ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் இவை தான் இன்றைய இளைய தலைமுறை விரும்பி அணியும் ஆடை. ஆண், பெண் என இருவருக்குமே டி-ஷர்ட்கள் அணிவது பிடித்தமான ஒன்றாக மாறி வரும் சூழலில் உலகின் டாப் 10 டி-ஷர்ட் பிராண்டுகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.கூக்கி (Gucci)

Gucci
1921-ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட குச்சி டி-ஷர்ட் பிராண்டு இன்று உலகின் நம்பர் 1 டி-ஷர்ட் பிராண்டாக உள்ளது. ஒரு குச்சி டி -ஷர்ட்டின் விலை 2000 டாலர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Chanel
உலகின் இரண்டாம் மிகப் பெரிய டி-ஷர்ட் பிராண்டான ஷனேல் 1909-ம் ஆண்டுப் பிரான்ஸில் தொடங்கப்பட்டது. இந்தப் பிராண்டு டி-ஷர்ட்டுகள் 1,000 டாலர் வரை விற்பனை செய்கிறது.

D&G
டால்ஸ் அண்ட் கபானா எனப்படும் டி&ஜி ஒரு சூப்பர் எக்ஸ்பென்சிவ் டி-ஷர்ட் பிராண்டாகும். இங்கு ஒரு டி-ஷர்ட்டின் விலை குறைந்தபட்சம் 500 டாலர் என விற்பனை செய்கின்றனர்.

Prada
1913-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மற்றோரு பிராண்டான ப்ராடாவின் ஆண்டு வருவாய் 3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Armani
1975-ம் ஆண்டு இத்தாலியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அம்ர்மானி ஜீன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் வருவாயினை ஈட்டி வருகிறது. அர்மானி நிறுவனம் ஆடம்பர ஹாண்ட் பேக், பெர்ஃப்யூம் போன்ற பொருட்களையும் சர்வதேச அளவில் விற்பனை செய்கிறது.

Versace
வெர்சாச்சி நிறுவனம் 1978-ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களைக் கவரும் வடிவமைப்பு மற்றும் துணியின் தரம் போன்றவை கூடுதலாகச் சில டார்களை அளித்துக் கூடு இந்தப் பிராண்ட்ட் டி-ஷர்ட்டை வாங்கலாம் எனத் தோன்ற வைக்கும்.

Dior
டியோர் டி-ஷர்ட்கள் நேர்த்தியான, பளபளப்பான என்று மட்டும் இல்லாமல் டிரெண்டியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பொரும் சிறந்த பிராண்டாகும்.

Valentino
வேலெண்டினோ 8வது பிராண்ட் டிஷர்ட் பட்டியலில் 8வது இடத்தினைப் பிடித்துள்ளது. பிராண்டட் டி-ஷர்ட் விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு பிராண்டாகவும் இது உள்ளது.

Guess
கேஷுவல் டி-ஷர்ட்களுக்குப் பேர் போன கெஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 1.5 பில்லியன் டாலராகும்.

Fendi
1925-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட ஃபெண்டி நிறுவனம் 10 பிராண்ட் டி-ஷர்ட் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 1 பில்லியன் டாலர் ஆகும்.