LG எடுத்த அதிரடி முடிவு.. மொபைல் வணிகத்தினை கைவிட முடிவா? என்னாச்சு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருப்பது சீனா தான். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் கூட பின்னடைவை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனம் தனது மொபைல் வணிகத்தினை விற்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து இதையறிந்த நபர்கள் கூறியதாக ஆங்கில செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரியாவின் செய்தித்தாள் நிறுவனமான DongA Ilbo கூறுகையில், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி (Volkswagen AG) மற்றும் வியட்நாமின் விங்ரூப் ஜேஎஸ்சி (Vingroup JSC) நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இது தோல்வியடைந்ததாக தெரிகிறது.

சில மொபைல் வணிகம் நிறுத்தம்

சில மொபைல் வணிகம் நிறுத்தம்

கடந்த ஜனவரி மாதத்தில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸின் தலைமை செயல் அதிகாரி Kwon Bong-eok, நஷ்டத்தினை ஈட்டும் சில வர்த்தகங்களும் தங்களது பட்டியலில் இருப்பதாக கூறியிருந்தார். அதோடு அந்த அறிக்கையில் குறிப்பிட்ட டிஸ்பிளே கொண்ட கொண்ட தொலைப்பேசி வர்த்தகத்தினை நிறுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் புதிய மார்ட்போன்களின், திட்டமிட்ட புதிய வெளியீட்டில் பாதியினை நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

முடிவு என்ன?

முடிவு என்ன?

அது மட்டும் அல்ல, அந்த அறிக்கையில் மொபைல் போன் வணிகம் குறித்த தனது முடிவினை, அடுத்த மாதம் ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதத்தில் எல்ஜி மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 2020ம் ஆண்டின் வருவாய் 4.66 பில்லியன் டாலர் என அறிவித்திருந்தது.

முடிவு என்ன?

முடிவு என்ன?

அது மட்டும் அல்ல, அந்த அறிக்கையில் மொபைல் போன் வணிகம் குறித்த தனது முடிவினை, அடுத்த மாதம் ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதத்தில் எல்ஜி மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 2020ம் ஆண்டின் வருவாய் 4.66 பில்லியன் டாலர் என அறிவித்திருந்தது.

விற்பனை விகிதம்

விற்பனை விகிதம்

குறிப்பாக நான்காவது காலாண்டில் (டிசம்பர் 2020) விற்பனை 1.24 பில்லியன் டாலர் என அறிவித்தது. இது முந்தைய டிசம்பர் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.9% அதிகம் என்றாலும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 4ஜி சிப்கள் பற்றாக்குறை, சர்வதேச அளவில் மந்தமான விற்பனை காரணமாக 9.2% குறைவாக விற்பனை இருந்ததாக கூறியுள்ளது.

லாபம் எப்படி?

லாபம் எப்படி?

கடந்த 2020ல் எல்ஜி நிறுவனம் வருவாய் 56.45 பில்லியன் டாலராகவும், இயக்க லாபமாக 2.85 பில்லியன் டாலராகவும் பதிவு செய்திருந்தது. இது கடந்த 2019ஐ காட்டிலும் 31.1% அதிகமாகும். இது தனது வீட்டு உபகரணங்கள் மற்றும் OLED டிவிக்கள் உள்ளிட்ட பொருட்களின் அதிக விற்பனை காரணமாக வலுவான வளர்ச்சியினை கண்டதாக கூறியிருந்தது. எனினும் இதன் மொபைல் வணிகம் பற்றிய அறிவிப்புகள் இல்லை. கடந்த 4வது காலாண்டில் கூட விற்பனை நல்ல வளர்ச்சியினை கண்டிருந்தது, குறிப்பாக கடந்த 2019 டிசம்பருடன் ஒப்பிடும்போது டிசம்பர் 2020ல் 539% அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lg எல்ஜி
English summary

LG electronics mulls to close mobile phone business: check details

LG latest updates.. LG electronics mulls to close mobile phone business: check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X