பச்சை கொடி காட்டிய Trump.. மோடியின் அதிரடியான பேச்சால்.. இந்தியாவுக்கு விடிவுகாலம் வருமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒசாகா : மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதிலிருந்து, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திப்பது இதுவே முதன் முறையாகும்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து கொண்டிருக்கும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் வருகின்றனர்.

எல்லாப் புகழும் மோடிக்கே!

எல்லாப் புகழும் மோடிக்கே!

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை பார்த்து, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் நீங்கள் வெற்றிக்கு தகுதியானவர் தான். நீங்கள் முதன்முறையாக பொறுப்பேற்ற போது, இந்தியாவில் பல பிரிவுகள் இருந்தன. அதோடு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அனைவரும் சேர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் ஒரு நல்ல பணியை செய்துள்ளீர்கள். இதற்கு உங்கள் திறமையே காரணம் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளராம்.

வலுப்பெற்ற இந்தியா- அமெரிக்கா உறவு

வலுப்பெற்ற இந்தியா- அமெரிக்கா உறவு

இந்தியாவும் அமெரிக்காவும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமடைந்து உள்ளது. நாங்கள் பல துறைகளில் ஒன்றாகச் செயல்படுகிறோம். தற்போது வர்த்தகம் தொடர்பாகவும் பேசி வருகிறோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளாராம்.

இது தான் பேசினாரா?

இது தான் பேசினாரா?

ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, முக்கியமான நான்கு விஷயங்களை பற்றி பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டு காட்டுயுள்ளதாகவும், அதை பேசியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரான் பற்றிய பிரச்சனையும், 5ஜி பற்றியும், வர்த்தக உறவுகள் பற்றியும், அதோடு பாதுகாப்பு பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.

கவலை அளிக்கும் விதமாக எண்ணெய் இறக்குமதி

கவலை அளிக்கும் விதமாக எண்ணெய் இறக்குமதி

குறிப்பாக கச்சா எண்ணெய் பற்றி பேசிய மோடி, இந்தியாவில் எண்ணெய் பற்றிய கவலைகளை எடுத்துரைத்துள்ளராம். இந்தியா கிட்டதட்ட 11 சதவிகிதம் எண்ணெய் இறக்குமதியை ஈரானிடம் இறக்குமதி செய்திருந்தாலும், தற்போது மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மோடியை பாராட்டிய டிரம்ப்!

மோடியை பாராட்டிய டிரம்ப்!

அதோடு ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்தியக் கொடி கப்பல்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா தனது இரண்டு கடற்படை கப்பல்களை இப்பகுதிக்கும் அனுப்பியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளராம். இதைக் கேட்ட ஜனாதிபதி டிரம்ப் மோடியை பாராட்டியதோடு, எண்ணெய் விலைகள நிலையானதாக இருக்கும் என்று நம்புவதாகவும், ஸ்திரத்தன்மை பேணப்படுவதை உறுதி செய்யவும் அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளாராம்.

பாதுகாப்பை பற்றி பேசிய மோடி

பாதுகாப்பை பற்றி பேசிய மோடி

பாதுகாப்பு குறித்து பேசிய மோடி இந்த பிராந்தியத்தில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அதோடு பொருளாதார நலன் கருதியும், எனவே இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டிருப்பது இந்தியாவின் அடிப்படை நலன்களில் ஒன்றாக உள்ளது என்றும் மோடி கூறியுள்ளாராம்.

ஒரு புதிய பகுதி

ஒரு புதிய பகுதி

5 ஜியை பொறுத்த வரை, இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையில், டிரம்ப் வழங்கிய ஒரு புதிய வாய்ப்பு என்றும், இது ஒரு புதிய பகுதி என்றும் டிரம்பிடம் மோடி கூறியுள்ளாராம். சர்வதேச அளவில் நாங்கள் இரண்டாவது பயனாளராக போகிறோம், கிட்டத்தட்ட பில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். அதோடு இந்தியா எந்தவொரு போக்கை தீர்மானித்தாலும், அது உலகளாவிய போக்கு செல்லும் வழியிலேயே இருக்கும் என்றும் கூறியுள்ளராம்.

இந்தியாவின் திறன்!

இந்தியாவின் திறன்!

இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஸ்டார்டப்கள், வடிவமைப்பு மற்றும் சிலிக்கான் பள்ளதாக்கு, இந்தியாவின் திறன் மற்றும் பரஸ்பர நன்மைகள், 5ஜி தொழில் நுட்பத்தை உருவாக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கோகலே கூறியுள்ளார். அதோடு பிரதமர் மோடி மேக் இன் இந்தியா முதன்மை திட்டத்தினை பற்றியும் பேசியுள்ளராம்.

பிரச்சனைகளை தீர்ப்பார்கள்!

பிரச்சனைகளை தீர்ப்பார்கள்!

குறிப்பாக இரு நாட்டு வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளை, இரு நாட்டு அமைச்சர்களும் கலந்து கொண்டு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள் என்றும், இது பேச்சு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். அதோடு குறிப்பாக வர்த்தக ஏற்றத் தாழ்வுகள் பற்றி பேசி இரு நாடுகளுக்கும் சாதமான முடிவினை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

போனது போகட்டும்?

போனது போகட்டும்?

அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிய சிறப்பு ஏற்றுமதி சலுகையை திரும்ப பெற்றதையும், இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான 28 பொருட்களுக்கு வரி அதிகரித்ததையும் பிரதமர் கூறிநாராம். இது ஏற்கனவே நடந்த ஒன்றுதான், ஆக நாம் தற்போது எப்படி இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்று பார்க்கலாம் என்றும் மோடி கூறியுள்ளாராம்.

நல்ல யோசனை?

நல்ல யோசனை?

ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடியின் இந்த யோசனையை வரவேற்றுள்ளராம். அதோடு தற்போது ஒரு ஆரம்ப சந்திப்பை எதிர்பார்க்கிறோம், இது பற்றி தாமதமாக முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். அதோடு இது ஒரு பயனுள்ள விவாதம் என்றும், மிகவும் திறந்த விவாதம் என்றும் இதை நாங்கள் விரைவில் முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றும் கோகலே கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi to Stay Focused on 'Big Picture' of India-US Relationship

Modi to Stay Focused on 'Big Picture' of India-US Relationship
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X