Microsoft-யின் கையில் இருந்து நழுவிப் போன டிக்டாக் டீல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிக் டாக். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லோரும் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சீன செயலி. இந்த டிக் டாக் செயலி வழியாக தரவுகள் திருடப்படுவதாக புகார் கூறப்பட்டது.

அமெரிக்காவும் இதே புகாரை எழுப்பியது. இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத வண்ணம், கடந்த ஜூன் 2020-ல், சீனாவின் தாக்குதால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், மத்திய அரசு, டிக் டாக் உட்பட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்தது.

அமெரிக்கா தடை

அமெரிக்கா தடை

இந்தியா 59 சீன செயலிகளுக்கு தடை விதித்ததை பாராட்டியது அமெரிக்கா. கையோடு "செப்டம்பர் 15-ம் தேதிக்குள், டிக் டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை, ஒரு அமெரிக்க கம்பெனி வாங்கவில்லை என்றால் டிக் டாக்குக்கு தடை விதிப்பேன்" என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த பேச்சு வெளியானது முதல், மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டியது.

மைக்ரோசாஃப்ட் தரப்பு

மைக்ரோசாஃப்ட் தரப்பு

சீனா, டிக் டாக் செயல்பாடுகளை கண்காணிக்காமல் இருக்கவும், பல கோடிஅமெரிக்கர்களின் பிரைவசியை பாதுகாக்கவும், டிக்டாக்கின் கம்ப்யூட்டர் கோட் & யார் எந்த வீடியோவை பார்க்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் அல்காரிதம்களை எடுத்து விடுவது நல்லது என வெளிப்படையாகச் சொன்னது மைக்ரோசாஃப்ட் கம்பெனி.

ஆரக்கில் வருகை

ஆரக்கில் வருகை

மைக்ரோசாஃப்ட் மட்டுமே டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டுவது போலத் தோன்றிய நேரத்தில், ஆரக்கில் கம்பெனியும் டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டியது. தற்போது டிக்டாக், தன் அப்ளிகேஷனுக்கான டெக்னாலஜி பார்ட்னராக (அமெரிக்க செயல்பாடுகளுக்கு), ஆரக்கிலைத் தேர்வு செய்து இருக்கிறது என மைக்ரோசாஃப்ட் கம்பெனியே சொல்லி இருக்கிறது.

ஆரக்கில் தரப்பில் பதில் இல்லை

ஆரக்கில் தரப்பில் பதில் இல்லை

மைக்ரோசாஃப்ட் மேலே சொன்னது போல, கோடிக் கணக்கான டிக் டாக் அமெரிக்க பயனர்களின் பிரைவசியை பாதுகாக்கவும், சீனா, டிக் டாக் செயலியைப் பயன்படுத்தாமல் இருக்கவும் என்ன செய்வார்கள் எனச் சொல்லவில்லை. அதோடு சீன பொறியாளர்கள் எழுதிய டிக் டாக் கோட்களை என்ன செய்ய இருக்கிறது எனவும் சொல்லவில்லை. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft lost the tiktok deal oracle chosen as a technology partner for us operations

The mighty it company Microsoft has lost the tiktok deal. Tiktok chose oracle as the application's Technology partner for its us operations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X