இந்தியாவில் தொழில் துவங்க விரும்பாத அமெரிக்கர்கள்.. ஏன் இந்த நிலை??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: அமெரிக்கவில் உள்ள நிர்வாகிகள் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் உள்ள கட்டுமான வசதி பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, தங்களுடைய தொழில்களை இந்தியாவில் செய்ய விரும்பவில்லை என்று ஒரு புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

 

உலகளாவிய நிறுவன தொடர்புகள், நிறுவன பங்குதாரர்கள் பங்களிப்பு மற்றும் தொழில் திட்ட அமைப்பு ஆகியவற்றில் முதன்மையான நிறுவனமான APCO என்ற நிறுவனம் மற்றும் அமெரிக்கா இந்தியா வியாபார கூட்டமைப்புடன் (AUSIB) இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மோடி பயணம்

மோடி பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வர்த்தக ரீதியாக அமெரிக்க சென்றுள்ள இந்த நேரத்தில் இத்திகைய ஆய்வின் முடிவுகள் இந்திய தொழில்துறைக்கு எதிராக அமையும். மேலும் நேற்று மோடி அவர்கள் அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

அமெரிக்கா - இந்தியா

அமெரிக்கா - இந்தியா

இருநாட்டு தலைவர்களுமே ராஜதந்திர ரீதியாக தங்களுடைய நிலையில் நிலைப்பாடுடன் இருநாடுகளுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக நட்பை வளர்க்கவும் ஊக்கத்துடன் உள்ளதை இந்த ஆய்வு குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

 கட்டுமான வசதிகள்

கட்டுமான வசதிகள்

'இந்தியாவின் மோசமான கட்டுமான வசதிகளின் காரணமாகவே 52 சதவீத முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஆயினும்இரு நாடுகளுமே முதலீட்டுக்கான இடங்களாகவே தகுதி பெற்றுள்ளன' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

95 சதவீதம்
 

95 சதவீதம்

இந்தியா தன்னுடைய கட்டுமான வசவதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் 95 சதவீத நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதன்மையான இடம் இந்தியா!!

முதன்மையான இடம் இந்தியா!!

பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்த வரையில் இரு நாட்டிலுள்ள நிர்வாகிகளுமே பெரும் வாய்ப்புகளை காண்கிறார்கள் என்றும், அமெரிக்க நிர்வாகிகளில் மிகவும் அதிகமானவர்கள் இந்தியாவை முதன்மையான மூலதனம் செய்ய ஏற்ற இடமாக கருதுகின்றனர்.

சீனா மட்டும் பிரச்சனை இல்லை

சீனா மட்டும் பிரச்சனை இல்லை

'விசா கட்டுப்பாடுகள், சீனாவின் பிடியிலுள்ள சந்தை மற்றும் அவுட்சோர்ஸிங் சாவல்கள் ஆகியவை முக்கியமான பிரச்சனைகளாக எடுத்துக் கொள்ள வேண்டியவை. மேலும் கொள்கை ரீதியாக நீண்ட கால ஸ்திரத்தன்மை வழங்கப்பட்டால் மற்றொரு நாட்டிற்கு செல்லவும் மற்றும் விலை, வரிகளை குறைக்கவும் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More than half of U.S. unlikely to do business in India: study

More than half of executives in the U.S. are less likely to do business in India because of infrastructure issues, according to a new study.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X