வாவ்... மாஸ்கினால் அமெரிக்காவுக்கு இப்படி கூட ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறதா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவ வாய்ப்புள்ளதால், கட்டாயம் பேஸ் மாஸ்க் அணிவது இன்றும் பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இது அமெரிக்காவிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆக இந்த மாஸ்க் ஆணையானது தினசரி கொரோனா தாக்குதல்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இவ்வாறு மாஸ்க் அணிவதால் பொருளாதாரமும் சற்று வளர்ச்சி காணக்கூடும் என்றும் கோல்டுமேன் சாச்ஸ் அறிக்கை.

மாஸ்கிற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பு

மாஸ்கிற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பு

இது குறித்து கோல்டுமேன் சாச்ஸின் மூத்த பொருளாதார நிபுணரான ஜான் ஹாட்ஜியஸ், பேஸ் மாஸ்க் மற்றும் கொரோனா வைரஸ், பொருளாதார பிரச்சனைகளுக்கு இடையிலான தொடர்பினை ஆராய்ந்ததாக கூறியுள்ளார். இந்த ஆய்வின் மூலம் மாஸ்குகள் கணிசமான அளவு தொடர்புடையது என்று கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

லாக்டவுனுக்கு மாற்று

லாக்டவுனுக்கு மாற்று

மேலும் தங்களது ஆய்வின் படி, நாடு தழுவிய மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கினால், மாஸ்க் அணியும் மக்களின் விகிதம் 15 சதவீதம் உயர்த்தப்படலாம். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பின் விகிதத்தினை 0.6% குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மாஸ்குகள் லாக்டவுனுக்கு மாற்றாகவும் அமையலாம்.

ஜிடிபி சரியலாம்
 

ஜிடிபி சரியலாம்

அப்படி இதனை கடைபிடிக்கவில்லை எனில், ஜிடிபி விகிதமானது 5 சதவீதம் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பொருளாதார நிபுணர் மாஸ்குகளின் உண்மையான பயன்பாடு, கொரோனாவினால் தொற்று நோயை எந்த அளவுக்கு குறைக்கும் என்பதில், முதலில் கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மாஸ்க் கட்டாயம் அணிவோம்

மாஸ்க் கட்டாயம் அணிவோம்

அரிசோனாவில் இது குறித்து பதிலளித்தவர்களில் 40 சதவீதம் பேர் எப்போதும் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் ஹாட்ஜியஸ் கண்டுபிடித்துள்ளார். இதே மாசசூசெட்ஸில் (Massachusetts) கிட்டதட்ட 80% பேர் உடன் ஒப்பிடும் போது அவர்கள் எப்போதும் மாஸ்க் அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனராம்.

மாஸ்க் கட்டாயம்

மாஸ்க் கட்டாயம்

கடந்த ஏப்ரல் 8 முதல் ஜூன் 24 வரை அமெரிக்காவின் 20 மாநிலங்களில் மற்றும் கொலம்பியாவில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டினை கோல்டுமேன் சாச்ஸ் பகுப்பாய்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளது. கோல்டுமேன் இந்த கட்டுப்பாடுகளையும், சாதாரணமாக பேஸ் மாஸ்க் அணிபவர்களையும் ஒப்பிட்டு ஒரு முடிவினை அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் பெரிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

நிச்சயம் வளர்ச்சி இருக்கும்

நிச்சயம் வளர்ச்சி இருக்கும்

ஒரு மாஸ்க் குறித்தான ஆணை நோய்த் தொற்றுகளை அர்த்தமுள்ளதாகக் குறைத்தால், அது பொது சுகாதார கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, பொருளாதார கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தாலும் மதிப்பு மிக்கதாக தெரியும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை புதுபிக்கவும், லாக்டவுனுக்கு மாற்றாகவும் இருக்கலாம் என்று ஹாட்ஜியஸ் தெரிவித்துள்ளார்.

நிச்சயம் இது பொருளாதாரத்தினை மேம்படுத்த கைகொடுக்கும். அது பெரியளவில் இல்லாவிட்டாலும், கணிசமான அளவு வளர்ச்சியினைக் காணலாம். இது இந்தியாவிற்கும் பொருந்துமே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mask mandate may down infection and save US economy

Generally face mask mandate lowers coronavirus cases. it could be substitute for renewed lockdowns that would boom economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X