சீனாவிலும் விஸ்வரூபம் எடுக்கும் பணி நீக்கம்.. மூடீஸ் எடுத்த அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் டெக் ஜாம்பவான்கள் பலவும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. அது உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்கா தொடங்கி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பணி நீக்க நடவடிக்கையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

தற்போது சீனாவிலும் பணி நீக்க நடவடிக்கையானது தொடங்கியுள்ளதை பார்க்க முடிகிறது.

சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அங்கு கொரோனாவும் பரவலாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சீனாவின் பல முக்கிய பகுதிகளில் பணி நீக்கம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பணி நீக்கம் செய்ய திட்டம்

பணி நீக்கம் செய்ய திட்டம்

சீனாவில் நிலவி வரும் இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில், அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட மூடீஸ் நிறுவனம், சீனாவில் அதன் ஆலோசனை வணிகத்தினை மூடத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஊழியர்கள் பாதிப்பு

ஊழியர்கள் பாதிப்பு

இந்த கடன் மதிப்பீட்டு நிறுவனம் அதன் சேவையினை சீனாவில் நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதனால் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மூடீஸ் நிறுவனம் தற்போது சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷென்செனிலும் அலுவலகத்தினை கொண்டுள்ளது.

செலவு குறைப்பு நடவடிக்கை
 

செலவு குறைப்பு நடவடிக்கை

 

தற்போது சீனாவின் மூடீஸ் நிறுவனத்தில் மொத்தம் எத்தனை ஊழியர்கள் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

மூடீஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

மூடீஸ்-ன்  பணி

மூடீஸ்-ன் பணி

இது தங்களது பொருளாதார நடவடிக்கைகளை சீரமைக்கும் பொருட்டு, இத்தகைய நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

மூடீஸ் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் கடன் மதிப்பீடுகள் குறித்த அறிக்கையினை ஆய்வு செய்து வெளியிட்டு வருகின்றது.

சீனாவினை விட்டு வெளியேற திட்டம்

சீனாவினை விட்டு வெளியேற திட்டம்

தற்போது சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பல்வேறு நிறுவனங்களும் சீனாவினை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஏற்கனவே அமெரிக்காவினை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம், சீனாவுக்கு வெளியே தனது உற்பத்தியினை தொடங்கியுள்ளது. தற்போது மற்றொரு நிறுவனமான அமெரிக்காவின் மூடீஸ் நிறுவனம் சீனாவினை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பா குற்றச்சாட்டு

ஐரோப்பா குற்றச்சாட்டு

ஐரோப்பிய நிறுவனத்தின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கணக்கெடுப்பின் படி, 50% மேற்கத்திய நிறுவனங்கள் சீனாவில் வணிகமானது முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட 2021ல் மிகவும் அரசியல்மயமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளன.

கூகுள் சேவையும் நிறுத்தம்

கூகுள் சேவையும் நிறுத்தம்

கடந்த மாதம் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான கூகுள், சீனாவில் கூகுள் டிரான்ஸ்லேட் சேவையை மூடுவதாக அறிவித்தது. இது அங்கு குறைந்த பயன்பாட்டை காரணம் காட்டி சேவையினை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய நிறுவனங்கள்

வெளியேறிய நிறுவனங்கள்

சீனாவில் இருந்து அமேசான், லிங்க்ட், யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் வெளியேறின. இவை அனைத்தும் சீனாவில் இருந்து தங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.

அமெரிக்கா - சீனா பிரச்சனை

அமெரிக்கா - சீனா பிரச்சனை

இது மட்டும் அல்ல, அமெரிக்கா சீனா இடையேயான பனிப்போர் நிலவி வரும் நிலையில், இதனாலும் இனி பிரச்சனை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதனாலேயே பல அமெரிக்க நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளன. பல நிறுவனங்களும் முயற்சி வருகின்றன. இதுவும் அமெரிக்க நிறுவனங்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Moody's plans to shutting consulting business in china

USA-headquartered Moody's plans to shutting its consulting business in China amid a slowdown. It plans to lay off its employees due to this.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X