அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. அமெரிக்கா பொருளாதாரத்திற்கு நல்லதல்ல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாக ஐடி துறையின் மத்தியில் மிக பரப் பரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று ஹெச் 1பி விசா. ஏனெனில் இந்தியாவில் உள்ள பல ஐடி ஊழியர்களின் கனவே அமெரிக்கா சென்று ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பது தான்.

 

ஏனெனில் அங்கு அதிக சம்பளம் மற்றும் இன்னும் பல நன்மைகள் உள்ளன. இதன் காரணமாக இந்திய ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணி புரியவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் காரணமாக அமெரிக்க ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் அதிகம் பேர் இந்தியர்கள் தான். இதனை இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு 85,000 பேருக்கு இந்த ஹெச் 1பி விசா வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களில் 70 சதவீத்ம் பேர் இந்தியர்கள் தான்.

இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு

இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு

ஆக அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையினால் அதிகம் பதிக்கப்படபோவது இந்திய ஐடி ஊழியர்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு இனி இந்தாண்டு இந்த குடியுரிமை அல்லாத இந்த விசா கிடைக்காது. இந்த ஹெச் 1பி விசா என்பது, திறன் வாய்ந்த ஊழியர்களுக்கானது. சொல்லப்போனால் அமெரிக்கா நிறுவனங்களில் உள்ள திறன் மிகுந்த வேலைகளுக்கு, அமெரிக்கர்கள் கிடைக்காத பட்சத்தில் தான், நிறுவனங்கள் மற்ற நாடுகளை நாடுகின்றன.

அமெரிக்கா பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல

அமெரிக்கா பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல

அப்படி திறன் மிகுந்த பணிகளில் பணிபுரிவதில் இந்தியர்கள் மிக அதிகம். பொதுவாக இதனால் இந்திய ஊழியர்களுக்கு அதிகம் பாதிப்பு என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மறுபுறம் இத்தொழில்துறை அமைப்பான நாஸ்காம், இந்த ஹெச் 1பி விசா தடையானது, அமெரிக்க பொருளாதாரத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு
 

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இதனை தற்போது அமல்படுத்தியுள்ள நிலையில், வெளி நாட்டு ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிவரை அமெரிக்காவில் நுழைய தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பிரகடனமானது கொரோனாவினால் நாட்டில் அதிகம் பேர் வேலையிழந்து போராடி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா செல்வதை தடுக்கும்

அமெரிக்கா செல்வதை தடுக்கும்

ஆக அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையினால், வெளி நாட்டினர் அதிகம் அமெரிக்கா வருவதை இது தடுக்கும். குறிப்பாக இதனால் ஐடி துறையினர் வருகை குறையும். மேலும் அவர்கள் கூட வாழ்க்கை துணைவர்களுக்கான ஹெச் 4 விசாவும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இது அவர்களையும் தடுக்கும். ஆக உலகின் முதன்மை பொருளாதார நாடான அமெரிக்காவில் வெளி நாட்டவர்கள் யாரும் வேலைக்காக இந்த ஆண்டு செல்ல முடியாது.

இந்த நடவடிக்கை வேண்டாம்

இந்த நடவடிக்கை வேண்டாம்

இது ஒரு புறம் அமெரிக்கா ஊழியர்களுக்கு பணி வாய்ப்பினை கொடுத்தாலும், மறுபுறம் வெளி நாட்டவர்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணி பரிமாற்றங்களில் செல்வதனையும் தடுக்கும். மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள், மருத்துவ வசதிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் நேரடியாகவும், அவற்றின் சங்கங்கள் மூலமாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் நாஸ்காம் கூறியுள்ளது.

திறமையானவர்களை அணுகுவதை தடுக்கும்

திறமையானவர்களை அணுகுவதை தடுக்கும்

கொரோனா வைரஸ் நெருக்கடியால், USCIS and DOS அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசாக்கள் செயல்பாட்டில் பிரச்சனை எழுந்துள்ளது, தாமதம் எழுந்துள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது ஆயிரக்கணக்கான அமெரிக்க நிறுவனங்கள், திறமையானவர்களை, தங்களது தேவைக்காக அணுகுவதை இது தடுக்கின்றது.

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தீங்கு

அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தீங்கு

ஆக இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் ஜூன்-க்கு பிறகு அங்குள்ள இந்திய பிரஜைகள் பிறகு விசாக்கள் இல்லாததால், அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட அனுமதிக்கபடாது. நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை பணியில் அமர்த்தி இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்திருந்தாலும், இத்துறையில் பல இந்திய திறமையானவர்களை பயன்படுத்துகிறார்கள்.

புதிய சிக்கல்கள் வரும்

புதிய சிக்கல்கள் வரும்

ஆக அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கையால் நிறுவனங்கள் புதிய சிக்கலை சந்திக்கும். உள்ளூரில் திறமைகள் இல்லாவிட்டால், புதிய ஆட்களை பணியமர்த்த வேண்டியிருக்கும், ஆக அப்படி திறன் உள்ளவர்கள் கிடைக்காவிடில் அதிக வேலைகள் தாமதமாகும். அல்லது நிறுவனங்களின் மற்ற நாடுகளில் உள்ள கிளைகளுக்கு மாற்றப்படலாம்.

இந்திய ஊழியர்கள் அதிகம்

இந்திய ஊழியர்கள் அதிகம்

தேசிய வேலையின்மை விகிதம் இருந்த போதிலும் கூட, கணினி நிபுணர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரி 3 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 2.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது அமெரிக்கர்களுக்காக 52,000 வேலைகளை உருவாக்கும் என்றும் அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தொழில் நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரையில், இந்தியா நிறுவனங்களை விட, அதிகம் இந்தியர்களையே நம்பியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

அமெரிக்க தொழிலாளர் புள்ளி விவரப்படி, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு 5,25,000 வேலைகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் இந்திய நிறுவனங்களை விட, அமெரிக்க நிறுவனங்களே ஹெச் 1பி விசாவினை அதிகம் சார்ந்துள்ளன. ஆக இதனால் அதிகம் பாதிக்கபட போவதும் அமெரிக்க நிறுவனங்களே.

அமெரிக்க பொருளாதாரத்திற்கு தான் பிரச்சனை

அமெரிக்க பொருளாதாரத்திற்கு தான் பிரச்சனை

இதற்கிடையில் இந்த அதிரடியான கட்டுப்பாட்டினை 90 நாட்களாக குறைக்க நிர்வாகத்தினை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். கொரோனா தொற்று நோயினால் சரிந்த பொருளாதாரத்தினை மீட்க, அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடியான நடவடிக்கையினால் அமெரிக்க நிறுவனங்கள் தான் அதிகம் பாதிக்கும். ஆக இந்த கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு நீட்டிப்பது என்பது அமெரிக்கா பொருளாதாரத்திற்கு தான் தீங்கு விளைவிக்கும் என்றும் நாஸ்காம் கூறியுள்ளது.

இவர்களுக்கெல்லாம் விலக்கு

இவர்களுக்கெல்லாம் விலக்கு

எனினும் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையில் இருந்து, அமெரிக்காவில் குடியேறியவர்கள், தற்போது விசா வைத்திருப்பவர்கள், உணவு உற்பத்தி தொழில்களில், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 உடன் போராடும் ஆராய்ச்சியாளர்களுக்கு விலக்கு அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nasscom said H 1B visa suspension may affect US economy

Nasscom said suspension of H 1B visa for skilled workers misguided towards US economy.
Story first published: Tuesday, June 23, 2020, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X