பாஸ், 70 பில்லியன் டாலர் 'நஷ்டம்'.. போடா அந்த ஆண்டவனே 'நம்ம பக்கம்'..!

Posted By: Srinivasan
Subscribe to GoodReturns Tamil

மாசாயோஷி சான்- ஜப்பானின் பில் கேட்ஸ் என்று அழைக்கப்படுபவர் மட்டுமல்ல சில வருடங்கள் பில்லுக்கும் அதிக மதிப்புள்ளவராக கருதப்பட்டார்.

அவர் ஜப்பானின் இரண்டாவது பெரிய செல்வந்தராகவும் இருப்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்களால் விட்டரில் பின்தொடரப்படுபவராகவும் ஜப்பானின் மிகவும் பிரபலமான தொழிலதிபராகவும் உள்ளார்.

வர்த்தக உலகில் சில பல்லியன் டாலர் நஷ்டம் அடைந்தாலே நிறுவனம் திவாலாகி விடும் அளவிற்கு பிரச்சனைகள் வரும். ஆனால் மாசாயோஷி சொன் 70 பில்லியன் நஷ்டத்தை சந்தித்த கதை தெரியுமா உங்களுக்கு. இத்தகைய பெரும் நஷ்டத்தில் இருந்து அவர் மீண்டு வந்த பாதை பாருங்க.

70 பில்லியன் டாலர் நஷ்டம்

மாசாயோஷி சொன்-இன் வியாபார வெற்றிக்கு கடின உழைப்பு மட்டும் இல்லை வேறொரு காரணமும் இருக்கிறது - அவர் ஒரு முறை 70 பில்லியன் டாலர்களை (அதாவது நாலரை இலட்சம் கோடிக்கும் மேல் - யப்பா!) இழந்தார்.

வர்த்தக உலகில் எந்த ஒரு மனிதனும் இதுவரை இழந்திராத அளவிற்கு தலை சுற்றவைக்கும் தனிப்பட்ட மனிதனின் இழப்பு இது. பலருக்கு இது போன்ற ஒரு இழப்பு நிலைகுலையைச் செய்வதான மீண்டு வர இயலாத ஒரு மரண அடி.

 

மசாயோஷி சொன் ஒரு பெரும்பான்மை மனிதன் அல்ல

அவர் நிலைகுலைந்துபோன அந்த நிகழ்விக்கு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஸ்ப்ரின்ட்(Sprint) மற்றும் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான சாப்ட்பாங்க் ஆகிவற்றின் நிறுவனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் (சீஇஓ) மிகப்பெரும் செல்வந்தராகவும் வெற்றியான மனிதனாகவும் ஜப்பானில் தொடர்கிறார்.

அந்த நட்டத்திலிருந்து அவர் மீண்டது எப்படி?

 

முந்தைய நாட்கள்

மசாயோஷி சொன் ஜப்பானில் ஒரு இரண்டாம் தலைமுறை கொரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்தபோது அவர்கள் குடும்பம் வழக்கமாக ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டவர்களை பேதம் கண்டு பிரிக்கும் சொன் என்கிற அடைமொழியை பயன்படுத்தாமல் யசுமோடோ என்கிற குடும்பப் பெயராக மாற்றிக்கொண்டனர்.

பின்னர் அவர் தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்தி வந்த வம்சாவளிப் பெயரை மீண்டும் வைத்துக் கொண்டார்.

பதினாறு வயதில் சொன் கலிஃபோர்னியாவிற்கு படிப்பிற்காக பயணித்து பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார்.

 

சொன்னின் வளர்ச்சி

1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொன் சாப்ட்பாங்க் நிறுவனத்தை நிறுவி மூன்று ஆண்டுகளுக்குள் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான ஜப்பானிய மென்பொருள் நிறுவனங்களை ஓரம் கட்டினார்.

1990-களின் மத்தியில் இன்டர்நெட் வசதி கண்டுபிடிக்கப்பட்டு தொடங்கப்பட்டபோது சொன் பன்னாட்டு பெருநிறுவனத்தின் ஒரு அங்கமாக யாஹூ ஜப்பான் நிறுவனத்தை நிறுவும் ஒரு தைரியமான முடிவை மேற்கொண்டார்.

 

கனவு..

அவருக்கு நீண்டகால வெற்றிக்கு ஜப்பானால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவது முக்கியமான ஒன்றாக இருந்தது. ஏன் இதை அவருடைய கனவு என்று கூட சொல்லாம். இது ஒரு வித்தியாசமான ஒரு தொலைநோக்காக அந்த காலகட்டத்திலும் ஏன் இன்றும் கூட இருக்கிறது.

இதன் மூலம் உருவானது தான் சாப்ட்பேங்க்.

 

யாஹூ- கூகிள்

யாஹூ ஜப்பான் கூகிளின் வழிமுறையை பின்பற்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து அதன் விளைவாக, யாஹூ மற்ற நாடுகளில் தோல்வியுற்றாலும் தற்போது ஜப்பானின் மிகப் பிரபலமான தேடுதல் சாதனமாக உள்ளது.

இந்த ஒப்பந்தம் மற்றும் மாற்றங்கள் சொன் தலைமையில் செயல்பட்டவை. இன்றளவும் யாஹூ ஜப்பான் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவநம் 36.4 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

 

டாட்காம் வர்த்தகம்

சொன் ஒரு தொடர்ச்சியான தைரியமான மற்றும் மதிநுட்பமான சில நடவடிக்கைகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டு முடிவுறும் வேளையில் டாட்காம் வர்த்தகத்தில் அதிக முதலீடு செய்தார்.

இந்த தைரியமான செயல்முறை அவருடைய உடனடி வெற்றிக்கும் பின்னர் தோல்விக்கும் கூட காரணமாக அமைந்துவிட்டது.

 

வீழ்ச்சி

அவர் வோடபோன் ஜப்பான் நிறுவனத்திற்கு 15 பில்லியன் டாலர்களைத் தர சம்மதித்து அறிவிப்பு வெளியிட்டபோது ஏற்பட்ட தோல்வி அவருடைய வீழ்ச்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இது அரசாங்கத்தினால் நடத்தப்படும் என்டிடி டொகோமோ நிறுவனத்துடன் போட்டிபோட எடுத்த முயற்சி. இந்த முயற்சிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்பதோடு சாப்ட்பாங்க் நிறுவனம் சரியத் தொடங்கியது.

 

டாட்காம் வீழ்ச்சி

மேலும் உலக அளவில் டாட்காம் தொழிலின் நம்பிக்கை ஒரு பதினெட்டு மாத காலத்திற்குள் நொறுங்கியதும் சாப்ட்பாங்க் சந்தை முதலில் 99% சதவிகிதத்தை அதாவது 200 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 2 பில்லியன் டாலர் அளவுக்கு இழந்தது.

சொன்னின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்த காலகட்டத்தில் 70 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது.

 

போடா ஆண்டவனே நம்ம பக்கம்..

இந்த பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு சொன் "இதெல்லாம் பிஸினஸ்ல சாதாரணமப்பா" என்பதுபோல் தன் பணியைத் தொடர்ந்தார். ஏனென்றால் அவர் அதை அப்படித்தான் பார்த்தார்.

அவர் டாட்காம் பபுள் என்று சொல்லப்படும் ஒரு வீக்கத்தையே அவர் முதலில் நம்பவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்த வீழ்ச்சி சந்தை திருத்தம் என அவர் குவார்ட்ஸ் நேர்முகக் கானலில் 2015-ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.

 

திரும்பிய பாதை

இண்டர்நெட் பபுள் அல்லது சந்தை திருத்தத்திற்கு பின்வந்த வருடங்களில் சொன் தன் நிறுவனத்தை மீண்டும் நிலை நிறுத்த சரியான வழி மொபைல் போன் வர்த்தகம் என்பதை உணர்ந்தார்.

மீண்டும் இது ஒரு தொலை நோக்குடன் கூடிய ஒரு வெற்றிப்பாதைக்கான குறி தவறாத செயல் முறையாக அமைந்தது.

 

ஆப்பிள் உடன் கூட்டணி

2006ஆம் ஆண்டு முதல் ஐபோன் வெளிப்படுவதற்கு முன் அவர் ஆப்பிளுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு ஜப்பானில் அதன் ஒட்டுமொத்த விநியோகஸ்தராக மாறினார். அந்த நாட்களில் ஐபோனின் வெற்றி அவ்வளவு உறுதியானதாக இல்லை.

ஆனால் சொன் இந்த சூதாட்டத்தை கையிலெடுத்து அவருடைய இன்டர்நெட் வர்த்தகத்தை கொண்டு ஒவ்வொரு புதிய இன்டர்நெட் இணைப்பிற்கும் ஒரு ஐபோன் இலவசம் என அறிவித்தார். சந்தேகமில்லாமல் அதை தொடர்ந்து நிகழ்ந்தது ஒரு மாபெரும் வெற்றி.

ஐபோன் ஜப்பானின் பிரபலமான ஸ்மார்ட்போனாக மாறியதுடன் சாப்ட்பாங்க் தன்னுடைய சந்தாதாரர்கள் எண்ணிக்கையை 1.6 கோடியிலிருந்து 3.5 கோடியாக உயர்ந்தது.

 

இது நமக்கு உணர்த்தும் பாடம்?

மாசயோஷி சொன்னின் கதை மீண்டுவந்த கதை மட்டுமல்ல அது ஒரு விடாமுயற்சியின் கதையும் கூட.

அவரிடம் மாறுபட்ட நம்பிக்கை மற்றும் பின்னடைவுகளில் அவருடைய உள்ளுணர்வு ஆகியவை சிறிதளவு மனிதர்களையே வீழ்த்தியிருக்கும் என்றாலும் அவருடைய கூர்மையான கவனம் மற்றும் ஜப்பானிய வர்த்தகச் சூழலில் அவருக்கிருந்த நம்பிக்கை ஆகியவை அவருக்கு ஒரு வித்தியாசமான வெற்றியை ஜப்பானின் மற்ற வர்த்தக்க முயற்சிகள் போராடிக்கொண்டிருந்த வேளைகளில் அவருக்கு தந்தது.

மேலும் இந்த காரணம் தான் 70 பில்லியன் டாலர் அளவுக்கு ஒரு பெரும் தனிப்பட்ட செல்வ இழப்பை சந்தித்த போதும் அவர் ஜப்பான் வர்த்தகத்தின் ஒரு வெற்றிச்சின்னமாக அவரை இதுவரை காட்டிவருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Masayoshi Son Lost $70 Billion and Earned it All Back

Masayoshi Son Lost $70 Billion and Earned it All Back - Tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns