட உலகின் முன்னணி நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் களையப்படுகின்றது. தேர்தலின் போது அட்லாண்டிக் பகுதியில் நடைபெறும் வர்த்தகத்தை வளர்க்கும் விதமாக முன்மொழியப்பட்ட கொள்கைகளால் அமெரிக்காவின் GDP 3% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1. சீனா:

1. சீனா:

ஏற்றுமதி ஆகும் மொத்த பொருட்களின் மதிப்பு : $2.27 டிரில்லியன்

ஏற்றுமதி ஆகும் பொருட்கள்: எலக்ட்ரிக்கல் மற்றும் இதர மெஷினரி பொருட்கள், டேட்டா பிராஸசிங் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு மற்றும் ஸ்டீல், ஆப்டிகல் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

உலகின் நம்பர் ஒன் ஏற்றுமதி செய்யும் நாடான சீனா, 2009ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவைப் பின் தள்ளிவிட்டு முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

முக்கிய வாடிக்கையாளர்கள்

முக்கிய வாடிக்கையாளர்கள்

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும் சீனா, மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு 18% பொருட்களையும், ஹாங்காங் நாட்டிற்கு 15% பொருட்களையும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு 16% பொருட்களும், ஏசியன் நாடுகளுக்கு 12% பொருட்களையும் மற்றும் ஜப்பானுக்கு 6% பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறது.

இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக ஸ்டீல், ஆட்டோமோட்டிவ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எண்ணெய்-வாயு ஆகியவையாக உள்ளன.

முக்கிய ஏற்றுமதி நிறுவனங்கள்

முக்கிய ஏற்றுமதி நிறுவனங்கள்

பெட்ரோசீனா-சினோபெக்: சீனாவின் மிகப்பெரிய பெட்ரோலியம் மற்றும் எண்ணெய்-வாயு உற்பத்தி நிறுவனம்

SAIC மோட்டார், டாங்ஃபெங் மோட்டார் குரூப், BYD ஆட்டோமோட்டிவ் துறை

ஹூவே, லெனோவா, சியாமி ஆகியவை எலக்ட்ரானிக் துறை சார்ந்த முக்கிய நிறுவனங்களாகும்.

யாவூ ஜியான்

யாவூ ஜியான்

உலகப் பொருளாதாரமாக்கல் கடந்த 2008ஆம் ஆண்டுக் கடைப்பிடிக்கப்பட்ட போது சீனாவின் வர்த்தக அமைச்சர் யாவூ ஜியான் (Yao Jian) பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்ததன் விளைவாகச் சீனாவின் ஏற்றுமதி விகிதம் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.

முதல் இடம்

முதல் இடம்

எந்தெந்த நாடுகளுக்கு எந்தப் பொருட்கள் தேவை என்பதை அறிந்து அந்நாட்டுக்குத் தரமான பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு யாவூ கொடுத்த ஊக்கத்தின் விளைவாக இன்று சீனா ஏற்றுமதியில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

குற்றங்களும்.. சரிவும்..

குற்றங்களும்.. சரிவும்..

கடந்த 2016ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி பொருட்களை 19 நாடுகள் சுமார் 88 விதமான குற்றங்களைக் கூறி $10 பில்லியன் மதிப்பிலான பொருட்களின் மீது விசாரணையில் இறங்கியது. குறிப்பாக அமெரிக்கா மட்டுமே 14 நுணுக்கமான குறைகளைக் கூறியதால் சீனாவின் ஏற்றுமதி $5.8 பில்லியன் சரிவடைந்தது

இதன் காரணமாகச் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களின் மதிப்பு 2016ஆம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 15%, 14.7%, 21.6% முறையே குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Largest Exporting Countries in the World

Largest Exporting Countries in the World
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X