மார்க்கு நீ ஃபேஸ்புக்க வளத்து கிளிச்சது போதும்,கெளம்பு... கடுப்பில் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேஸ்புக், தனக்கு என்று இன்னும் பல்வேறு பெயர்களைக் கொண்ட ஒரு செயலி. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் உபயோகிக்கும் ஒரு செயலி (அப்ளிகேஷன்) இந்த ஃபேஸ்புக். அதை உருவாக்கிய தகப்பனை, ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் அவமானப்படுத்தி அடித்துத் துறத்த இருக்கிறார்கள். ஏன் துறத்துகிறார்கள்... Mark zuckerberg-ன் த்ரோ பேக் ஸ்டோரி இதோ... அங்கே மார்க் கம்யூட்டரில் ஏதோ செய்து கொண்டிருக்கிறான்.

 மார்க் ஸூக்கர்பெர்க்
 

மார்க் ஸூக்கர்பெர்க்

கம்யூட்டர் ஸ்பரிசத்துடனேயே பிறந்து, அப்பாவின் பல் க்ளீனிக்கின் கம்யூட்டர்களோடு வளர்ந்து ஜாவா, சி+, சி++ போன்ற ப்ரோகிராமிங் மொழிகளைக் கற்று அப்பாவுக்கு ஒரு உத்தரவிட்டான் மார்க். "எப்பா உன்னோட கம்யூட்டரையும், ரிசப்ஷனிஸ்டோட கம்யூட்டரையும் கனெக்ட் பண்ணு... நீ உள்ள இருந்தே ரிசப்ஷனிஸ்டோட தொடர்பு கொள்ள சாட் ப்ரோகிராம் எழுதி இருக்கேன் என்றான்" அன்று மார்க்கின் அப்பனுக்குக் கூடத் தெரியாது இவன் உலகையே இணைக்கப் போகிறான் என்று.

ப்ரோகிராமிங் வகுப்புகள்

ப்ரோகிராமிங் வகுப்புகள்

மார்க்கின் ஆர்வம், அப்பாவை தானாக ப்ரோகிராமிங் வகுப்புகளுக்கு அனுப்ப வைத்தது. அங்கும் சீனியர்களை அறிவால் மிரட்டுவது மார்க்கின் ஸ்டைல். அமெரிக்காவே வீடியோ கேம்களில் மூழ்கி இருந்த நேரத்தில் இந்த மூக்கு துருத்திய மார்கும் சில ப்ரோகிராமிங் நண்பர்களும் இணைந்து கேம்-க்கு கோடிங் எழுதினார்கள். அங்கு தான் php & c++ மார்க்கின் மூச்சோடு சங்கமமான இடம்.

மைக்ரோசாஃப்ட் அழைப்பு

மைக்ரோசாஃப்ட் அழைப்பு

பள்ளியில் ஒரு ப்ராஜெக்டாக சினாப்ஸ் என்கிற ம்யூசிப் பிளேயரை உருவாகினான். கம்யூட்டரை உபயோகிப்பவர்கள் என்ன மாதிரியான பாடல்களை அதிகம் கேட்கிறார்கள் என கண்கானித்து அவர்களுக்கு பிடித்தமான பாடல்களை ஒரு ப்ளேலிஸ்டாக தயார் செய்து ஒளிக்கவிடும். ப்ராஜெக்ட் தூள் கிளப்பியது. வாட்ஸப் இல்லாத அந்த காலத்திலேயே பலரால் forward செய்யப்பட்டு செய்தி தீயாகப் பரவியது. சில வாரங்களில் "என்ன கண்ணு செளக்கியமா... நான் தான் பில் கேட்ஸ் பேசுறேன்... எப்ப எங்க ஆஃபீச் வர்ற" என்றது. ஐயா நான் படிக்கணும் என நழுவினான் ஸ்டூடன்ட் மார்க்.

 வித்து அள்ளு
 

வித்து அள்ளு

பில் கேட்ஸ் விடுவதாக இல்லை. "ராஜா உங்க சினாப்ஸ் ப்ராஜெக்ட் நல்லா இருக்கு. நாங்க அத வாங்கிக்கிறோம் என்ன விலை வேணும்னு சொல்லு கண்ணு" என விலை பேசினார். ஒரு வழியாக பேரம் பேசி ஒரு மில்லியன் டாலர் வரை வந்தது. மார்க் சொன்னது நோ. தம்பி நீ ரொம்ப விவரம்யா... சரி போகட்டும் விடு. இரண்டு மில்லியன் ஓகேவா...?" திரும்பவும் மார்க் சொன்னது நோ. அட போடா இவன் தர மாட்டான் என விட்டுவிட்டார் பில் கேட்ஸ்.

ஃபேஸ்புக் அடித்தளம்

ஃபேஸ்புக் அடித்தளம்

2003-ல் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிப்பு. பசங்களுக்கு தங்கள் காதலிகள் எந்த பாடம் எடுக்கிறார்கள் என கண்டுபிடிக்கத் தவித்த போது "கோர்ஸ் மேட்ச்" என்கிற பெயரில் மார்க் கொடுத்த வலைதளம் செம ஹிட். "மாமா எங்கயோ பொய்ட்ட... இப்ப என் டார்லிங் கூடவே கோர்ஸ் படிக்கிறேன்யா.. எல்லாம் உன் புண்ணியம் சாமி என" மார்க்கை முத்தமிடாத குறையாகக் கொஞ்சினார்கள் கல்லூரி நட்புகள்.

 கறுப்பர்களைப் புண்படுத்திய மார்க்

கறுப்பர்களைப் புண்படுத்திய மார்க்

மார்க்கின் கை கால்கள் சும்மா இல்லாமல் ஹார்வர்டிலேயே அழகான ஆண் பெண்ணை தேர்ந்தெடுக்க ஃபேஸ் மேஷ் என ஒரு செயலியை எழுதி வெளியிட்டார். தேவையான டேட்டாக்களை ஹார்வேர்ட் பல்கலைக்கழக சர்வர்களில் இருந்தே எடுத்தார். அப்புறம் என்ன அடுத்த சில மணிநேரங்களில் ஹார்வர்ட் சர்வர் ஜாம்... இதில் பல கறுப்புத் தோல் கொண்டவர்களின் மனம் புண்பட்டதையும் கண்டு மனம் நொந்து கொண்டான் மார்க். இனி செத்தாலும் இப்படி ஒருத்தன புண்படுத்தக் கூடாது என சபதமே எடுத்தானாம்.

இப்ப தான் ஃபேஸ்புக்

இப்ப தான் ஃபேஸ்புக்

2004-ல் ஒரு நல்ல சோஷியல் நெட்வொர்க் தளத்தை அமைக்க (ஹார்வர்டு மாணவர்களுக்கு மட்டும்) திட்டம். தப்பித் தவறி கூட ஃபேஸ்மேஷ் போல இருக்கக் கூடாது. யாரையும் புண் படுத்தக் கூடாது. ஆனால் எல்லாம் இருக்க வேண்டும். தன் கருத்தைச் சொல்ல வேண்டும், அடுத்தவர்களின் கருத்தைப் பார்க்க வேண்டும், பகிர வேண்டும், இரு தனி நபர்களுக்கான பேச்சு வார்த்தைகள், பகிர்தல்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் எல்லாம் இருக்க வேண்டும்... பல நாள் யோசனை தீவிர உழைப்பு... விளைவு... ஃபேஸ்புக். `thefacebook.com உருவானது.

செம அடி

செம அடி

அதுவரை மார்க் கண்டது எல்லாம் பாராட்டுகள்... தான் அன்று ஃபேஸ்புக்குக்காக எத்தனை விமர்சனங்கள். டேய் என்னடா பேஜ் லோடே ஆகல... எப்பா என்னோட ஸ்டேட்டஸ் வரல... இல்ல இது சரி வராது போய் பொளப்ப பாக்கலாம் என பல்வேறு நெகடிவ் விமர்சனங்கள். மார்க் அனைத்தையும் குறித்தான்... ஒவ்வொன்றாக குறிவைத்து சரி செய்தான். அதிரி புதிரி ஹிட்...

முதல் முதலீடு

முதல் முதலீடு

மார்க்கின் நண்பர் சாவ்ரின், ஃபேஸ்புக் தளத்தில் 1,000 டாலர் முதலீடு செய்ய, மாதத்துக்கு 85 டாலரில் தளத்துக்காக ஒரு சர்வரை வாடகைக்கு எடுத்தார்கள். அந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மார்க், தனது ஹார்வர்டு இமெயில் மூலம் தி ஃபேஸ்புக்கின் முதல் உறுப்பினராகப் பதிவுசெய்தார். தளம் இயங்க ஆரம்பித்தது. ஆரம்பமே ரணகள ஹிட். ஒருசில நாட்களிலேயே ஹார்வர்டு வளாகத்தில் ‘நீ ஃபேஸ்புக்ல இருக்கியா?' எனத் தான் பேசத் தொடங்கினர்.

அமெரிக்க கொடியின் நீலம்

அமெரிக்க கொடியின் நீலம்

ஹார்வர்ட் நிறுவனத்தின் பழைய, புதிய மாணவர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் மார்க்கின் வட்டத்தில் (ஃபேஸ்புக்கில்). சில வாரங்கள் தான்... ஹார்வர்டில் ஃபேஸ்புக்கில் இல்லாத நபரே கிடையாது என்கிற நிலையில் செய்தி சரமாரியாகப் பரவியது. நாங்க யேல் பல்கலைக்கழகத்துல இருந்து வர்றோம் எங்களுக்கு ஒரு ஃபேஸ்புக் வேணும் செஞ்சித் தாங்களேன் ப்ளீஸ்... இதுல என்ன நீங்களும் இதயே யூஸ் பண்ணிக்குங்க என்றது தான் தாமதாம். அடுத்த சில மாதங்களில் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் ஃபேஸ்புக்கின் நீலக் கொடி தான். மார்க்கின் மாயவலை தான்.

மாயவலைக்கு விலை

மாயவலைக்கு விலை

எத்தனையோ கம்பெனிகள் “எதுக்கு தம்பி கஷ்டப் பட்டுக் கிட்டு இருக்க. உன் வயசுல நல்லா ஜாலியா ஊர் சுத்தாம எதுக்கு இந்த கம்பெனிய கட்டிக்கிட்டு அழுவுர” என மைக்ரோசாஃப்ட் தொடங்கி, நேற்று தொடங்கிய டப்பா கம்பெனி வரை விலை பேசினார்கள். மார்க் மசியவில்லை. இது என் ஐடியா. இதில் சலிப்பு தட்டும் வரை நான் இதை மேம்படுத்துவேன் என ஒரு வரியில் முடித்தான் மார்க். சொன்னதை செய்தும் காட்டினான் தானே...

கள நில வரம்

கள நில வரம்

மார்கும் ஃபேஸ்புக்கும் இரண்டரப் பின்னிய பின் 2004-ம் ஆண்டு அக்டோபர் மாத முடிவில் 5 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்து இருந்தார்கள். அடுத்த ஆறு மாதத்தில் ஜஸ்ட் 50 லட்சம் பேரை கவர்ந்தது ஃபேஸ்புக்-மார்க் காம்போ. மிக லோக்கலான ஃபேஸ்புக் நபர்களுக்கு பயன்படக் கூடிய சிறிய சிறிய விளம்பரங்களை மட்டும் பதிவிட்டு கொடுத்து லாபத்தை பார்த்தார் மார்க். மார்க்குக்கு விளம்பரங்களைக் காட்டுவதில் விருப்பம் இல்லை.

 சுருங்கு விரி

சுருங்கு விரி

thefacebook.com என்று இருந்த பெயரை, facebook.com ஆகப் மாற்றினார் மார்க். இந்த நேரத்தில் 10 மில்லியன் 20 மில்லியன் என விலை பேசிய நிறுவனங்களே இப்போது 600 மில்லியன் டாலர், 700 மில்லியன் டாலர் என சில பல 0000000-க்களை சேர்த்து செக் எழுதினார்கள். எழுதி என்ன பயன்... அத்தனை செக்குகளும் குப்பைக்குத் தான் போனது. ம்ஹும்... இப்போதும் மசியவில்லை மார்க்.

முகப் புத்தகம் எல்லோருக்கும்

முகப் புத்தகம் எல்லோருக்கும்

2006-ல் செப்டம்பரில், மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கான சேவையையும் ஆரம்பித்தது ஃபேஸ்புக். 2007-ல் நிறுவனங்களுக்கான பிசினஸ் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து ஃபேஸ்புக் வால், நியூஸ் பீட், போட்டோ ஷேரிங், கேம்ஸ், குரூப்ஸ் எனப் புதிய வசதிகள் பளபளக்க, சமூகம் அள்ளி அணைத்துக் கொண்டது. "இந்த ஃபேஸ்புக்கை ஆரம்பிச்சப்ப, இதுக்கு இவ்வளவு பெரிய வியாபாரம் இருக்குமுன்னு நினைக்கவும் இல்லை. கனிக்கவும் இல்ல" என்று உண்மையை ஒப்புக் கொள்கிறார் மார்க்.

இதோ வந்துட்டோம்

இதோ வந்துட்டோம்

2009-ல் மொபைல் போன்களில் முகநூலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருக்கல் வாய்ப்பாடு போல அதிகரித்தது. 2011-ல் என்ன கூகிள் நல்லா இருக்கியா என தோல் மேல் கைபோட்டு பேசும் அளவுக்கு கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களை கொண்ட வலைதளமாக அரியாசனம் இட்டு அமர்ந்தது முகநூல். 2008-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு, பின் 2011-ல் ஃபேஸ்புக்கின் முகம் மாறியது. ஜாலி, கேலி என்று இருந்தது போய் சீரியஸான விஷயங்களுக்கும் முகநூல் உதவியது. எகிப்திய புரட்சி தொடர்பான பல்வேறு கருத்துக்கள் நேரடியாக ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்பட்டது. இன்று இந்திய ஜனாதிபதி கோவிந்த் தொடங்கி, கோபால் பல்பொடி வரைக்கும் எல்லோருக்கும் ஃபேஸ்புக்கில் இடம் உண்டு. அய்யாதுரை ஸ்டாலின் தொடங்கி, ஐந்து ரூபாய் சாமான் விற்பவர் வரை எல்லோருக்கும் ஒரு தளம்... ஒரே தளம்... ஃபேஸ்புக். அது தான் மார்க் அதற்காகத் தான் மார்க்

 மொய்த்த முதலீட்டாளர்கள்

மொய்த்த முதலீட்டாளர்கள்

மார்க்கை விட ஃபேஸ்புக்கின் ஆற்றலை சரியாக கணித்தவர் மார்க்கின் வலது கரமாக செயல்பட்ட சியன் பார்கர் தான். பார்கரும் மார்க்கை போல கோடிங் மூலை கொண்டவர் தான். நல்ல அனுபவம் மற்றும் திறமைசாலி... ஆனால் தோல்விகள் தான் அதிகம். ஆக இவரின் திறமைக்கு ஓகே சொல்லி கைகோர்த்தார் மார்க். அன்று முதல் ஃபேஸ்புக்கில் பெரிய முதலீடுகளைக் கொண்டு வருவது, நிர்வகிப்பது எல்லாம் பார்க்ர் வேலை தான். முதலீட்டாளர்களுக்கும் போட்ட பணத்தை எதிர்பார்த்த லாபத்துடன் திருப்பிக் கொடுக்கவும் செய்தார் மார்க். இப்படி முதலீட்டாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாக தெரிந்தார் நம் மார்க்.

கெளம்புயா வந்துட்டான்

கெளம்புயா வந்துட்டான்

இத்தனை பிரம்மாண்டங்களை செய்து கொடுத்த மார்க்கைத் தான் இன்று அதே முதலீட்டாளர்கள் "நீ செஞ்ச வேலக்கு எங்க பணம் போய்டும் போல... நீ மொதல்ல ஃபேஸ்புக்கை விட்டு கெளம்பு" என்று விரட்டுகிறது. இத்தனை பெரிய வியாபார நோக்கத்தையே கணிக்காத மார்க் இந்த வார்த்தைகளையும் கணித்திருக்கமாட்டான் தானே...?

ஜோனஸ் க்ரான்

ஜோனஸ் க்ரான்

ஜோனஸ் க்ரான் என்பவர் ட்ரில்லியும் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர் பேஸ்புக்கின் முக்கியமான முதலீட்டாளர்களில் ஒருவர். இவரிடம் பேஸ்புக்கின் 8.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புக்கான பங்குகள் உள்ளது. இவர் தான் சமீபத்தில் மார்க்கை அழைத்துப் பேஸ்புக்கின் சிஇஓ பதவியில் இருந்து விலகி, சேர்மன் ஆக பதவி ஏற்குமாறு அறிவுறுத்தி இருக்கிறாராம்.

 என்ன காரணம்

என்ன காரணம்

பேஸ்புக் அடிப்படையில் ஒரு நிறுவனம் தான். ஆனால் அது ஒரு தனி மனித அமைப்பாகச் செயல்படுகிறது. இதற்கு அதன் சிஇஓ மற்றும் சேர்மன் தனித்தனியாக இருக்க வேண்டும்", எனவே தான் மார்கை தலைவராக பொறுப்பேற்கச் சொல்கிறோம். என்பது க்ரோனின் பதில். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... சில வெளி நிறுவனங்கள் மூலம் பேஸ்புக் மீது இருந்த நெகட்டிவ் இமேஜ் மற்றும் கடுப்பாகி இருந்த மக்கள் கவனத்தை அதன் போட்டி நிறுவனங்களின் மேல் திசை திருப்ப ஃபேஸ்புக்கின் முதலீட்டாளர்களில் முக்கியமான ஜார்ஜ் சோராஸ் என்பவர் உடன்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

2016 அமெரிக்கத் தேர்தல்

2016 அமெரிக்கத் தேர்தல்

இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல 2016-ல் நடந்த அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டிற்குப் பேஸ்புக் ஆதரவாக இருந்த பிரச்னை மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா ஊழல்களினால் ஏற்பட்ட டேமேஜை ஈடுகட்ட Definers Public Affairs என்கிற நிறுவனத்தை பயன்படுத்தியதும் தெரிய வந்திருக்கிறது.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மார்க், "இந்தத் தகவலை அறிந்த உடன் நான் எனது அணியிடம் இதைப் பற்றி விசாரித்தேன், இப்போது அந்த Definers Public Affairs நிறுவனத்துடன் பணியாற்றவில்லை என்று பதில் அளித்தனர்" ஆக இதற்கு முன் ஃபேஸ்புக் அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை மார்க் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ராஜிநாமா

ராஜிநாமா

இப்படிப் பல பிரச்சனைகள் பேஸ்புக் தலைவர் மார்க்கை சுற்றி வருவதன் மூலம் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் மார்க் தனது சிஇஓ மற்றும் சேர்மன் என இரட்டைப் பதவியில் இருந்து விலகி, தலைவர் பதவியை மட்டும் வகிக்குமாறு முதலீட்டர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

வர்த்தகம் சரிவு

வர்த்தகம் சரிவு

இந்த சர்ச்சைகளால் பேஸ்புக் நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த ஜூன் 18 அன்று வியாபாரமான 217 டாலரில் இருந்து சரிந்து தற்போது 139 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. ஃபேஸ்புக்கின் மொத்த பங்குகளில் 60 சதவிகித பங்குகளை மார்க் தான் இப்போது வரை வைத்திருக்கிறார். ஆக இயக்குநர் குழுவால் கூட மார்க்கை பதவியில் இருந்து விலக்க முடியாது. ஆனால் பங்கு மதிப்பு சரிவு.. என்கிற காரணத்தால், முதல் போட்ட முதலீட்டாளனை அழைத்துவிட்டது. பங்கு மதிப்பு சரிவு, முதலீட்டாளர்களின் பணச் சரிவுக்குச் சமம். ஆகையால் தான் தங்கள் பணத்தை பாதுகாத்துக் கொள்ள மார்க்கை சிஇஓ- பதவியில் இருந்து இறங்கச் சொல்கிறார்கள். மார்க்கும் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்கிறார். உலகின் இள வயது பில்லியனர், உலகின் இரண்டாவது அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியை உருவாக்கிய தகப்பனையே இன்று தங்கள் பணத்துக்காக பதவி விலகச் சொல்கிறார்கள். ஃபேஸ்புக்கின் பிரம்மன் பதவி விலகுவாரா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mark Zuckerberg want to step down as chairman, facebook investors

Mark Zuckerberg want to step down as chairman, facebook investors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more