சத்ய நாடெல்லா-வின் முதல் சிக்சர்.. லிங்க்டுஇன் நிறுவனத்தை கைப்பற்றியது மைக்ரோசாப்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தொழில் வல்லுனர்களுக்காகப் பிரத்தியேகமாக விளங்கும் சமுகவலைத்தள நிறுவனமான லிங்க்டுஇன் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்ற உள்ளது.

 

சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ-வாக பதவியேற்றி பின் இந்நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இது. இதுவே நாடெல்லாவின் முதல் சிக்சர் என்று கூறலாம்.

பேஸ்புக்

பேஸ்புக்

சமுகவலைத்தள உலகில் பேஸ்புக் நிறுவனத்திற்குப் பிறகு மிகப்பெரிய மற்றும் மதிப்புத்தக்க நிறுவனமாகக் கருதப்படுவது லிங்க்டுஇன்.

26.2 பில்லியன் டாலர்

26.2 பில்லியன் டாலர்

நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள லிங்க்டுஇன் நிறுவனத்தை ஒரு பங்கிற்கு 196 டாலர் என்ற தொகையில் மொத்தம் 26.2 பில்லியன் டாலர் தொகைக்கு முழுமையாகவும் மொத்தமாகவும் கைப்பற்ற உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.

ஜெப் வெயினர்

ஜெப் வெயினர்

லிங்க்டுஇன் நிறுவன கைப்பற்றுதலுக்குப் பின்னரும் இந்நிறுவனத்திற்குச் சிஇஓவாக ஜெப் வெயினர் தொடர்வார் எனச் சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்
 

ஒப்புதல்

இத்திட்ட ஒப்புதலுக்கு லிங்க்டுஇன் நிறுவனத்தின் சீஇஓ ஜெப் வெயினர் மற்றும் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணை நிறுவனரான ரெயிட் ஹப்மேன் அவர்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார்.

வர்த்தகம்

வர்த்தகம்

லிங்க்டுஇன் நிறுவனம் சமுகவலைத்தள சேவை மட்டும் அல்லாமல் பல துறைகளில் மென்பொருள் மற்றும் பிராடெக்ட் சேவைகளையும் அளித்த வருகிறது குறிப்பிடத்தக்கது.

மொபைல் ஆப்

மொபைல் ஆப்

கடந்த வருடம் இந்நிறுவனம் அறிமுகம் செய்த லிங்க்டுஇன் மொபைல் ஆப் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு அளித்தது. இதன் அறிமுகத்தின் மூலம் இந்நிறுவனத்தின் என்கேஜ்மென்ட் அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

433 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த லிங்க்டுஇன் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்களை பெறுவதில் 19 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

மொபைல் பயன்பாடு

மொபைல் பயன்பாடு

இந்நிறுவனத்தின் சேவைகளை மொபைல் பயன்பாட்டிலி ஒவ்வொரு வருடமும் 49 சதவீதம் அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாக LinkedIn தெரிவித்துள்ளது.

வீடியோ

மைக்ரோசாப்ட்-LinkedIn வீடியோ

நோக்கியா

நோக்கியா

மைக்ரோசாப்ட் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்புதான் நோக்கியா நிறுவனத்தை 7.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.

நோக்கியா நிறுவனத்தை கைப்பற்றி முழுமையாக 2 வருடங்கள் கூட முடியாத நிலையில் தற்போது LinkedIn நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது.

சத்ய நடெல்லா

சத்ய நடெல்லா

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சத்ய நாடெல்லா பெறுப்பேற்ற சில வருடங்களிலேயே இந்நிறுவனம் பல பரிமானங்களில் வளர்ச்சி அடைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

சத்ய நாடெல்லா

மைக்ரோசாப்ட் மற்றும் LinkedIn இணைப்பு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ சத்ய நாடெல்லாவின் டிவிட்டர் பதிவு.

ஜெப் வெயினர்

26.2 பில்லியன் டாலர் இணைப்பு குறித்து LinkedIn சீஇஓ ஜெப் வெயினர்-இன் டிவிட்டர் பதிவு.

ரெயிட் ஹப்மேன்

LinkedIn நிறுவனத்தின் துணை நிறுவனரான ரெயிட் ஹப்மேன்-இன் டிவிட்டர் கருத்து.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft to acquire LinkedIn for $26.2 billion

Microsoft is announcing today that it plans to acquire LinkedIn for $26.2 billion. Microsoft's deal to acquire the work-focused social networking giant is an all-cash transaction, and it will value LinkedIn's shares at $196 each.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X