அமெரிக்காவுக்கே 23-வது இடம் தானா.. அப்ப இந்தியா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் இன்று பொதுவாக இருக்கும் பெரிய பிரச்னைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

 

ஒரு காலத்தில் சூழலியல் பிரச்சனைகளை எல்லாம் ஏதோ சாதாரணமாக டீல் செய்து கொண்டிருந்த நாம், இன்று உலக நாடுகள் எல்லாம் கூடி சூழலியல் பிரச்னைகளைத் தீர்க்க விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.

அப்படிப்பட்ட மிக முக்கிய பிரச்னைகளில் லஞ்சம் மற்றும் ஊழலும் ஒன்று.

ஊழல் பட்டியல்

ஊழல் பட்டியல்

டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் என்கிற அமைப்பு கடந்த 1995-ம் ஆண்டில் இருந்து, எந்த நாட்டில் ஊழல் அதிகம் என, ஒரு நிபுணர் குழுவை வைத்து ஆராய்ந்து பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த ஊழல் பட்டியலின் பெயர் Corruption Perception Index.

2019-ம் ஆண்டு

2019-ம் ஆண்டு

சமீபத்தில் தான் கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் குறைவான மதிப்பெண் வாங்கி இருக்கும் நாடுகளில் ஊழல் அதிகமாக இருக்கிறது என்று பொருள். அதிக மதிப்பெண் வாங்கி இருக்கும் நாடுகள் குறைவான ஊழல் இருப்பதாகப் பொருள். 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் நாடுகள் தான் ஊழலே இல்லாத நாடு.

அமெரிக்கா
 

அமெரிக்கா

100-க்கு 100 மதிப்பெண்களை எந்த நாடுகள் எல்லாம் பெற்று இருக்கிறது என்று பார்த்தால் ஒரு நாடு கூட இல்லை. அவ்வளவு ஏன் எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவில் எப்படி இருக்கிறது தெரியுமா..? என்று நாம் அண்ணாந்து பார்க்கும் அமெரிக்கா கூட இந்த பட்டியலில் 69 மதிபெண்களுடன் 23-வது இடத்தில் தான் இருக்கிறது.

டாப் 5 இடங்கள்

டாப் 5 இடங்கள்

நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படும் டென்மார்க் (87 மதிப்பெண்களுடன் முதலிடம்), நியூசிலாந்து (87 மதிப்பெண்களுடன் முதலிடம்) , ஃபின்லாந்து (86 மதிப்பெண்களுடன் 3-ம் இடம்), ஸ்வீடன் (85 மதிப்பெண்களுடன் 4-ம் இடம்), ஆகிய நாடுகள் தான் இந்த பட்டியலில் டாப்பில் இருக்கின்றன. அதாவது இந்த நாடுகளில் எல்லாம் ஊழல் மிகக் குறைவாக இருக்கிறது.

ஒரே ஒரு ஆசிய நாடு

ஒரே ஒரு ஆசிய நாடு

இந்த பட்டியலில் ஊழல் குறைவாக இருக்கும் நாடுகள் பட்டியலில் டாப் 15 இடங்களில் இருக்கும் ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் தான். சிங்கப்பூர் 85 மதிப்பெண்களுடன் 4-ம் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் இடம் பிடித்து இருக்கின்றன.

மோசமான நாடுகள்

மோசமான நாடுகள்

உலகிலேயே மோசமான, ஊழல் நிறைந்த நாடு என்றால் அது சோமாலியா தானாம். 100-க்கு வெறும் 9 மதிப்பெண்களைப் பெற்று 180-வது இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் தெற்கு சூடான், சிரியா, யேமன் போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் கடைசி இடங்களைப் பிடித்து இருக்கின்றன.

இந்தியா

இந்தியா

இந்த ஊழல் பட்டியலில் இந்தியா 41 மதிப்பெண்களைப் பெற்று 80-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டில் 100-க்கு 36 மதிப்பெண்களை மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டில் 78-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 2 இடங்கள் சரிந்து 80-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: corruption ஊழல்
English summary

lowest corrupt countries list with ranks

The transparency international released the corruption perception index for the year 2019. USA go 23rd rank and india got 80th rank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X