முகேஷ் அம்பானி காட்டில் அடை மழை! 4 மாதத்தில் 44 பில்லியன் டாலர் எகிறிய சொத்து மதிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்கார் என்கிற அடையாளத்துடன் தான் அழைக்கப்பட்டு வருகிறார். சொல்லப் போனால் அவர் எப்போதோ ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆகிவிட்டார்.

கூடிய விரைவில், முகேஷ் அம்பானி, உலகின் டாப் பணக்காரராக வந்தாலும் வருவார் எனச் சொல்லி இருந்தோம்.

அதற்கான முன்னேற்றப் பாதையில் முகேஷ் அம்பானி பயணித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை, அடிக்கடி அவரின் சொத்து மதிப்புக் கணக்குகள், நமக்கு சுட்டி காட்டிக் கொண்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனை

கொரோனா வைரஸ் பிரச்சனை

இந்த 2020-ம் ஆண்டு, புத்தாண்டு கொண்டாட்டத்துடன் தொடங்கவில்லை. மாறாக கொரோனா வைரஸ் என்கிற பிரச்சனை உடன் தான் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்தியாவில் பெரிதாக பேசப்பட்ட போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஏப்ரல் 2020-ல் 36.8 பில்லியன் டாலராக சரிந்தது.

சீறிப் பாய்ந்த சொத்து மதிப்பு

சீறிப் பாய்ந்த சொத்து மதிப்பு

ஆனால் தற்போது, அதாவது 08 ஆகஸ்ட் 2020 ஃபோர்ப்ஸ் கணக்குப் படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 80.4 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. ஆக கடந்த நான்கு மாத காலத்துக்குள் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமாராக 44 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறது.

அசால்டாக ஓவர்டேக் செய்துவிட்டார்

அசால்டாக ஓவர்டேக் செய்துவிட்டார்

இந்த கொரோனா வைரஸ் கலகட்டத்திலேயே, கூகுள் கம்பெனியின் இணை நிறுவனர் லாரி பேஜ், உலகின் தலை சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட், ஸ்டீவ் பால்மர் போன்றவர்களை எல்லாம் அசால்டாக பின்னுக்குத் தள்ளிவிட்டார் முகேஷ் அம்பானி. ஒரு வழியாக உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக உட்கார்ந்தார்.

ஐரோப்பாவின் பெரிய பணக்காரர்

ஐரோப்பாவின் பெரிய பணக்காரர்

தற்போது இதை எல்லாம் விட ஒரு படி மேலே போய், ஐரோப்பிய கண்டத்திலேயே பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்டை (Louis Vuitton என்கிற விலை உயர்ந்த பொருட்களை தயாரித்து வியாபாரம் செய்யும் கம்பெனியின் தலைவர்) பின்னுக்குத் தள்ளி, உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

இன்னும் 3 பேர் தான்

இன்னும் 3 பேர் தான்

ஆக தற்போது முகேஷ் அம்பானிக்கு மேல்
இருப்பவர்கள்,
1. அமேசான் தலைவர் ஜெஃப் பிசாஸ் 187 பில்லியன் டாலர்,
2. மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் தலைவர் பில் கேட்ஸ் 121 பில்லியன் டாலர்,
3. ஃபேஸ்புக் தலைவர் மார்க் சக்கர்பெர்க் 102 பில்லியன் டாலர், ஆகியோர்கள் தான் இருக்கிறார்கள்.
4. முகேஷ் அம்பானி 80.6 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி தான்

ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி தான்

ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் பில்லியனர் இண்டெக்ஸின் டாப் 50 இடங்களில் இடம் பிடித்து இருக்கும் ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி தானாம். முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசீம் ப்ரேம்ஜி 19.4 பில்லியன் டாலருடன் 60-வது இடத்தில் வெகு தொலைவில் இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani 4th richest man in the world surpassed Bernard Arnault

The indian industrialist and business tycoon mukesh ambani has surpassed Bernard Arnault and become 4th richest man in the world.
Story first published: Saturday, August 8, 2020, 15:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X